கொரோனா பாதிப்பே இல்லாதது போல நடிப்பது யாருக்காக?

தமிழகத்தில் நேற்று [ஜூலை 16] ஆம் தேதி மட்டும் 4549 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டு இருக்கிறது. அதேபோல 69 பேர் கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். ஆனால் ஆரம்பத்தில் இருந்த கட்டுப்பாடு தற்போது எங்கும் இருப்பதாக தெரிவது இல்லை.
கரோனா வைரஸ் சீனாவில் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியிருக்கிறது. சுவாச மண்டலத்தை தாக்கி கடுமையான காய்ச்சலை உண்டாக்கக்கூடிய இந்த புதியவகை வைரஸ் காரணமாக 41 பேர் சீனாவில் பலியாகி உள்ளதாக தெரியவந்துள்ளது. பாதிப்பு இன்னும் கூடும் என அஞ்சப்படுகிறது.

பணம் பணம் என அனைவரும் ஓடிக்கொண்டு இருந்தாலும் கூட பணமா உயிரா எனும் போது உயிரைத்தான் தெரிவு செய்வோம். காரணம், நாம் வாழ்வதும் உழைப்பதும் இந்த உயிரை காத்துக்கொள்வதற்காகத்தான். அப்படிப்பட்ட உயிரை வெளியூருக்கு போனவர்களின் வீட்டில் இருக்கும் நகையை திருடர்கள் திருடுவதைப்போல எளிமையாக திருடிக்கொண்டு போகிறது கொரோனா எனும் கொள்ளை நோய். உலக நாடுகளில் சில கொரோனா நோய் கிருமிக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக சொன்னாலும் கூட பரிசோதனைகள் முழுமைடைந்து அவை நம் ஒவ்வொருவருக்கும் கிடைப்பதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகலாம்.

நாளொரு மேனி புதிய புதிய உச்சத்தை கொரோனா நோய் தொற்று அடைந்துகொண்டு இருக்கிறது. இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்த முழு கட்டுப்பாடு என்பது எண்ணிக்கை பெருவாரியாக அதிகரித்துக்கொண்டு இருக்கக்கூடிய சூழ்நிலையில் தளர்த்தப்பட்டு இருக்கிறது. மாஸ்க் மட்டுமே கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக நம்மிடம் இருக்கக்கூடிய சூலாயுதம் என்ற நிலையில் அதனை மட்டுமே கொண்டு ஆயுதங்கள் பல கொண்ட அசுரனான கொரோனாவிற்கு எதிராக போர் புரியலாம் வாருங்கள் என அரசே அழைப்பதைப்போன்று தான் ஊரடங்கு தளர்வு இருக்கிறது.

இவை அனைத்தும் கொரோனா பாதிப்பே இல்லாதது போல நடிப்பதைப்போன்று இருக்கிறது. யாருக்காக இந்த நடிப்பு?

அச்சமூட்டும் எண்ணிக்கைகள்

கரோனா வைரஸ் சீனாவில் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியிருக்கிறது. சுவாச மண்டலத்தை தாக்கி கடுமையான காய்ச்சலை உண்டாக்கக்கூடிய இந்த புதியவகை வைரஸ் காரணமாக 41 பேர் சீனாவில் பலியாகி உள்ளதாக தெரியவந்துள்ளது. பாதிப்பு இன்னும் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்திய அளவில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையில் இரண்டாம் இடம் பிடித்து இருக்கிறது தமிழ்நாடு. உலக அளவில் 1,56,369 என்ற எண்ணிக்கையுடன் கொலம்பியாவை பின்னுக்குத்தள்ளி 19 ஆம் இடத்தில் இருக்கிறது [இந்தியா அல்ல தமிழ்நாடு என்பதை நினைவில் கொள்ளுங்கள்]. கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை என்பது 2,236 ஆக இருக்கிறது. நேற்று [ஜூலை 16] இல் மட்டும் 69 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள்.

பெரு வெள்ளமோ புயலோ நிலநடுக்கமோ தீவிரவாத செயல்களோ ஏற்பட்டு அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவது கடந்த காலங்களில் நடைபெற்றவை தான். அப்போதெல்லாம் மரண எண்ணிக்கைகளை கேட்கும் போது “அச்சச்சோ” என்பதோடு சோகம் சில நிமிடங்களில் முடிந்து போகும். ஆனால் கொரோனா நோய் தொற்றினால் மரண எண்ணிக்கைகள் அறிவிக்கப்படும் போது நமக்கு தெரிந்த எத்தனை பேர் இந்த எண்ணிக்கையில் அடக்கம் என்பது தெரியாமல் கண்களும் மனமும் ஒரு சேர துக்கத்தால் கலங்கி நிற்கின்றன. 

கொரோனா பாதிப்பே இல்லாதது போல நடிப்பது யாருக்காக?

கரோனா வைரஸ் சீனாவில் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியிருக்கிறது. சுவாச மண்டலத்தை தாக்கி கடுமையான காய்ச்சலை உண்டாக்கக்கூடிய இந்த புதியவகை வைரஸ் காரணமாக 41 பேர் சீனாவில் பலியாகி உள்ளதாக தெரியவந்துள்ளது. பாதிப்பு இன்னும் கூடும் என அஞ்சப்படுகிறது.

ஆரம்பத்தில் மிகவும் கட்டுப்பாட்டோடு செயல்பட்ட அரசு ஊரடங்கை தளர்த்திய பிறகுதான் எண்ணிக்கைகள் பல மடங்கு அதிகரித்தன. ஊரடங்கை தளர்த்தாவிடில் பசியால் உயிரிழப்புகள் ஏற்படும் என்ற விவாதத்தை புறக்கணிக்க முடியாது என்றாலும் கூட இன்னும் சில மாதங்களாவது ஊரடங்கை நீடித்து இருக்கலாம் என்பதே எதார்த்தத்தில் நாம் புரிந்துகொண்ட விசயமாக இருக்கிறது.

சில வாரங்களுக்கு முன்னதாக ஊருக்கு வெகு தொலைவில் இருப்பதாக சொல்லப்பட்ட கொரோனா பாதிப்பு இன்று ஊருக்குள்ளேயே ஏற்பட துவங்கிவிட்டது. ஆனால் பொதுமக்களிடம் அச்ச உணர்வு சிறிதேனும் இருக்கிறதா என்றால் “அனைவரிடத்திலும் இல்லை” என்பதே சரியான பதிலாக இருக்க முடியும். நாளுக்கு நாள் உயிரிழப்புகள் தொடர்கின்றன என்ற செய்தி ஊடகங்களின் வாயிலாக பொதுமக்களை அடைந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால் பாருங்கள் செய்தியை பார்த்துவிட்டு மீன் மார்க்கெட்டில் கூட்டமாக மீனும் நண்டும் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள் நம் மக்கள்.

ஒருபுறம் அரசும் மறுபுறம் மக்களும் கொரோனாவால் தங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதைபோன்று நடித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதையே தற்போதைய நடவெடிக்கைகள் உணர்த்துகின்றன. ஏன் அனைவரும் போலியான இந்த நடிப்பை தற்போது நடித்துக்கொண்டு இருக்கிறார்கள்? இந்த நடிப்பு உயிரையே குடித்துவிடும் அளவுக்கு கொடுமையானதாயிற்றே என்பதை உரக்க கத்தினாலும் யாரும் கேட்கும் மன நிலையில் இல்லை.

எதிரியின் பலத்தை அறியாமல் இருப்பது தோல்விக்கு முதல்படியாக அமைந்துவிடும். கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதுவரைக்கும் மனிதர்களின் உயிரை காப்பாற்றி வைத்துக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. அதற்குள்ளாக பொருளாதாரம் வீழ்ந்துவிடும் என்ற காரணத்திற்காக மக்களின் உயிரை பணயம் வைக்க வேண்டாம். இறுதியில் அனைவருக்கும் உயிரே அவசியமான ஒன்று.

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (ஐஐஎஸ்சி) நடத்திய ஆய்வில் இந்தியாவில் கரோனா பாதிப்பு தற்போதுள்ள நிலவரத்தைவிட மோசமாகச் சென்றால் செப்டம்பர் மாதத்துக்குள் 35 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் இடத்தில் இருக்கும் தமிழகத்தின் எண்ணிக்கையும் கடுமையாக உயர வாய்ப்புள்ளது.

ஆகவே நடிப்பை இன்றோடு முடித்துக்கொள்வோம்.



Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *