விலைக்கு வாங்கப்படும் Fake Followers, Likes, Shares எதற்காக?

இன்றல்ல நேற்றல்ல பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சமூக வலைத்தளங்களான ட்விட்டர் , யூடியூப் ,முக புத்தகம் , இன்ஸ்டாகிராம் போன்ற அனைத்திலும் போலியாக followers , subscribers, likes விலைக்கு வாங்கப்படுவதாக இணைய வல்லுநர்கள் தெரிவித்து வந்தனர் .

மிக பிரபலமான நபர்களால் , நிறுவனங்களால் சமூக வலைதளங்களில் போலியான followers வாங்கும் போக்கு அதிகரித்து வருகின்றது , இது சமூக வலைதளங்களின் வரம்புகளுக்கு உட்படாததாக இருந்தாலும் பலர் தொடர்ந்து செய்து வருகின்றனர் .

அண்மையில் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை மிக பிரபலமான இந்திய அரசியல்வாதிகளின் ட்விட்டர் follower களின் உண்மை தன்மையை twitteraudit.com செயலியின் உதவியோடு ஆராய்ந்து பார்த்தது . அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போலியான followers அதிகம் கொண்டவர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார் , அவரை தொடர்ந்து அமித்சா , சசி தரூர் , பிரதமர் மோடி என வரிசை நீள்கிறது . இதில் உண்மையான followers களின் எண்ணிக்கையை விட போலிகளின் எண்ணிக்கைதான் அதிகமாம் .

 

போலியான followers வாங்குவது எதற்காக ?

 

    பெரும்பாலானவர்கள் இதனை செய்கிறார்கள் என்றால் அதனால் அவர்களுக்கு ஏதேனும் நன்மை இருக்கவேண்டும் அல்லவா ?

சாதரணமாக சமூக வலைதளங்களில் இயங்குபவர்களை ஈர்க்கக்கூடியது எதுவென்று பார்த்தால் ‘millions of followers ” . அதிகப்படியான followers இருக்கும் நபர்களையோ அல்லது நிறுவனங்களையோ சாதாரண நபர்கள் பின்தொடர்வதும் அதில் பகிரப்படும் தகவல்களை படிக்க விரும்புவதுமே காசு கொடுத்தாவது போலியான
followers வாங்கும் அவலத்திற்கு காரணம் .

    இன்று ட்விட்டரில் ஒரு நடிகரோ அல்லது அரசியல்வாதியோ இணைகிறார் என வைத்துக்கொள்வோம் . இணைந்த சில மணி நேரங்களில் 10 லட்சம் followers , 20 லட்சம் followers வந்துவிட்டதாக கூறினால் தான் அவருக்கு மதிப்பே , ஏதோ ஆயிரம் இரண்டாயிரம் பேர் follow செய்கிறார்கள் என்றால் கவனிப்பார்களா , செய்திகளில் வருமா , சாதாரண பயன்பாட்டாளர்கள் அவரை follow செய்ய நினைப்பார்களா?

அண்மையில் கண் சிமிட்டி நடித்த பெண்ணுக்கு லட்சக்கணக்கில் followers வந்தது என்பது செய்திகளில் இடம்பெறும் அளவிற்கு முக்கியதுவம் பெற்றது . அந்த செய்தியை பார்த்தவுடன் எத்தனயோ பேர் அவரது கணக்கை தேடி follow செய்திருப்பார்கள் அல்லவா …அந்த ஈர்ப்பை உண்டாக்கிடவே போலியாக followers வாங்கப்படுகிறார்கள் .

 

போலியான followers கண்டுபிடிப்பது எப்படி ?

 

போலியான followers கண்டுபிடிக்க சரியான வழிமுறைகள் இல்லாதபோதும் சில தகவல்களை சரிபார்த்து அது போலியான கணக்கா என ஆய்வு செய்கிறார்கள் வல்லுநர்கள் .

உதாரணத்திற்கு “description” கூட இல்லாத கணக்குகள்

தொடங்கி பல நாட்கள் ஆகியும் லைக் , comment செய்யாத கணக்குகள்

ஒரு post கூட போடாத கணக்குகள்

ஒரு followers கூட இல்லாத கணக்குகள்

என பல முறைகளில் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவை போலியானவையா என முடிவெடுக்க படுகின்றது .

 

twitteraudit.com செயலியானது ட்விட்டரின் செயலி அல்ல . சுமார் 5000 follower களை சோதனைக்காக எடுத்துக்கொண்டு ஆராய்ந்து முடிவுகளை கூறும் .
மேலும் இது 100 சதவிகிதம் சரியானது என சொல்லிவிட முடியாது . அதேநேரத்தில் முற்றிலும் தவறானது என ஒதுக்கிவிடவும் முடியாது .

சரி ட்விட்டர் இதனை தடுக்க எதுவும் செய்யவில்லையா ?

 

நியூயார்க் டைம்ஸ் Devumi என்னும் நிறுவனம் போலியான லைக்ஸ் , ரீடிவீட் ,followers ஐ மிக பிரபலமான நபர்களுக்கு விற்றதை ஆதாரபூர்வாக ட்விட்டரிடம் கொடுத்து முறையிட்டது . இதனை ஏற்றுக்கொண்டு நடவெடிக்கை எடுத்துள்ளது ட்விட்டர் .

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு மிக பெரிய தலைவலியாக இது மாறியுள்ளது . போலியான கணக்குகள் என கண்டறியப்பட்டவை கூட உண்மையான நபர்களிடம் இருந்து திருடப்பட்ட தகவல் மூலமாக உருவாக்கப்பட்ட கணக்குகளாக இருக்கின்றது .அதுதான் போலியான கணக்குகளை நீக்க பெரும் தடையாக இருக்கின்றது .

போலியான follower , like , share வாங்கிடும்போது அந்த பதிவோ அல்லது அந்த நபர் இடும் பதிவுகளோ முக்கியத்துவம் வாய்ந்ததாக சமூக வலைத்தளங்களால் ஏற்கப்பட்டு அது அதிகாமாக பிறருக்கும் காட்டப்படும் .

Read also this :

ஐனநாயக பேராபத்து – நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கப்போகும் சமூக வலைதளங்கள் ?

சமூக வலைதளங்கள், செய்தி நிறுவனங்களை தாண்டி மக்கள் தங்கள் உணர்வுகளை ஐனநாயக ரீதியாக வெளியிட பயன்பட்டுவரும் இந்த நிலையில் போலியான follower , like , share மூலமாக அதன் மீதான நம்பிக்கையை குறைப்பதாக இருக்கின்றது .

எந்த தொழில்நுட்பம் வந்தாலும் அதனை தவறாக பயன்படுத்தி சம்பாதிக்கும் நபர்களும் இருக்கத்தான் செய்வார்கள் . மக்கள் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும் .

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *