புயல் பெயர் எப்படி வைக்கிறார்கள்? சுவராஷ்யமான தகவல்
புயல் வரும்போது அச்சம் வருகிறதோ இல்லையோ, புயலுக்கு வைக்கப்படும் பெயர் மீது கவனம் வந்துவிடுகிறது. தற்போது வந்திருக்கக்கூடிய புயலுக்கு ‘நிவர்’ என்று பெயர் வைத்திருக்கக்கூடிய சூழலில் புயலுக்கு யார் பெயர் வைக்கிறார்கள் என்ற கேள்வி இயற்கையே.
புயல்கள் குறித்த குழப்பங்களை தீர்க்கவும் எளிதாக நடவெடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒவ்வொரு புயலுக்கும் தனித்துவமான பெயர்கள் வைக்கப்படுகின்றன. இப்படி புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கத்தை முதன் முதலாக ஆஸ்திரேலியா தான் கொண்டு வந்தது. அதனை அடுத்து அமெரிக்கா இம்முறையை கொண்டுவந்தது. இந்தமுறை நல்ல பயனை அளித்தபடியால் மண்டல வாரியாக இருக்கும் நாடுகள் தங்கள் எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் ஏற்படும் புயல்களுக்கு தனித்தனியே பெயர்களை வைக்க ஆரம்பித்தன.
இந்தியாவை பொறுத்தவரைக்கும், இந்திய பெருங்கடல் பகுதியில் இருக்கும் வங்கக்கடல், அரபிக்கடல் உள்ளிட்டவற்றில் ஏற்படும் புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை துவங்கியது. இது 2004 ஆம் ஆண்டில் தான் துவங்கியது. இந்திய வானிலை மையமானது இந்தியா மட்டுமல்லாது வங்கதேசம், பாகிஸ்தான், மாலத்தீவு, மியான்மர், ஓமன், தாய்லாந்து மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் வானிலை செய்திகளை வழங்கி வருகிறது. ஆகவே இந்த நாடுகள் உட்பட 13 நாடுகள் இணைந்து தான் குறிப்பிட்ட கடல் பகுதியில் ஏற்படும் புயல்களுக்கு பெயர்களை வைக்கின்றன.
புயல்களுக்கு பெயர் வைக்க சில வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன,
புயலுக்கு வைக்கப்படும் பெயர் யாரையும் புண்படுத்தும் விதத்தில் இருக்கக்கூடாது
புயலின் பெயர் அச்சமூட்டுவதாக இருக்கக்கூடாது
எளிதில் பயன்படுத்தும் விதத்தில் சிறியதாக இருக்க வேண்டும்
ஒரு பெயரை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்
IMD issues new list of Names of Tropical Cyclones over north Indian Ocean. The current list has a total of 169 names including 13 names each from 13 WMO/ESCAP member countries. Detailed Press Release available at https://t.co/dArV0Ug8nh and https://t.co/wRl94BzRXr pic.twitter.com/ge0oVz4riD
— India Meteorological Department (@Indiametdept) April 28, 2020
மேற்கூறிய அடிப்படை விதிகளுடன் அனைத்து நாடுகளும் இணைந்து 64 பெயர்களை முன்பு பட்டியலிட்டன. இந்த 64 பெயர்கள் கொண்ட பட்டியலில் இறுதி இடத்தில் இருந்த பெயர் ‘அம்பன்’. ஏற்கனவே இந்தப்பெயர் வைக்கப்பட்டு விட்டது.
இதனை அடுத்து இந்த 13 நாடுகள் அனைத்தும் இணைந்து ஒரு நாட்டுக்கு 13 பெயர் என 169 புயல் பெயர் அடங்கிய பட்டியலை தயாரித்து வெளியிட்டன. இந்தப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது ‘Nisarga’ [நிசர்கா]. ஜூன் மாதம் 2020 இல் மஹாராஷ்டிராவை தாக்கிய பெரும் புயலுக்கு இந்தப்பெயர் வைக்கப்பட்டது. இந்தப்பெயரை தேர்வு செய்தது வங்கதேசம்.
இதனை அடுத்து பட்டியலில் இருக்கும் பெயர் கதி [Gati]. இந்தப்பெயரை இந்தியா தேர்வு செய்தது. நவம்பர் மாதம் 2020 இல் சோமாலியாவில் ஏற்பட்ட பெரும் புயலுக்கு இந்தப்பெயர் வைக்கப்பட்டது.
தற்போது இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் வீசக்கூடிய ‘நிவர்’ [Nivar] புயலுக்கான பெயரை ஈரான் நாடு தேர்வு செய்தது. அதற்கு அடுத்து வரக்கூடிய புயலுக்கு மாலத்தீவு நாடு தேர்வு செய்துள்ள புரேவி என்ற பெயர் வைக்கப்படும்.
இப்படித்தான் புயல்களுக்கு பெயர்கள் வைக்கப்படுகின்றன. புயல் எப்போது வருமென தெரியாது ஆகவே தான் ஏற்கனவே பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. புயல் ஏற்படும் போது தாமதமின்றி பட்டியலில் அடுத்த இடத்தில் இருக்கும் பெயர் புயலுக்கு வைக்கப்படும்.
இந்தியா தேர்வு செய்துள்ள புயல் பெயர் : முரசு, நீர், கதி, தேஜ், ஆக், வயோம், ஜார், புரோபஹோ, பிரபஞ்சன், குர்னி, அம்புட், ஜலாதி மற்றும் வேகா ஆகியவை இடம்பெற்றுள்ளன.
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!