WhatsApp Rejected Govt Request on Tracing orgin of message | அரசின் கோரிக்கையை நிராகரித்த வாட்ஸ்ஆப்
நாம் பயன்படுத்துகின்ற WhatsApp மிகவும் பாதுகாப்பானது . எவ்வளவு பாதுகாப்பனது என தெரிந்துகொள்ள கிளிக் செய்திடுங்கள் .ஆனால் தற்போது Message முதன் முதலாக யாரிடமிருந்து பகிரப்படுகின்றது என்பதனை அறிந்துகொள்ளும் விதமாக WhatsApp இல் மாற்றங்களை செய்திடுமாறு இந்திய அரசு கோரிக்கை விடுத்தது, கோரிக்கையை நிராகரித்துவிட்டது WhatsApp நிறுவனம் . இதற்கு முன்னதாகவும் பலமுறை இந்திய அரசாங்கத்திடம் பேசியுள்ளது WhatsApp . ஒருவேளை WhatsApp இந்திய அரசினுடைய கோரிக்கையை நிராகரிக்கின்ற பட்சத்தில் WhatsApp இந்தியாவில் தடைசெய்யப்படுமா என்கின்ற அளவிற்கு சென்றது இப்பிரச்சனை .[sg_popup id=”3271″ event=”inherit”][/sg_popup]
சமீப காலங்களில் WhatsApp மூலமாக பரப்பப்படும் வதந்திகளின் காரணமாக பல்வேறு பிரச்சனைகள் நடைபெறுகின்றன . குறிப்பாக குழந்தைக்கடத்தல் தொடர்பாக பகிரப்பட்ட தகவலினால் பல இடங்களில் நடைபெற்ற வன்முறை தாக்குதலில் சிலர் கொல்லவும் பட்டனர் . தீவிரவாதிகளும் தகவல்களை இதன் மூலமாக அனுப்பிக்கொள்வதால் கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கின்றது இந்திய உளவுப்பிரிவு .
இதுபோன்ற காரணங்களினால் யார் முதலில் செய்திகளை பகிர்வது என்பதனை கண்டறிய ஏதுவான வழிமுறைகளோடு வருமாறு WhatsApp நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டிஸ் அனுப்பியது .
ஆனால் WhatsApp நிறுவனம் இந்திய அரசின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது . யார் மெசேஜ் அனுப்புகிறார்கள் என்பதனை கண்காணிப்பது மிகவும் தவறானது , அதனை தவறாக பயன்படுத்துவதற்கு வாய்ப்பு மிக அதிகம் . மேலும் எங்களுடைய end to end encryption வசதிக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் . பயனாளர்களின் பிரைவசி தான் WhatsApp நிறுவனத்திற்கு அடித்தளமே . தனிநபர்கள் அனுப்பிடும் மெசேஜ்களை படிக்கும் வண்ணம் WhatsApp அமைக்கப்படவில்லை , அதனை தெளிவாக இல் குறிப்பிட்டுள்ளோம் என தெரிவித்தது WhatsApp.
WhatsApp call வசதியினை பயன்படுத்தி எல்லைக்கு அப்பால் இருந்தும் தகவல்களை பெறுகிறோம் என கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளின் விசாரனையில் தெரியவந்துள்ளது . இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது . மேலும் அவ்வப்போது சமூகத்தில் குழப்பங்களை ஏற்படுத்திடும் விதமாக பல செய்திகள் திட்டமிட்டே பரப்பிவிடப்படுகிறது .
அதற்காக ஒட்டுமொத்த மக்களின் உரையாடல்களையும் மெசேஜ்களையும் படிக்கலாமா என்றால் அது மிகப்பெரிய பிரச்னைகளுக்கே வழிவகுக்கும் .
தனிமனித சுதந்திரத்திற்கு மிகப்பெரிய சவாலாக அது அமையும் . மறுபக்கம் பாதுகாப்பு அம்சங்களையும் நாம் பார்க்கவேண்டி இருக்கின்றது .
இந்த சிக்கலான பிரச்சனையில் என்ன நடக்க போகிறதென்பது கவனிக்கப்படவேண்டிய விசயம் .
பாமரன் கருத்து