திடீரென சூரியன் காணாமல் போனால் என்னாகும்? | What would happen if sun disappeared suddenly?

   

காலத்தின் அடிப்படையான இரவு பகல் இரண்டிற்கும் காரணம் சூரியன். அதிகாலையில் எழும் ஒவ்வொருவரும் கண்களை துடைத்துக்கொண்டு ஜன்னனில் தேடுவது சூரியனைத்தான். அப்படி ஒருநாள் ஜன்னலில் பார்க்கும் போது சூரியனை காணவில்லை எனில் என்ன செய்வீர்கள்? சிலர் இன்னும் பொழுது விடியவில்லை என நினைத்து கடிகாரத்தை தேடலாம், எப்போதும் விடியும் நேரம் வந்துவிட்டால் தாமதாக வரலாம் என நினைத்துக்கொண்டு மீண்டும் படுக்கைக்கு செல்லலாம்.

 

சூரிய உதயத்தை பார்க்கும் காதலர்கள்
சூரிய உதயத்தை பார்க்கும் காதலர்கள்

 

ஆனால் சூரியன் ஏதேனும் இயற்கை காரணத்தால் காணாமல் போயிருந்தால் என்ன நடக்கும்? இதுவரை இப்படி ஒன்று நடக்கவில்லை ஆகையால் என்ன நடக்கும் என்பதனை மிகச்சரியாக கூற முடியாது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால் நம்மிடம் இருக்கும் அறிவியல் கோட்பாடுகளின்படி மிகப்பெரிய மாற்றங்கள் நடைபெறலாம் என அனுமானித்து இருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றினை தான் நாம் பார்க்க இருக்கிறோம்.

 

கோள்கள் சுற்றுவதை நிறுத்திவிடும்

 

அண்டத்தில் இருக்கின்ற ஒவ்வொன்றுமே நேர்கோட்டில் மிக வேகமாக பயணிக்கும். உதாரணத்திற்கு வால்நட்சத்திரங்களை கூறலாம். பூமி உள்ளிட்ட ஒன்பது கிரகங்களும் சூரியனை சுற்றிவருவதற்கு முக்கிய காரணம், அதிக நிறை கொண்ட சூரியனின் ஈர்ப்பு விசை தான்.

 

அதிக நிறை கொண்ட பொருள், நிறை குறைவான பொருளை ஈர்க்கும் .

 

பூமி உள்ளிட்ட கோள்கள் நேர் கோட்டில் செல்ல முயற்சிக்கும் போது அவற்றினை விட பல மடங்கு நிறை கொண்ட சூரியனால் ஈர்க்கப்பட்டு ஈர்ப்பு – விலக்கு விசையின் காரணமாக குறிப்பிட்ட சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவருகின்றன . ஒருவேளை சூரியன் காணாமல் போய்விட்டால் கோள்கள் வட்டப்பாதையில் சுற்றுவதை நிறுத்திவிட்டு அது அது அதன் போக்கில் மிக வேகமாக பயணிக்க ஆரம்பித்துவிடும் .

 

உயிரினங்கள் வாழ முடியுமா ?

 

மற்ற கிரகங்களில் வாழ முடியாத உயிரினங்கள் பூமியில் உயிர்வாழ்வதற்கு காரணம் சூரியனுக்கும் பூமிக்கு இருக்கின்ற சரியான இடைவெளி தான் . அருகில் இருந்திருந்தால் வெப்பநிலை அதிகமாகியிருக்கலாம் தொலைவில் இருந்திருந்தால் குளிர்ச்சி அதிகமாகியிருக்கலாம் . இந்த இரண்டும் அல்லாமல் சரியான இடைவெளி இருப்பதனால் உயிர்வாழ ஏற்ற மிதமான வெப்பநிலையோடு வாழுகிறோம் .

 

சூரியன் இல்லாவிட்டால் மாறிவிடும் பூமி
சூரியன் இல்லாவிட்டால் மாறிவிடும் பூமி

 

சூரியன் காணாமல் போய்விட்டால் பூமியின் வெப்பநிலை படிப்படியாக குறைந்துகொண்டே வரும் சில நாட்களில் மைனஸ்களில் வெப்பநிலை சென்றுவிடும் . கடல் பரப்பு முழுவதுமாக உறைந்துவிடும் . இப்படிப்பட்ட சூழலில் உயிரினங்களால் உயிர்வாழ இயலாது அல்லது மிகக்கடினம் .

 

அடுத்தது தாவரங்கள் அனைத்துமே உயிர்வாழ சூரிய சக்தி அவசியம் . அது கிடைக்காவிட்டால் தாவரங்கள் அனைத்தும் அழிந்துவிடும் . மற்ற உயிரினங்களின் உணவு முற்றிலும் தாவரங்களையே சார்ந்திருப்பதனால் அவையும் அழிந்துவிடும்

 

நிலவு உள்ளிட்ட நட்சத்திரங்களை காண முடியுமா ?

 

நிச்சயமாக முடியாது , நிலவு உள்ளிட்ட அனைத்திற்குமே தானாக ஒளிர்கின்ற ஆற்றல் கிடையாது . சூரியனில் இருந்து வருகின்ற ஒளியினை பிரதிபலிப்பதனால் தான் கிரகங்களும் நட்சத்திரங்களும் நம் கண்களுக்கு புலப்படுகின்றன .

 

சூரியன் காணாமல் போகும் பட்சத்தில் வானில் நிலவு உள்ளிட்ட எவற்றையும் நம் கண்களால் பார்க்க இயலாது . சூரியனில் இருந்து வரும் ஒளியானது கிட்டதட்ட 8 நிமிடம் 30 நிமிடங்களுக்கு பிறகே பூமியை வந்தடைகிறது . ஆகவே சூரியன் காணாமல் போன உடனே இந்த மாற்றங்களை நம்மால் உணர இயலாது   . 9 நிமிடங்களுக்கு பிறகுதான் நமக்கே தெரியும் .

 

பாமரன் கருத்து

 

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *