நேர்மையானவர்களை கோமாளிகளாக பார்ப்பதை எப்போது நிறுத்த போகிறோம் ?

பகுதி – 1
சிலர் செய்யும் விசயங்கள் நேர்மையானதாக  சட்டப்படி சரியானதாக இருக்கும் . ஆனால் அப்படி நடந்துகொள்பவர்களை  “பிழைக்க தெரியாதவனாகவும்” “கோமாளிகளாகவும் ” “ஏமாளிகளாகவும் ” பார்க்கின்ற மனநிலைக்கு நாம் வந்துவிட்டோம் .அனைவரும் ஆடையில்லாமல்  திரியும்போது ஒருவன் மட்டும் ஆடையோடு இருந்தால் அவனே விசித்திரமானவன் , கிறுக்கன் எனும் உலகமிது .

இது சரியானதா ? வாருங்கள் சில கோமாளிகளைகளை , ஏமாளிகளை , பிழைக்க தெரியாதவர்களை சந்திப்போம் .

“ஹெல்மெட் ” அணிந்தால் நீ கோமாளி :

ஆம் இதற்கு உதாரணமாக வேறெங்கும் ஆட்களை தேடிச்செல்லவேண்டிய அவசியமில்லை . எனது ஊரில் சில மாதங்களுக்கு முன்பாக ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக போலீசாரிடம் பிடிபட்டு அபராதம் கட்டியிருக்கிறேன் .

அதனால் இன்றும் நான் செல்லும் போது ஹெல்மெட் அணிந்தே செல்கிறேன் . அப்போது கெடுபுடியாக இருந்த போலீசார் இப்போது கண்டுகொள்வதில்லை (மாச கடைசியில் இருப்பார்களோ என்னவோ ) . இருந்தாலும் எதற்காக அவர்களிடம் நின்று பதில் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும் என்று ஹெல்மெட் அணிவதை தொடர்கிறேன் .
அவ்வாறு அணிந்து செல்லும்போது வழக்கத்திற்கு மாறாக நான் எதையோ செய்துவிட்டதைப்போல பார்ப்பவர்கள் எனது ஊரிலே இருப்பவர்கள் . சிலர் சிரிக்கவும் செய்வார்கள் . சிலர் கேட்கவும் செய்வார்கள் “எதுக்குடா ஹெல்மெட்,போலீஸ் இப்போது பிடிப்பதில்லையே ” என்று  .
பிறகு நகரில் இருப்பவர்கள் ,  நண்பர்கள் என அனைவரும் இதே கேள்வியை, சிரிப்பை உதிர்ப்பார்கள் . நமக்கே நாமும் செய்தது தவறாக இருக்குமா என்கிற அளவுக்கு சென்றுவிடும் .
இது எனக்கு மட்டுமல்ல ஹெல்மெட் அணியும் எத்தனயோ பேருக்கு இது நிகழும் .
உங்களிடம் நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்போலீசார் கெடுபுடியாக இருக்கும்போது அணிந்துவிட்டு இப்போது நிறுத்திய நீங்கள் , தொடர்ந்து அணிபவர்களை கேள்வி கேட்கலாமா ?

விசித்திரமாக பார்க்கலாமா ? 
பார்க்க கூடாது . அது தான் தவறானது . மாற்றிக்கொள்ளவேண்டியவர்கள் நீங்களே .

லஞ்சம் வாங்காத கணவனை பிழைக்க தெரியாதவன் என மனைவியே கூறும் அவலம் – அடுத்த பதிவில்

நன்றி

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *