What is Nipah virus, Symptoms, Prevention? | நிபா வைரஸ் : வராமல் தடுப்பது, அறிகுறிகள், குணப்படுத்துவது எப்படி?
What is Nipah Virus (NiV) Infection :
[embedyt]https://youtube.com/watch?feature=youtu.be&v=Eg-I_zc3_OY[/embedyt]
WHO (world health organisation) கூற்றுப்படி விரைவாக பரவக்கூடிய, குறிப்பாக மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பரவக்கூடிய வைரஸ் தான் இந்த நிபா வைரஸ். இந்த வைரஸ் உற்பத்தியானது இடம் பழந்திண்ணி வௌவாக்கள் (fruit bats) மூலமாகத்தான்.
இந்த வைரஸின் முதல் பாதிப்பு 1998 ஆம் ஆண்டு மலேசியாவில் நடந்தது. இதில் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். மலேசியாவில் இந்த வைரஸ் தொற்று பன்றிகளின் மூலமாக நடந்ததாக WHO தனது அறிக்கையில் வெளியிட்டு இருந்தது. 2001 ஆம் ஆண்டு இந்தியாவின் மேற்கு வங்கத்தில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த வைரஸ் தொற்று வௌவால்கள் மூலமாக ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
2001 இல் திடீரென பல வங்கதேச மக்கள் இந்த நிபா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதற்க்கு காரணம் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட வௌவால்களினால் பாதிக்கப்பட்ட பனைமர கல்லை குடித்ததனால் மனிதர்களுக்கு இந்த பாதிப்பு வந்ததாக கூறப்பட்டது.
மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கும் இந்த நிபா வைரஸ் பரவும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நிபா (Nipah) வைரஸ் தாக்குதல் எப்படி ஏற்படுகிறது ?
நிபா வைரஸ் தாக்கிய பன்றியையோ அல்லது வேறு ஏதேனும் உயிரினத்தையோ தொடுவது போன்ற நேரடியான தொடர்பினை வைத்துக்கொள்வதாலும், வைரஸால் பாதிக்கப்பட்ட உயிரினங்கள் உண்டு மிச்சம் வைத்த பழங்களையோ அதாவது வௌவால்கள் உண்டு வைத்த பழங்களை உண்ணுவதாலோ அல்லது இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபருடன் நேரடி தொடர்பு வைத்திருந்தாலும் நிபா வைரஸ் தொற்று ஏற்படுகிறது.
Nipah virus Symptoms :
நோய் அறிகுறிகள் :
இந்த வைரஸின் வளர்ச்சி காலம் 5 முதல் 14 நாட்கள். ஆகவே வைரஸ் வளர்ச்சியடைந்த பிறகு உங்களது உடலில் அதற்க்கான அறிகுறிகள் ஏற்படும்.
- காய்ச்சல், தலைவலி, மயக்கம், குமட்டல் ஏற்படும்
- சிலருக்கு மூச்சு அடைத்தல், வயிற்று வலி, வாந்தி, சோர்வடைதல் மற்றும் பார்வை மங்குதல் போன்றவை ஏற்படும்.
- இந்த அறிகுறிகள் ஏற்பட்ட இரண்டு நாட்களில் பாதிக்கப்பட்டவர் கோமா நிலைக்கு செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது
- மிக எளிமையாக விலங்குகள் மூலமாகவும் மனிதர்கள் மூலமாகவும் பழங்கள் தண்ணீர் மூலமாகவும் இந்த வைரஸ் பரவுவதால் போதிய முன்னெச்சரிக்கையுடன் இருப்பதே இந்த நோயிலிருந்து பாதுகாத்து கொள்ள சிறந்த வழி.
How to Prevent Nipah virus ?
பாதுகாத்து கொள்வது எப்படி ?
- வைரஸ் தாக்கிய நபர்களுடன் நெருங்கி இருப்பதை தவிர்க்க வேண்டும்
- வைரஸ் தாக்கிய விலங்குகளுடன் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது
- வௌவால்கள் தின்றுவிட்டு வைத்த பழங்களை உண்ணுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்
- ஆழ்கிணறு, நீர்குட்டை போன்ற வவ்வால்கள் இருக்கும் இடங்களில் இருந்து வரும் நீரை பருகுதல் கூடாது.
- மாஸ்க் அணிதல், கைகளில் கையுறை அணிதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்
- கழிவறைகளை, வீட்டிற்கு அருகில் உள்ள இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் நல்லது
- நிபா வைரஸ் பாதிப்பால் ஒருவர் இறந்துவிட்டால் அந்த பிணத்தை அப்புறப்படுத்துபவர் கண்டிப்பாக மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருத்தல் அவசியம்.
- இறந்தவர் உடலை சொந்தக்காரர்கள் தொடுவதோ முத்தம் முகத்தினில் முத்தம் கொடுத்து அழுவதோ கூடாது.
- இந்த நிபா வைரஸை அழிக்க இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகையால் நோய் வராமல் பாதுகாப்பாக இருப்பதே இந்த தருணத்தில் சிறந்தது.
- வைரஸ் பாதிப்பிற்க்கான அறிகுறிகள் உங்களுக்கு தெரிந்தால் உடனடியாக அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு உடனடியாக செல்ல வேண்டும்.
- உங்கள் பகுதியில் எவரேனும் இந்த அறுகுறியோடு இறந்திருந்தாலும் உடனடியாக அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். இல்லையெனில் இறந்தவரின் வாயிலாக உங்கள் பகுதிக்கே அந்த வைரஸ் பரவலாம்.
தமிழகத்திற்கு இதுவரை இதன் பாதிப்பு வரவில்லையென்றாலும் பாதுகாப்பு வழிமுறைகளை தெரிந்துகொள்வது பயனளிக்கும் .
பாதுகாப்பாக இருந்திடுவோம் .
பாமரன் கருத்து
Pingback:Nurse Lini : Nipah வைரசால் இறந்த நர்ஸ் லினி : நினைவிலே கொள்ள வேண்டிய கேரள சகோதரியின் தியாகம் – பாமரன் கரு