அறிவியல் துறையில் தற்போது முன்னனி கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இருப்பது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தான் (Artificial Intelligence) . ஆம் அதாவது தன்னிடம் இருக்கக்கூடிய தரவுகள் (Data), பெறும் அனுபவங்கள் (Future Experience) அனைத்தையும் வைத்துக்கொண்டு இயந்திரம் தானாகவே முடிவெடுக்க கூடிய செயல்பாடுதான் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence).
உதாரணத்திற்கு பிறந்து வளரும் குழந்தை தீயை தொட்டால் சுடும் என்பதனை எவ்வாறு தெரிந்துகொண்டு தொடாமல் தவிர்க்கிறது ? ஒன்று எங்காவது படித்திருக்க வேண்டும் அல்லது யாராவது சொல்லியிருக்க வேண்டும் அல்லது ஒருமுறை தீ சுட்ட அனுபவத்தை பெற்று இருக்க வேண்டும். அப்போது அந்த குழந்தை அடுத்தமுறை தீயை தொடக்கூடாது என்கிற முடிவை தானாகவே எடுக்கிறது அல்லவா அதனை போன்றே ஒரு முடிவை யாருடைய கட்டளையும் தூண்டுதலும் இல்லாமல் தன்னிடமுள்ள தரவுகளின் அடிப்படையில், பெறும் அனுபவங்களின் அடிப்படையில் முடிவெடுக்கும் அறிவியலின் ஆகப்பெரும் கண்டுபிடிப்புதான் art
மனிதனுக்கு மூளை இருக்கின்றது , உள்ளே நரம்பு இருக்கின்றது , நியூரான்ஸ் இருக்கின்றது . இயந்திரத்திற்கு என்ன இருக்கிறது ? எப்படி கற்றுக்கொள்கிறது ?
சபாஷ் சரியான கேள்வி , நீங்கள் நினைப்பது போன்று அத்தனை இயந்திரங்களும் தானாக கற்றுக்கொள்வது கிடையாது .
அப்படியானால் ஒரு இயந்திரம் எவ்வாறு கற்றுக்கொள்கின்றது ?
How machine learning works?
தானாகவே கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு இயந்திரமும் பின்வரும் மூன்று முக்கிய பகுதிகளை கொண்டிருக்கும் ,
Model
Parameters
Learner
Model :
ஒரு இயந்திரம் ஆரம்பத்திலேயே தானாக முடிவுகளை எடுக்காது . முன்னதாக மனிதர்களின் மூலமாக தரவுகள் கொடுக்கப்படவேண்டும் .
உதாரணத்திற்கு சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்கு குறைந்தது 90 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் 4 மணி 30 நிமிடத்தில் பாதுகாப்பாக செல்லலாம் என கூறிட வேண்டும் .
உதாரணத்திற்கு…
Chennai to Viluppuram : 2 hours
Viluppuram to Perambalur : 1.30 hours
Perambalur to Trichy : 1 hour
தற்போது இயந்திரம் தானாகவே ஒரு கணக்கினை மேற்கொண்டு சில முடிவுகளை எடுக்கும் .
Learning : தரவுகளின் மூலமாக முடிவுகளை மாற்றுதல்
ஏற்கனவே கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் இயந்திரத்தின் முடிவு இருக்கும் , ஆனால் அது துல்லியமானதாக இருக்காது .
இந்த படிநிலையில் சென்னையிலிருந்து திருச்சி சென்றவர்களின் வேகம் மற்றும் கால அளவுகள் தொடர்ச்சியாக இயந்திரத்திடம் Input ஆக கொடுக்கப்படும் .
ஒவ்வொரு தரவுகளையும் ஆராய்ந்து அதற்கேற்ப தன்னுடய முடிவுகளை சரியான முடிவை நோக்கி மாற்றிக்கொண்டே இருக்கும் . புரியும்படி சொல்லவேண்டும் எனில் இரண்டு மூன்றுமுறை பயணித்தால் நாமே கணித்து கூறுகிறோம் அல்லவா அதனை போலவே இயந்திரமும் கணித்துக்கூறும் .
எவ்வளவுக்கு எவ்வளவு தரவுகளை நாம் கொடுக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு முடிகளில் துல்லியத்தன்மை அதிகரித்துக்கொண்டே போகும் .
Machine Learning எவ்வளவு ஆபத்தானது ?
எந்தவொரு கண்டுபிடிப்பிலும் நன்மையும் இருக்கும் தீமையும் இருக்கும் . இயந்திரங்கள் படிப்பதனால் ஏகப்பட்ட நன்மைகள் இருந்தாலும் மிகப்பெரிய ஆபத்துக்களும் இருக்கவும் செய்கின்றன .உதாரணத்திற்கு ரஜினி நடித்த எந்திரன் திரைப்படத்தில் ரோபோ சுயமாக சிந்திக்கும்போது வருகின்ற ஆபத்துக்களை கண்டிருப்போம் . அதனைபோலவே நிகழ்காலத்திலும் நடைபெற வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன .
இயந்திரங்கள் மனிதனின் கட்டுப்பாட்டில் இருக்கின்றவரை எந்தவொரு பிரச்சனையும் ஏற்படவாய்ப்பில்லை . ஆனால் எவரேனும் கண்டுபிடிப்புகளை தவறாக பயன்படுத்தி மனிதனின் கட்டுப்பாடின்றி சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் இயந்திரங்களை உருவாக்கினால் மிகப்பெரிய ஆபத்தானதாக முடியும் என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை .
பாமரன் கருத்து
Share with your friends !