What is GPS? How GPS works? Why GPS Free? | Tamil | GPS என்றால் என்ன ? GPS எவ்வாறு வேலை செய்கின்றது ?

நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற Google Map , Car Booking App like OLA UBER , Security Devices, Driverless car ஆகியவை அனைத்துமே GPS தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே செயல்படுகிறது.

 

மொபைலில் GPS
மொபைலில் GPS

 

நம்அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்ற GPS தொழில்நுட்பம் எவ்வாறு வேலை செய்கின்றது ? மக்களுக்கு இலவசமாக கிடைக்க காரணம் என்ன ? என்பதனை அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம் .

 

GPS என்றால் என்ன ?

 

GPS என்பதன் ஆங்கில விளக்கம் Global positioning system. அதாவது பூமியில் நாம் எங்கு இருக்கின்றோம் என்பதனை அறிந்துகொள்வதற்கு உதவுகின்ற தொழில்நுட்பம் . இந்த GPS வசதியினை கொண்டுதான் நாம் கூகுளின் மேப் உள்ளிட்டவற்றினை பயன்படுத்துகின்றோம் .

 

GPS எவ்வாறு வேலை செய்கிறது ?

 

GPS தொழில்நுட்பமானது மூன்று முக்கிய பகுதிகளை கொண்டு இயங்குகிறது .

 

  • செயற்கைக்கோள்கள்

 

  • பூமியில் இருக்கும் நிலையங்கள்

 

  • மொபைல் உள்ளிட்டவற்றில் இருக்கக்கூடிய GPS கருவி

 

உங்களது இருப்பிடத்தை துல்லியமாக அறிந்துகொள்ள 30 செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி விண்வெளியில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.  நீங்கள் பூமியின் எந்தப்பகுதியில் இருந்தாலும் உங்களை குறைந்தபட்சம் 3 செயற்கைகோள்களாவது கண்காணிக்கும் விதமாக குறிப்பிட்ட இடைவெளியில் அவை பூமியை சுற்றிலும் நிறுத்தப்பட்டு இருகின்றன .

 

இப்போது நீங்கள் GPS தொழில்நுட்பத்தினை பயன்படுத்துகிறீர்கள் என வைத்துக்கொள்வோம் , விண்வெளியில் இருக்கின்ற செயற்கைகோள்கள் உங்களது GPS கருவியினை எங்கு இருகின்றது என கண்காணிக்கும் .குறைந்தபட்சம் மூன்று செயற்கைகோள்களின் தரவுகள் ஒன்றிணைக்கப்பட்டு மிகவும் துல்லியமாக நீங்கள் இருக்கின்ற இடத்தின்  தகவலை உங்களுக்கு அனுப்பிடும் . பூமியில் இருக்கின்ற Base Station இன் வேலை செயற்கைக்கோள் அந்த குறிபிட்ட நேரத்தில் அந்த குறிப்பிட்ட இடத்தில்தான் விண்வெளியில் இருக்கின்றதா என்பதனை சரிபார்த்துக்கொள்ளவே .

 

துல்லியமாக இடத்தினை அறியும் GPS முறை
துல்லியமாக இடத்தினை அறியும் GPS முறை

 

உதாரணத்திற்கு இந்த புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள மூன்று வட்டங்களும் மூன்று செயற்கைகோள்கள் உங்களின் இருப்பிடமாக தந்த தகவல்கள் என வைத்துக்கொள்வோம் . துல்லியத்தன்மையை  அதிகரிக்கவே குறைந்தபட்சம் மூன்று செயற்கைகோள்களின் தரவுகளாவது எடுத்துக்கொள்ளப்படுகிறது . மூன்று செயற்கைகோள்களின் தரவுகள் ஒன்றினையும் புள்ளியே நாம் இருக்கின்ற இடம் .

 

GPS துல்லியமாக இருப்பது எப்படி ?

 

GPS கருவி செயற்கைக்கோள்கள் உதவியுடன்தான் இயங்குகின்றன என்றாலும் எப்படி துல்லியமாக இருக்கின்றது என்பது மிகப்பெரிய கேள்விதான் .

 

துல்லியதன்மையை அதிகரிக்கத்தான் பூமியின் எந்தப்பகுதியில் இருந்தாலும் குறைந்தபட்சம் மூன்று செயற்கைகோள்களின் பார்வையாவது படும்வண்ணமாக விண்வெளியில் 30 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன .

 

பூமியை சுற்றி நிறுத்தப்பட்டுள்ள செயற்கைகோள்கள்
பூமியை சுற்றி நிறுத்தப்பட்டுள்ள செயற்கைகோள்கள்

 

மேலும் துல்லியத்தன்மையை அதிகரிக்க Atomic clocks செயற்கைகோள்களில் பயன்படுத்தப்படுகின்றன . பூமியில் இருக்கக்கூடிய நிலையத்தின் நேரத்திற்கும் செயற்கைகோளின் நேரத்திற்கும் இடையில் இருக்கக்கூடிய தொடர்பு என்பது மிகவும் முக்கியம் .

 

GPS யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ? எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது ?

 

GPS தொழில்நுட்பம் அமெரிக்காவால் கண்டுபிடிக்கப்பட்டது . ராணுவ தாக்குதல்களை துல்லியமாக மேற்கொள்ளவும்  ராணுவ தளவாடங்கள் எங்கிருக்கின்றன என்பதனை அறிந்துகொள்ளவும் GPS போன்றதொரு தொழில்நுட்பம் தேவைப்பட்டது , உருவாக்கவும் பட்டது .

 

GPS இலவசம் ஏன்?

 

அமெரிக்காவிற்கும்  ரஷ்யாவிற்கும் இடையே பனிப்போர் நிலவியிருந்த நேரம் , நியூயார்க்கிலிருந்து சியோல் நோக்கி 250 பயணிகளோடு பயணித்த விமானமொன்று தவறுதலாக ரஷ்யாவின் எல்லைக்குள் புகுந்தது , அதனால் சுட்டும் வீழ்த்தப்பட்டது .

 

 

இந்த நிகழ்விற்கு பிறகு மீண்டும் இதுபோன்றதொரு நிகழ்வு நடைபெறாமல் இருக்க GPS தொழில்நுட்பத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அனுமதித்தது அமெரிக்கா .

 

GPS தொழில்நுட்பம் நிறுத்தப்பட வாய்ப்பிருக்கின்றதா ?

 

நிச்சயமாக இருகின்றது , GPS தொழில்நுட்பம் முற்றிலுமாக அமெரிக்காவின் கண்டுபிடிப்புதான் . அமெரிக்க ராணுவத்திற்கு GPS வசதியினை செயலிழக்கசெய்வதற்கான உரிமை இருக்கின்றது . ஆனால் நாடு முழுமைக்கும் அல்லாமல் குறிபிட்ட பகுதியில் மட்டும் போதுமான காரணங்கள் இருப்பின் தடை செய்யப்படலாம் .

 

பாமரன் கருத்து

 

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *