இ-சிகரெட் என்றால் என்ன? இ-சிகரெட் தடை ஏன்? | What is E-Cigarette? Why it is banned in India?


 

இந்தியாவில் தற்போது இ சிகரெட் க்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது . தமிழகத்திலும் தடை விதிக்கப்பட்டு சோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன . இதற்கு முக்கிய காரணம் இ சிகரெட் இல் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் புற்றுநோயை உருவாக்கிடும் அபாயம் இருப்பதனால் இ சிகரெட் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

[sg_popup id=”3271″ event=”inherit”][/sg_popup]


இ-சிகரெட் என்றால் என்ன?

 



இ சிகரெட் என்பது ஆங்கிலத்தில் எலக்ட்ரானிக் சிகரெட் (Electronic Cigarette) என பொருள்படும் . தற்போது புழக்கத்தில் இருக்கக்கூடிய சிகரெட் , பீடி போன்றவற்றிற்குள்  புகையிலை அடைக்கப்பட்டு இருக்கும் . அதனை நெருப்பினால் பற்றவைத்து புகை பிடிப்பார்கள் .


 

இ சிகரெட்
இ சிகரெட்



இ சிகரெட் என்பது எலக்ட்ரானிக் கருவி . அதற்குள் நிகோடின் , கிளிசரின் மற்றும் சில கெமிக்கல் போன்றவை நிரப்பப்பட்டிருக்கும் . அந்த கருவிக்குள் இருக்கும் பேட்டரியை செயல்பட வைத்தவுடன், ஏற்படும் வெப்ப ஆற்றலின் உதவியினால், நிரப்பப்பட்டிருக்கும் திரவியம் ஆவியாகி அதனை பயன்படுத்துபவருக்கு புகைபிடிக்கும் போது ஏற்படக்கூடிய உணர்வினை கொடுக்கும் .


இ-சிகரெட் தடை எதற்காக ?



இ சிகரெட் கொண்டுவாரப்பட்டபோது இதனால் ஏற்படும் நன்மைகளாக இரண்டு விசயங்கள் சொல்லப்பட்டன .

1 . புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை பழக்கத்திலிருந்து விடுபட செய்ய இ சிகரெட் பயன்படும்

2 . சாதாரண சிகரெட்டில் இருக்கக்கூடிய புகையிலை மற்றும் பல பொருள்களானது மனிதர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களை தரக்கூடியது . இந்த அபாயங்கள் இ சிகரெட்டில் இல்லை .

இ சிகரெட் அறிமுகப்படுத்தப்பட்டபோது அந்த நிறுவனங்கள் சொன்ன நன்மைகள் தான் இவை .

 


 

இ சிகரெட்
இ சிகரெட்

 

இந்தியாவை பொறுத்தவரை பல லட்சகணக்கான மக்கள் ஆண்டுதோரும் புகையிலை பொருள்களை பயன்படுத்துவதினால் ஏற்படும் நோய்களினால் மரணத்தை தழுவியிருக்கிறார்கள் . இதனை போன்றே நாடு முழுவதிலும் பல மக்கள் புகையிலை பொருள்களினால் பாதிப்படைந்து வருகிறார்கள்.

இவற்றினை தடுக்கப்போகிற வரப்பிரசாதமாகவே இ சிகரெட் வரவினை அனைவரும் பார்த்தனர் .
ஆனால் நெடிய ஆய்வுகளின் முடிவு முற்றிலும் எதிரானதாகவே கிடைத்திருக்கின்றது .



அதன்படி …

இ சிகரெட் பயன்படுத்தினால் புகைப்பழக்கம் இருப்பவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள் என்பதற்கு எதிராக, இ சிகரெட் பயன்படுத்துவோர் பலரை சிகரெட் பழக்கத்திற்கு கொண்டுவருவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியது .

இ சிகரெட் இல் பயன்படுத்தப்படும் நிகோடின் போன்ற பொருள்களினால் மேலதிகமாக புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுவதாக கண்டறிந்து இருக்கிறார்கள் .

இ சிகரெட் இல் பயன்படுத்தப்படும் நிகோடின் போன்ற பொருள்கள் புகையிலை செடியின் இலைகளில் இருந்தே எடுக்கப்படுவதாகவும் குற்றசாட்டு எழுந்தது .

 

ஆக இ சிகரெட் அனுமதிக்கப்பட்ட இரண்டு முக்கிய காரணிகளையும் நிறைவேற்ற தவறியதால் உலகநாடுகள் பலவற்றில் தடை செய்யப்பட்டுள்ளது . தற்போது தமிழகத்திலும் தடை செய்யப்பட்டுள்ளது .



இளைஞர்கள் புகையிலை பொருள்களை எந்த விதத்திலும் பயன்படுத்திடுவதை தவிர்ப்பதே சிறந்தது .

 




பாமரன் கருத்து

பாமரன் கருத்து

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *