What are El Nino and La Nino explained in Tamil | எல்நினோ லாநினோ என்றால் என்ன?
அதிக மழை வெள்ளமோ கடுமையான வறட்சியோ நிலவினால் அந்த சமயங்களில் எல்நினோ அல்லது லாநினோ என்கின்ற வார்த்தைகளை அறிவியலாளர்கள் பயன்படுத்துவதை பார்த்திருப்போம் . எல்நினோ லாநினோ என்றால் என்ன? எப்படி ஒட்டுமொத்த உலகின் காலநிலையை இவை மாற்றும் ஆற்றலை பெற்றிருக்கின்றன என்பதை தான் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம் .
எல்நினோ லாநினோ என்றால் என்ன?
எல்நினோ என்பது குறிப்பிட்ட இடைவெளியில் நடக்கக்கூடிய காலநிலை மாற்றம்தான். பசுபிக் பெருங்கடலின் மேற்புற வெப்பநிலை சராசரி அளவினைவிட ஒரு நீண்ட கால இடைவெளிக்கு அதிகரித்து காணப்படுவதுதான் எல்நினோ. சராசரி வெப்பநிலையை விட குறைந்திருப்பின் லானினோ என அழைக்கப்படும்.
எல்நினோ மற்றும் லாநினோ இவை இரண்டுமே எதிரெதிர் பண்புகளை குறிப்பிட பயன்படுத்தப்படும் வார்த்தைகள் . இவைகள் இரண்டும் ENSO cycle இன் பகுதியே . ENSO cycle இன் விரிவாக்கம் El Nino-Southern Oscillation. அதாவது மத்திய கிழக்கு மற்றும் மேற்கு பசுபிக் பெருங்கடலின் வெப்பநிலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் . எல்நினோ வெப்பநிலை அதிகரிப்பையும் (Heat Phase), லாநினோ வெப்பம் குறைவான குளிர் சூழலையும் (Cold Phase) குறிப்பிட பயன்படுத்தப்படுகின்றன .
எல்நினோ (El Nino)
இயல்பாக வெப்பத்தினை சுமந்து செல்லும் மேகமானது கிழக்கிலிருந்து மேற்காக ஆசியாவை நோக்கி பயணிக்கும் . ஆனால் சில ஆண்டுகளில் மேக கூட்டங்கள் ஆற்றலை இழப்பதனால் அதன் திசை மேற்கிலிருந்து கிழக்காக பயணிக்கின்றது . இதனால் ஏற்கனவே இருக்கின்ற வெப்பநிலையை அது மேலும் அதிகரிக்கும் .
கடலுக்கு மேலுள்ள காற்று சூடாவதால் கடல்நீரும் வெப்பமாகி விடுகின்றது . பசுபிக் பெருங்கடலில் நீர் வெப்பமாக இருப்பதை 1600 களில் மீனவர்கள் கண்டறிந்ததாக கூறப்படுகின்றது .
இதற்கு அப்படியே மாற்றாக இயல்புக்கு அதிகமாக குளிர்வடைவது தான் லாநினோ .
எல்நினோ என்பதற்கு குழந்தை பையன் என்றோ கிறிஸ்துவின் குழந்தை என்றோ ஸ்பானிஷ் மொழியில் பொருள் . வருடத்தின் இறுதி மாதங்களில் இயேசு கிருஸ்துவின் பிறந்தநாளை ஒட்டிவருவதனால் இப்பெயர் .
லாநினோ (La Nino)
லாநினோ என்பதற்கு பெண் குழந்தை (Little Girl) என ஸ்பானிஷ் மொழியில் பொருள் . சாதாரணமக குளிர் நிகழ்வு (Cold Event) என அழைக்கப்படுகின்றது. பசுபிக் பெருங்கடலின் வெப்பநிலை சராசரி அளவினை விட குறையும்போது லாநினோ என அழைக்கப்படுகின்றது .
எல்நினோ ஏற்படுத்தும் விளைவுகளுக்கு முற்றிலுமான எதிர் விளைவுகளை லாநினோ ஏற்படுத்துகிறது . லாநினோ ஏற்படும்பொது தென்கிழக்கில் காற்றின் வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவும் வடமேற்கில் காற்றின் வெப்பநிலை இயல்பைவிட குறைவாகவும் (குளிர்ச்சியாக ) இருக்கும் .
எல்நினோ லாநினோ ஒட்டுமொத்த உலகிலும் மாற்றத்தினை ஏற்படுத்துவது ஏன் ?
எங்கோ இருக்கின்ற பசுபிக் பெருங்கடலில் ஏற்படுகின்ற வெப்பநிலை மாற்றம் இந்தியா வரைக்கும் , இன்னும் சொல்லப்போனால் உலகம் முழுமைக்கும் காலநிலையில் மாற்றத்தினை உண்டாக்குகிறதே ஏன்?இயல்பாக வரக்கூடிய சரியான கேள்வி . இயல்பாகவே உலகின் பெரும்பகுதி கடல்நீரால் சூழப்பட்டுள்ளது . குறிப்பாக அதிக கடல் பரப்பினை பசுபிக் பெருங்கடல் கொண்டிருப்பதனால் அதில் ஏற்படும் மாறுதல்கள் உலகம் முழுமைக்கும் மாற்றதினை ஏற்படுத்துகிறது .
எல்நினோ எதனால் ஏற்படுகிறது ?
இதற்கான சரியான காரணத்தை விஞ்ஞானிகளால் கண்டறியமுடியவில்லை . ஒவ்வொரு முறை எல்நினோ ஏற்படும்போதும் சுற்றுச்சூழல் மற்றும் கடல் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் வெவ்வேறானதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர் . எல்நினோ ஏதேனும் ஒற்றை காரணத்துக்காக ஏற்படாமல் இருப்பதனாலும் சரியாக கணிக்கமுடியவில்லை .
எல்நினோ எப்போதெல்லாம் ஏற்படுகிறது ?
எல்நினோ மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறதென்றும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதற்கு வாய்ப்புகள் அதிகமிருப்பதாகவும் கூறப்படுகின்றது . சில சமயங்களில் ஏழாண்டுகளுக்கு ஒருமுறையும் வந்திருப்பதாக கூறுகிறார்கள் .
ஆண்டுக்கு ஒருமுறை எல்நினோ வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை
கடைசி மூன்று மாதங்களில் ஏற்படும் எல்நினோ பாதிப்பானது டிசம்பர் முதல் ஜனவரி காலகட்டத்தில் அதிக சக்தியுடன் இருக்கின்றது. விக்கிபீடியா தகவலின்படி பின்வரும் ஆண்டுகளில் எல்நினோ பாதிப்பு இருந்திருப்பதாக கண்காணித்திருக்கிறார்கள் . அண்மையில் 2009 – 2010 , 2014 – 2016 இல் எல்நினோ பாதிப்பு பதிவிடப்பட்டிருக்கிறது .
அனைத்திற்கும் காரணம் மிக அதிகபடியான சுற்றுசூழல் மாசுபாடு தான் .
மிகவிரைவாகஉலகம் விழித்துக்கொண்டு செயல்படாவிடில் மிகப்பெரிய பாதிப்புகளை அடிக்கடி மனித இனம் சந்தித்துக்கொண்டே இருக்கும் .
பாமரன் கருத்து