Traffic Signal ஐ மீறும் படித்த அறிவாளிகள் 1 Minute Pls

 

என்னப்பா ரோடு போடுறாங்க ஆட்சி செய்றவங்க சரி இல்ல

எங்க பாரு குப்பை , கண்ட இடத்துல அப்புடியே போட்டு அசிங்கப்படுத்துறாங்க

எவ்வளவு வேகமா போறானுக , இவங்கள புடுச்சு ஜெயில்ல போடனும்

போலீஸ்காரர்களை பாத்தாலே புடிக்கல , லஞ்சம் வாங்க எப்புடி அலையுறாங்க

சிங்கப்பூர்ல பாக்கணுமே குப்பையை குப்பை தொட்டியில தான் போடுவாங்க , ரோடு சாப்புடுற மாதிரி பள பளன்னு இருக்கும் . யாராவது Trffic Signal ஐ மீறனுமே புடுச்சி உடனே ஜெயில்ல போட்ருவாங்க ….நம்ம இந்தியாவுல தான் யாரையும் ஒன்னும் பண்றது இல்ல …அப்பறம் எப்புடி நாடு உருப்படும்.

 

Vehicle crossing when Red Signal
Vehicle crossing when Red Signal

 

இப்படி சலிப்பாக பேசிடும் படித்த விவரம் அறிந்தவர்களில் பலர் தான் சாலைகளில் 60 வினாடிகள் கூட நிற்க முடியாமல் 50 ஆவது வினாடியில் வாகனத்தை ஓட்டுபவர்கள் , கடைசி ஒன்று இரண்டு வினாடிகள் தான் இருகின்றது கடப்பதற்குள் சிகப்பு விளக்கு வந்துவிடும் என்பது தெரிந்தும் அடுத்தவர்களை பற்றி கவலைப்படாமல் எதிரே வருபவர்களுக்கு இடைஞ்சல் கொடுப்பவர்கள் .

 

நன்றாக யோசித்து பாருங்கள் , சென்னை போன்ற நகரங்களில் வாகனத்தை ஓட்டிடும் 95 விழுக்காடு பேர் குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பாவது படித்து முடித்தவர்கள் . அனைவருக்குமே சிகப்பு விளக்கு எரிந்தால் நிற்க வேண்டும் , மஞ்சள் விளக்கிற்கு கவனிக்க வேண்டும் , பச்சை விளக்கிற்கு சாலையை கடக்க வேண்டும் என்பது தெரியும் .

 

ஆனாலும் தினந்தோரும் பலமுறை traffic Signal ஐ மதிக்காமல் வாகனத்தை இயக்கி வருகிறார்கள் . இவர்களில் பலர் தான் இந்தியாவிலும் தமிழகத்திலும் சிஸ்டம் சரியில்லை என குற்றம் சொல்லும் மேதாவிகள் .

 

Two Wheeler U Turn on Non U Turn Way
Two Wheeler U Turn on Non U Turn Way

 

இவர்களிடம் நாம் இதுபற்றி கேட்டால் , அதை கேட்க நீ யார் என்பார்கள் ?  போலீஸ்க்கு அதுக்குத்தானே சம்பளம் கொடுக்கிறார்கள் புடிக்க சொல்லு என்பார்கள்
அதிகபட்சமாக CCTV கேமரா பொருத்தினால் யாரும் மீறாமாட்டார்களே என ஆலோசனை சொல்லுவார்கள் .

 

நாமாகவே  பேசிக்கொள்வோம்…

 

யாராவது கண்காணித்தால் தான் நான் விதிமுறைகளை பின்பற்றி சரியாக செயல்படுவேன் என்பது எந்தவகையில் நியாயம் ? அதற்காகத்தான் நமக்கு கல்வியறிவு கொடுக்கபட்டதா ? ஏன் நாமாகவே விதிகளை பின்பற்றி நடந்திட கூடாது ?சிங்கப்பூர் போன்ற குறுகிய சுற்றளவு கொண்ட பகுதியில் CCTV கேமரா வைப்பதும் அதனை கண்காணிப்பதும் மிகவும் எளிமையானது . ஆனால் தமிழகம் அல்லது இந்தியா போன்ற அதிக அளவுள்ள பகுதிகளில் அதனை நிறுவுவதும் கண்காணிப்பதும் அதிக செலவு பிடிக்கின்ற விசயம் .

 

அதற்காக அதனை செய்யவேண்டாம் என்பதில்லை . யாரும் நம்மை கண்காணிக்காமலே நாம் ஒழுக்கமாக நடந்துகொண்டால் என்ன ? அதனால் நம்மிடம் இருக்கக்கூடிய ஏதாவது ஒன்று குறைந்து போகுமா என்ன ?என்பது தான் என்னுடைய கேள்வி .

 

சாலை விதிகளை மீறி செல்லும்போது விதிகளை பின்பற்றி வருவோரையும் ஆபத்துக்கு உள்ளாக்குகிறீர்கள்
அதிகபட்சமாக 120 நொடிகள் கூட பொறுமைகாத்து விதிகளை பின்பற்ற முடியாத படித்தவர்கள் பலர் தான் ஒவ்வொன்றையும் குற்றம் சொல்லிக்கொண்டு இருக்கின்றோம் .இதனை சொல்வது யாரையும் குற்றவாளி ஆக்குவதற்காக அல்ல , நாம் இவ்வளவு நாட்களாக தெரிந்தோ தெரியாமலோ சிறியது தானே என்று எண்ணிக்கொண்டு தவறுகள் செய்கின்றோம் என்பதனை சுட்டிக்காட்டுவதற்காகத்தான் .

 

இதனை படிக்கும் ஒருவர் அடுத்தநாள் வாகனத்தை ஓட்டிடும் போது Traffic Signal ஐ மதித்து நடந்தால் அதுவே எனக்கு போதும் .

 

பாமரன் கருத்து

 

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *