கமல்ஹாஸனிடம் எதிர்பார்ப்பது இதுமட்டும்தான் ….
ஜெயலலிதா இறந்தவுடன்தான் கமல்ஹாசனுக்கு வீரம் வந்து பேசுவதாக அதிமுக அமைச்சர்களும் பதிலுக்கு பேசி வருகின்றனர் .
அதற்கு பதிலளித்த கமல்ஹாசன் தான் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இருந்து அரசியலில் பங்கேற்றுள்ளதாக கூறினார் .
எதற்கும் அசராத கமல்ஹாசன் மக்களே அரசின் ஊழல் குறித்த ஆதாரங்களை அரசுக்கு அனுப்புமாறு கட்டளையிட்டார் .
ஆதரவும் எதிர்ப்பும் :
கமல்ஹாசன் ஒவ்வொருமுறை கருத்துக்களை பகிரும்போதும் அதற்கு ஆளும் அதிமுக எதிர்ப்பும் , OPS அணியினரும் திமுக உள்ளிட்ட மற்ற கட்சியினரும் கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு என ஆதரவும் தெரிவித்தனர் .
OPS EPS உடன் இணைந்தவுடன் OPS இதே கருத்து சுதந்திரத்தை அனுமதிப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம் .
திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் ஸ்டாலின் இதே அணுகுமுறையை கடைபிடிப்பாரா எனவும் பொருத்திருந்து பார்ப்போம் .
கமல்ஹாசனிடம் எதிர்பார்ப்பது என்ன ?
முரசொலி விழாவில் பங்கேற்ற கமல்ஹாசன் திமுக தலைவர் கருணாநிதி இணையுமாறு அனுப்பிய கடிதத்துக்கே நான் பதில் சொல்லவில்லை , அவரும் அதுபற்றி கேட்கவில்லை நாகரிகமாக, என்றார் , நாசுக்காக திமுக தங்களுடன் இணைய வேண்டும் என கூப்பிடக்கூடாது என்பதே அவரின் வலியுறுத்தல் …
இதே நிலைப்பாட்டைத்தான் கமலிடம் இருந்து அவரது ஆதரவாளர்களும் விரும்புகின்றனர் .. அதிமுக எந்த அளவிற்கு ஊழலை அறிமுகப்படுத்தியதோ அதைவிட அதிகப்படியாக திமுக அறிமுகபடுத்தியது . சொல்லப்போனால் ஊழலின் முதற் வாயிலே திமுக தான் .
சமூக மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் திராவிட கட்சிகள் கொண்டுவந்தன . அதைப்போலவே ஊழலையும் கொண்டுவந்தன ..
எனவே கமல்ஹாசன் ஊழலுக்கு எதிராக எப்போதுமே நிற்க வேண்டும் ..கொள்கைகளை மறந்துபோன திராவிட கட்சிகளுக்கு அருகிலே சென்று கொஞ்சம் நியாபகப்படுத்தலாம் , தவறில்லை ஆனால் கமலை நண்பனாக சிலர் காட்டிக்கொள்ள முயல்வதையும் அவர் உணர்ந்திட வேண்டும் …
கமல்ஹாசனிடம் எதிர்பார்ப்பது அவர் கட்சி சாரா அரசியல் பேச வேண்டும் …அவரைப்போன்ற மனிதர்கள் பேசினால் அது முக்கியத்துவம் பெரும், கவனிக்கப்படும்
அவர் மட்டுமல்ல நாமும் தான் ….
பாமரன்