அனைத்தையும் இழக்கவில்லை, இஸ்ரோவின் முயற்சியை கொண்டாடும் வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள்
வரும்காலங்களில் இஸ்ரோ இந்தியாவிற்கு வெற்றியை தேடித்தரும் என நம்புவோம். தோல்வி தானே வெற்றியின் படிக்கட்டுகள்.
கடந்த ஜூலை மாதம் 22 அன்று நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திராயன் 2 என்ற விண்கலத்தை அனுப்பியது. ஒவ்வொரு கட்டமும் எதிர்பார்த்தது போலவே நடந்தாலும் மிகவும் சிக்கலானது என அறியப்பட்ட விக்ரம் லேண்டர் தரையிறங்குவதில் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் 2.1 கிலோமீட்டர் மீத தூரம் இருக்கையில் விக்ரம் லேண்டர் இல் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு வரவேண்டிய சிக்னல் வரவில்லை. இதனால் இந்த திட்டத்தின் கடைசி கட்டம் தோல்வியில் முடிந்துபோனது.
அறிவியல் சோதனைகளில் தோல்வி என்பதனை அனுபவமாகத்தான் பார்க்க வேண்டும் என்பதைப்போல இஸ்ரோ மீண்டு வரும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. ஒட்டுமொத்த இந்திய மக்களும் கூட இஸ்ரோவிற்கு ஆதரவாக நிற்கிறார்கள். நமது பிரதமர் மோடி அவர்களும் கூட விஞ்ஞானிகளின் பக்கம் நிற்பதாக ஆறுதல் கூறினார்.
இந்த சூழலில் இஸ்ரோவின், யாரும் அறியாத நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்கான முயற்சியை வெகுவாக கொண்டாடி வருகின்றன வெளிநாட்டு நிறுவனங்கள்.
அமெரிக்க செய்தி நிறுவனம் : Wired
விக்ரம் லேண்டர் எதிர்பார்த்த தனது பாதையில் இருந்து தவறி விட்டது. இது இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் பெருத்த பின்னடைவு தான். ஆனால் அனைத்தும் முடிந்துவிடவில்லை என குறிப்பிட்டுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் :
திறமையான பொறியாளர்கள் மற்றும் பல ஆண்டுகள் விண்வெளி ஆராய்ச்சி அனுபவம் இவை இரண்டும் இணைந்துதான் மகத்தான முயற்சிக்கு இட்டுச்சென்றது. சந்திரயான் 2 இல் லேண்டர் தான் நிலவை அடையவில்லை மாறாக ஆர்பிட்டர் இன்னும் செயல்பாட்டில் தான் இருக்கிறது.இது ஒரு பகுதி தோல்வி தான், முழுமையான தோல்வி அல்ல. விண்வெளி ஆராய்ச்சியில் முன்னனி நாடுகளின் வரிசையில் இந்தியா இணைவதற்கு கூடுதலாக சில ஆண்டுகள் பிடிக்கலாம் அவ்வ்ளவுதான்.
ஒரு நாசா விஞ்ஞானி குறிப்பிடுகையில், விமானத்தை விட 10 மடங்கு வேகமாக செல்லும் விண்கலம் , திடீரென வேகத்தை குறைத்து தரையில் எந்தவித சேதாரமும் இன்றி [soft landing] இறங்குவது, அதுவும் ஒரு நிமிடத்தில், எந்தவித மனித கட்டுப்பாடுகளும் இன்றி இதனை செய்துமுடிக்க வேண்டும் என்பது எவ்வளவு சவாலானது என நினைத்துப்பாருங்கள்” என குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்தியா நிச்சயமாக வெல்லும் :
பலர் அமெரிக்காவை காட்டி அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே மனிதர்களை அனுப்பிவிட்டார்கள் நாம் இப்போதுதான் முதல் படிக்கே முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என நினைக்கலாம். ஆனால் நம்முடைய பொருளாதரம் வேறு, நாம் விண்வெளி ஆராய்ச்சியை ஆரம்பித்த காலம் என்பது வேறு. ஆகையினால் தான் நாம் இப்போது சிறிய முயற்சியில் இருக்கிறோமே அன்றி நம்முடைய விஞ்ஞான அறிவை எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது.
வரும்காலங்களில் இஸ்ரோ இந்தியாவிற்கு வெற்றியை தேடித்தரும் என நம்புவோம்.
தோல்வி தானே வெற்றியின் படிக்கட்டுகள்.
Join with me :
எங்களுடைய பதிவுகளை நேரடியாக வாட்ஸ்ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்து இணைந்திடுங்கள்_ : https://chat.whatsapp.com/
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!