ஆளுநரின் ஆய்வு – தவறா?

 ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரண்டு நாட்களுக்கு முன்பு கோவையில் சர்க்யூட் ஹவுசில் மாவட்ட ஆட்சித்தலைவர் , ஆணையர் , மற்றும்  பல அதிகாரிகளுடன் இணைந்து அங்கு நடைபெறுகின்ற சுகாதார பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார் .

இதற்க்கு தமிழகத்தில் ஆளும் கட்சி மற்றும் பாஜகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளுமே தங்களது எதிர்ப்பினை காட்டி வருகின்றன .

ஆளுநர் என்பவர் யார் ?

Executive powers. The Constitutionvests in the governor all the executive powers of the state government

இந்தியாவில் இரண்டு விதமான ஆளுநர்கள் இருக்கிறார்கள் . மாநிலங்களுக்கு உள்ள ஆளுநர்களுக்கு உள்ள அதிகாரமும் டெல்லி , புதுசேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களுக்கு உள்ள அதிகாரமும் வேறு . குறிப்பாக சொல்லவேண்டுமானால் யூனியன் பிரதேசங்களில் ஆளுநருக்கே முதல்வரை விட அதிக அதிகாரம் உள்ளது . ஆனால் மாநிலங்களை பொறுத்தவரையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கே அதிகாரம் அதிகம் .

இந்தியாவிற்கு குடியரசு தலைவர் எப்படியோ அதைப்போலவே மாநிலங்களுக்கு ஆளுநர்.

ஆளுநரின் பணி எப்படி இருக்க வேண்டும் :

குடியரசு தலைவரின் நேரடி மேற்பார்வையாளராக ஆளுநர் நியமிக்கப்படுகிறார் . சட்டமன்றத்தை கூட்டுவது , பெரும்பான்மையை சரிபார்த்து ஆட்சி அமைக்க அழைப்பது ,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் பரிந்துரையில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தல் , பல்கலைகழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமித்தல் என சம்பிரதாய பணிகளே ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது .

அம்பேத்காரும் ஆளுநரும் :

அரசியல் சாசனத்தை இயற்றிய அம்பேத்கார் அவர்கள் ஆளுநர் பதவி குறித்து ” ஆளுநர் பதவி என்பது அரசியல் சட்டப்படி அலங்காரபதவியே என்றும் மாநில நிர்வாகத்தில் குறுக்கிடும் அதிகாரம் ஆளுநருக்கு அளிக்கப்படவில்லை ” எனவும் கூறியிருக்கிறார் .

தவிர்க்கவேண்டிய ஆளுநரின் செயல்கள் :

ஒரு ஜனநாயக நாட்டில் மக்களாட்சி நடைபெறும் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுக்கே அதிகாரம் இருக்கப்பட்ட வேண்டும் .

சாதாரண குடிமக்களைவிட அரசியல் சட்டம் நன்றாக தெரிந்த ஆளுநர் தனது செயலால் குழப்பம் ஏற்படும் என்பது தெரியாமல் செய்திருக்க வாய்ப்பில்லை .

மத்திய அரசு நிர்வாகத்தில் குடியரசு தலைவர் தலையிடுவது எப்படி சரியானது இல்லையோ அதனைப்போலவே ஆளுநர் மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடுவது .

வக்காலத்து வாங்குவதை நிறுத்தவேண்டிய அமைச்சர்கள் :

ஆளுநர் தூய்மை இந்தியா திட்டத்தின் மீது கொண்டிருந்த அக்கறையால் இதை செய்ததாக கூறியிருந்தாலும் நிர்வாகத்தில் தலையிட்டது தவறானதே .

ஆட்டுக்கு தாடி தேவையில்லாததை போன்றது ஆளுநர் பதவி என கூறிய மாநில சுய ஆட்சியை கொள்கையாக கொண்ட அண்ணாவை முன்னோடியாக கொண்ட அதிமுக அமைச்சர்கள் ஆளுநரின் இந்த செயலுக்கு ஆதரவு காட்டுவது கேளிக்கையானது .

கட்சிகளுக்குள் எதிர்ப்பு இருக்க வேண்டும் . அதற்காக இப்படி இருத்தல் கூடாது .

நன்றி
பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *