அறிய பொக்கிஷம் தாஜ்மகாலை அழிய விடலாமா? | Tamil | Why we want Save Tajmahal?

தாஜ்மஹாலை நாங்கள் இழுத்து மூட உத்தரவிடுவோம் அல்லது நீங்கள் தாஜ்மகாலை மீட்டெடுங்கள் அல்லது இடித்து தள்ளுங்கள்

 

Beauty of Tajmahal
Beauty of Tajmahal

 

இப்படி சொன்னது தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க சென்ற யாரோ அல்ல . இந்தியாவின் ஆகப்பெரும் நீதிமன்றமான உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் மதன் பி லோகுர் , தீபக் குப்தா .

 

பொழிவை இழக்கும் தாஜ்மகால்

 

Tajmahal lost its beauty because of Pollution
Pollution affected Tajmahal
Pollution affected Tajmahal

 

இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக இருக்கக்கூடிய தாஜ்மஹால் சுற்றுபுற சூழலினாலும் அந்த பகுதியில் அதிகரித்திருக்கும் தொழிற்சாலைகளினாலும் காற்று மாசினாலும் தனது பொழிவை இழந்து வருவதாக பலரும் குற்றம் சாட்டினர் .

 

தாஜ்மகால் தனது பொழிவை இழக்கிறது
 

 

தாஜ்மஹாலின் அழகே அதன் மார்பிள்ஸ் எனப்படும் பளிங்கு கற்கள் தான் . அந்த வெண்ணிற பளிங்கு கற்கள் மாசினால் மஞ்சள் நிறமாகவும் பச்சை நிறமாகவும் மாறி வருவதே குற்றச்சாட்டு . இதற்கு சான்றும் இருக்கின்றது .

 

நீதிபதிகளின் கோபம் ஏன் ?

 

Supreme court judges slams Center and State government

 

தாஜ்மகால் முறையாக பராமரிக்கப்படவில்லை , அதனால் இந்தியாவின் மிகப்பெரிய புராதன சின்னமாக இருக்கக்கூடிய தாஜ்மகால் தனது பொழிவை இழந்து அழிந்து வருகின்றது என சமூக ஆர்வலர் MC Mehta  (மேத்தா) என்பவர் உச்சநீதிமன்றத்தை நாடினார் .

 

அவரது வழக்கினை விசாரித்த நீதிமன்றம் பலமுறை தாஜ்மகாலை பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு , அதற்கான நடவெடிக்கையை எடுங்கள் என உத்திரபிரதேச அரசிற்கு உத்தரவிட்டது . பலமுறை மத்திய அரசிடம் இதனை வலியுறுத்திவிட்டது . ஆனாலும் வழக்கம்போல தாஜ்மகாலை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர் .

 

மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை

 

நாங்கள் இவ்வளவு சொல்லியும் எதையும் செய்ய மத்திய அரசும் மாநில அரசும் முன்வராதபோது நாங்கள் ஏன் தாஜ்மகாலை மூட உத்தரவிடக்கூடாது என காட்டமாக தெரிவித்தனர் .

ஒன்று காப்பாற்ற நடவெடிக்கை எடுங்கள்  அல்லது நாங்கள் மூட உத்தரவிடுகிறோம் அல்லது இடித்து தள்ளுங்கள்

 

தாஜ்மகாலோடு ஒப்பிட்டால் ஈபில் டவர் ஒன்றுமேயில்லை

 

மேலும் அவர்கள் கூறிடும்போது , பாரிஸ் நகரில் இருக்கக்கூடிய ஈபிள் டவரை காண ஆண்டுக்கு 80 Million மக்கள் செல்கின்றனர் , அது சாதாரண டவர் . தாஜ்மஹாலோடு ஒப்பிட்டால் ஈபிள் டவர் ஒன்றுமேயில்லை . ஆனால் நாம் தாஜ்மகாலை முறையாக பராமரிக்காமல் இருந்து வருகின்றோம் . நாம் மட்டும் முறையாக தாஜ்மகாலை பராமரித்தால் அந்நிய செலவாணிக்கு கவலைப்படவே தேவையில்லை .

 

காதலின் சின்னம் தாஜ்மகால்

 

Symbol of love Tajmahal
Tajmahal
Tajmahal

16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முகலாய மன்னர் ஷாஜகான் தனது மனைவியான மும்தாஜ் மீது வைத்திருந்த காதலின் விளைவாக கட்டியது தான் தாஜ்மகால் . இன்றளவும் உலக மக்களின் காதல் சின்னமாக தாஜ்மகால் இருந்து வருகின்றது .

தாஜ்மஹால் குறித்த சில தகவல்கள்

 

 Specialties of Tajmahal 

கிட்டதட்ட 22000 கட்டிட தொழிலாளர்கள் , ஓவியர்கள் , கட்டிட நிபுணர்களை கொண்டு கட்டப்பட்டது

ஆற்றின் மறுபக்கம் கறுப்பு நிற பளிங்கால் மற்றொரு தாஜ்மகாலை கட்ட ஷாஜகான் நினைத்ததாக கூறப்படுகிறது (நல்ல வேளையாக கட்டவில்லை ) அவரது மகன்களுடன் ஏற்பட்ட மோதலில் அதனை கைவிட்டுவிட்டார் .

 

இந்த அழகிய தாஜ்மகாலை கட்டிமுடிக்க ஓவியர்களும் வல்லுனர்களும் 17 வருடங்கள் எடுத்துக்கொண்டார்கள்  .

இந்தியாவில் அதிகம்பேர் வருகின்ற சுற்றுலாத்தளம் .

 

இனி இப்படியொரு தாஜ்மகாலை கட்டவே முடியாது

 

தாஜ்மஹாலுக்கு தேவையான பொருள்களை சுமந்து செல்ல 1000 யானைகள் பயன்படுத்தப்பட்டனஇலங்கை , திபெத் , சீனா , இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட 28 விதமான சிறந்த கற்களை கொண்டு உட்புறம்  அழகுபடுத்தப்பட்டு இருக்கின்றது .

பலமுறை ஆங்கிலேயரின் சுரண்டலுக்கு பின்னரும் பொழிவோடு இருக்கின்றது .

 

தாஜ்மகாலை வடிவமைத்தபோது அதன் செலவு 32 மில்லியன் . தற்போது இதேபோன்று கட்ட வேண்டும் என்றால் 1,062,834,098 USD க்கும் அதிகமாக செலவு செய்ய வெண்டுமாம் .

 

தினமும் 12000 க்கும் அதிகமான நபர்கள் தாஜ்மகாலை காண வருகிறார்கள்

 

Pink Tajmahal
Pink Tajmahal

 

 தாஜ்மகால் நேரத்திற்கு ஏற்றதுபோல வண்ணத்தை மாற்றிடும் இயல்பினை கொண்ட கற்களால் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது . அதிகாலையில் பிங்க் நிறத்திலும் மாலையில் வெண்மையாகவும் நிலவின் சாயலில் தங்க நிறத்திலும் காட்சியளிக்கும்

 

 எதற்காக தாஜ்மகாலை நாம் அழியவிடாமல் பாதுகாக்க வேண்டும்

 

Why we want to save Tajmahal? 

தாஜ்மஹால் இந்தியாவின் அடையாளம் . UNESCO பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ள சிறப்பு மிக்க தாஜ்மகாலை காத்திட வேண்டியது அனைவரின் கடமை .

தாஜ்மஹாலுக்கு தற்போது வருகின்ற சுற்றுலாப்பயணிகள் மூலமாக அந்நிய செலாவணி அதிகரிக்கின்றது . முறையாக பராமரித்தால் இன்னும் அதிகமானவர்களை ஈர்த்து வருமானத்தை உயர்த்தலாம் .

இனி இப்படியொரு அழகிய மாடத்தை அமைக்க முடியாது என்கிற நிலையில் , நம்மிடம் இருப்பதை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் .

Pollution around Tajmahal Yamuna river
Pollution around Tajmahal Yamuna river

 

வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த , கட்டிட கலைக்கும் சான்றாய் இருக்கக்கூடியது தாஜ்மகால் .

 

முகலாயர்கள் கட்டியது என்பதாலோ அந்நியர் கட்டியது என்பதாலோ தாஜ்மகாலை புறக்கணிப்பது என்பது முற்றிலும் தவறானது , முட்டாள்தனமானது  .

20 ஆண்டுகளுக்கும் மேலாக தாஜ்மகாலை பாதுகாக்கவேண்டும் என்கிற கோரிக்கை இருந்துவந்தாலும் இன்னும் அதற்கு அரசு செவி சாய்க்காமல் இருப்பது கொடுமை , தவறு .

ஜூலை மாத முடிவில் இருந்து உச்சநீதிமன்றம் தினமும் வழக்கினை விசாரிக்க இருப்பது சிறப்பு .

பாமரன் கருத்து

 

More Recent Post here

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *