சேலம் 8 வழி பசுமை சாலை மக்களுக்கானதா, முதலாளிகளுக்கானதா? – Guest Post

இன்னும் சில நாட்களில் சேலம் முதல் சென்னை வரை 8 வழி பசுமைசாலை அமைக்கப்படுகிறது. இதற்கு மக்களிடையே பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

சேலம் 8 வழிச்சாலை நன்மையா தீமையா ?
க.வினோத்குமார்

வழக்கம்போல், ஆளும்கட்சியினர் ” சமூகவிரோதிகள் மக்களை தூண்டிவிடுகின்றனர்” என்றும் , எதிர்கட்சியினர் “ஆளும்கட்சி ஊழல் செய்கிறது எனவும், மக்களுக்கு எதிராக செயல்படுகிறது” எனவும்கூறி வெளிநடப்பு செய்கின்றனர்.

உண்மையில், 8 வழி பசுமைசாலையின் நன்மை மற்றும் தீமைகள் என்ன??

வாருங்கள் களைவோம் !!

சுமார் 10000 கோடி மதிப்பில் அமைக்கப்படும் 8 வழிசாலைக்கு பசுமை வழிச்சாலை என அரசு பெயரிட்டுள்ளது. இந்தச்சாலை, தாம்பரம் தொடங்கி வாலாஜா , திருவண்ணாமலை, அரூர் வழியாக சேலம் வந்தடைகிறது. இஃது , இந்தியாவின் இரண்டாவது பெரிய சாலையாக அமையும்.

இதன்மூலம் , சென்னை – சேலம் இடையிலான பயணம் 3 மணிநேரமாக குறையுமென கூறுகின்றனர். மேலும் , இதுவரை சென்னை – திருவண்ணாமலைக்கு நேரடியாக சாலைகள் எதுவும் இல்லை . இதனால் , திருவண்ணமலை மக்களுக்கு எளிதில் பயணம் அமையும். இதுவரை , சேலம் , கோவை, திருப்பூர், நாமக்கல் முதலிய மாவட்டங்களுக்கு செல்லவேண்டுமானால், சென்னை – திருச்சி சாலைவழியாக வந்து , பின்னர் மாற்றுத்திசையில் சுற்றிச்செல்ல வேண்டும் .. தற்பொழுது , நேரடியாக குறுகிய மணிநேரத்தில் தத்தம் இடங்களுக்கு சென்றிடலாம்.

சேலம் 8 வழிச்சாலை முதலாளிகளுக்கானதா?

இந்த பிரச்சனைகள் குறித்து பேசி வரும் பலரும் கூறுவது , வெளிநாட்டு கம்பெனிகளை ஈர்ப்பதற்காகவும் அவர்கள் அமைக்கவிருக்கும் தொழிற்சாலைகளில் இருந்தும் உற்பத்தியாகக்கூடிய பொருள்களை விரைவாக கொண்டு செல்வதற்கும் தான் இந்த சாலைகள் அமைக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர் .

நன்றாக கவனித்து பாருங்கள் , தற்போது பசுமை வழி சாலையை எதிர்ப்பவர்கள் தான் தமிழகம் தொழில்துறையில் பின்னுக்கு சென்றுவிட்டது என கூறுபவர்கள் , தமிழகம் தொழில்துறையினரை ஈர்க்கவில்லை என குற்றம் சாட்டுபவர்கள் .

எதையுமே செய்யாமல் தொழில்துறையினை எவ்வாறு ஈர்க்க முடியும் என்பது ஆட்சியாளர்களின் கேள்வி

இந்த திட்டம் சில நன்மைகளை கொண்டிருந்தாலும் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் விதமும் இது மக்களுக்கான திட்டம் என சொல்வதிலும் பல முரண்பாடுகள் இருக்கின்றன .

1 . சென்னை கோயம்பேட்டிலிருந்து தாம்பரம் வருவதற்கு குறைந்தபட்சம் 1 மணிநேரமாவது ஆகும் பட்சத்தில் , எப்படி 3 மணிநேரத்தில் சேலம் சென்றடைய முடியும்?

//இந்த சாலை சென்னைக்கு வெளியிலேயே முடிவடைந்துவிடுகிறது

2 . இடையில வரும் மலைகள் , விவசாய நிலங்கள் , குடியிருப்புகள் மற்றும் மலைவாழ் உயிரினங்கள் பாதிக்காமல் சாலைகள் அமைக்கமுடியுமா என்றால் நிச்சயம் முடியாது.உலக நாடுகள் இயற்கையை பாதுக்காக்க போராடும் நிலையில் நாம் இருக்கின்ற வளத்தினை அழிப்பது சரியல்ல .

3 . பாதிக்கப்படும் விவசாய நிலங்களுக்கு , 1 சதுர அடிக்கு 140 ரூபாய் (1 ஹெக்டருக்கு 20 இலட்சம் ) தரப்படும் என அரசு அறிவித்துள்ளது. இருக்கும் நிலத்தை பிடுங்கிக்கொண்டு, உனக்கு பணம் தருகிறேன் எனக்கூறுவது அரசின் அதிகாரத்தையல்லவா காட்டுகிறது.

4 . சேலம் வழியாக வரும்சாலையில், பல மலைப்பகுதிகள் உள்ளன . ஏற்காடு மலைகள், ஜவ்வாது மலை, தீர்த்த மலை முதலியன. இப்பகுதியில், பெரும்பாலான இடங்களில் மங்கனீஸுகள் கிடைக்கின்றன. இவற்றை அழித்தால் , மண்வளம் பாதிக்கப்பட்டு விளைச்சல் பாதிக்கப்படாதா?

சாதாரண மக்களால் 8 வழி பசுமை சாலையை பயன்படுத்திட முடியுமா ?

ஒரு சாலை அமைக்கப்படுகிறது என்றால் நிச்சயமாக டோல்கேட் வைப்பார்கள் . அவ்வாறு வைக்கும்போது 10 ஆயிரம் கோடி செலவு செய்து அமைக்கப்படும் சாலையில் பயணிக்க குறைந்தது 5 ரூபாயிலிருந்து 7 ரூபாய் வரைக்கும் கிலோ மீட்டர் ஒன்றிக்கு வசூலிப்பார்கள் . அப்படியானால் கிட்டதட்ட 1500 ரூபாய் ஆகும் . இதில் நடுத்தர , ஏழை மக்களால் செல்ல முடியுமா என்பது கேள்விக்குறி .

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதும் அதற்காக சில ஆயத்தப்பணிகளை செய்வது என்பதும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது தான் . ஆனால் ஏற்கனவே தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக குறைந்திருக்கிறது என ஆய்வாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர் . ஏற்கனவே விவசாயமும் சுற்றுசூழலும் பல தாக்கங்களை சந்தித்து கொண்டிருப்பதால் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தும்போது கவனமாகவும் மக்களின் ஆதரவையும் பெற்று செயல்படுத்துவது என்பது நல்லதாக இருக்கும் .

– க.வினோத்குமார்
Email : kjvinoth9886@gmail.com

வாசகர் கடிதம் பொறுப்பு துறப்பு

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *