நேர்மை பிழைக்க தெரியாதவரின் அடையாளமா ? – எங்கே செல்கிறோம் நாம்
உண்மையை சொல்ல வேண்டுமெனில் இக்காலத்தில் நேர்மையான அதிகாரிகள் வேண்டும் என விரும்பும் நாம் அந்த அதிகாரி நம் அப்பாவாகவோ , தன் சகோதரனாகவோ , தன் கணவனாகவோ , தன் மனைவியாகவோ ,சகோதரியாகவோ இருக்க விரும்புவதில்லை .
ஆம் நண்பர்களே சக அதிகாரியின் மனைவி லஞ்சத்தில் நகை அணியும்போது தனது கணவரின் தூய்மையை மனைவி ரசிப்பது இல்லை (இதே தான் மனைவிக்கும் ) . அதிகபட்சமாக தனது கணவர் குறித்த அவர்களின் எண்ணம் “இவருக்கு பொழைக்க தெரியாது ” என்பது தான் .
தனது காதலன் சிக்னலை மீறி செல்லும்போது வேண்டாம் என தடுக்கும் காதலியும் கணவனோ மனைவியோ லஞ்சம் வாங்க முற்படும் போது சம்பளமே போதும் என தடுக்கும் துணைகளும் தவறு நடந்தால் தட்டிகேள் என சொல்லும் அப்பாவும் நேர்மைக்கு துணைபோகும்படி அறிவுரைகூறும் அம்மாவும் இருந்துவிட்டால் சமூகத்தில் தவறு நடக்கவே வாய்ப்பில்லை .
அருகில் இருப்பவர்கள் முதலில் கண்டித்துவிட்டால் தவறுகள் திருத்தப்பட்டுவிடும் . அது மனைவியாக இருந்தால் கூடுதல் சிறப்பு .
இந்தபதிவில் நீங்கள் மனைவியையும் குடும்ப உறுப்பினர்களையுமே குறைகூறுகிறீர்கள்…
குடும்பத்தில் உள்ளவர்களின் பேச்சைக்கேக்காமல் தவறுசெய்யும் எத்தனையோ ஆண்கள் உள்ளனர்… அவர்களுக்கு தெரியாமலும் செய்கின்றனர் …
தவறு செய்பவர்கள் திருந்தவேண்டுமே தவிர குடும்பத்தில் உள்ளவர்களை குறைகூறுவது தவறாகும் (ஒருசிலரை தவிர )….
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது…
இந்த பதிவில் நல்லவர்கள் தனது குடும்பத்தில் இருந்து வரும்போது
குடும்ப உறுப்பினர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதனை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளது .
உங்களது பதிலுக்கு நன்றி