Site icon பாமரன் கருத்து

நேர்மை பிழைக்க தெரியாதவரின் அடையாளமா ? – எங்கே செல்கிறோம் நாம்

மக்கள் அனைவரும் விரும்புவது நேர்மையான அதிகாரிகளை , நேர்மையான அரசியல்வாதிகளை , நேர்மையான சக மனிதர்களை . ஆனால் அப்படி நேர்மையாக இருப்பவர்களுக்கு தகுந்த மரியாதையை அளிக்கிறோமா ? அவர்களின் நேர்மையை பாராட்டுகிறோமா ? குறைந்தபட்சம் மதிக்கிறோமா ?
நேர்மையான அதிகாரி சந்திக்கும் சவால்கள் மிக அதிகம் நண்பர்களே . அவர்களுக்கான  ஆதரவு என்பது ஒரு மாயை போலத்தான் மக்களிடத்தில் இருக்கின்றன .

உண்மையை சொல்ல வேண்டுமெனில் இக்காலத்தில் நேர்மையான அதிகாரிகள் வேண்டும் என விரும்பும் நாம் அந்த அதிகாரி நம் அப்பாவாகவோ , தன் சகோதரனாகவோ , தன் கணவனாகவோ , தன் மனைவியாகவோ ,சகோதரியாகவோ இருக்க விரும்புவதில்லை .

ஆம் நண்பர்களே சக அதிகாரியின் மனைவி லஞ்சத்தில் நகை அணியும்போது தனது கணவரின் தூய்மையை மனைவி ரசிப்பது இல்லை (இதே தான் மனைவிக்கும்  ) . அதிகபட்சமாக தனது கணவர் குறித்த அவர்களின் எண்ணம் “இவருக்கு பொழைக்க தெரியாது ” என்பது தான் .

ஒரு சில நல்லவர்கள் இன்னும் இந்த சமூகத்தில் நல்லவர்களாக தூய்மையான அதிகாரிகளாக இருப்பதற்கு காரணம் அந்த நேர்மைக்காக உறுதுணையாக இருக்கும் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கும் அந்த நல்லவர்களின் மனைவிமார்களும் கணவன்மார்களும் குடும்ப உறுப்பினர்களும் தான் .

தனது காதலன் சிக்னலை மீறி செல்லும்போது வேண்டாம் என தடுக்கும் காதலியும் கணவனோ மனைவியோ லஞ்சம் வாங்க முற்படும் போது சம்பளமே போதும் என தடுக்கும் துணைகளும் தவறு நடந்தால் தட்டிகேள் என சொல்லும் அப்பாவும் நேர்மைக்கு துணைபோகும்படி அறிவுரைகூறும் அம்மாவும் இருந்துவிட்டால் சமூகத்தில் தவறு நடக்கவே வாய்ப்பில்லை .

அருகில் இருப்பவர்கள் முதலில் கண்டித்துவிட்டால் தவறுகள் திருத்தப்பட்டுவிடும் . அது மனைவியாக இருந்தால் கூடுதல் சிறப்பு .

நன்றி
பாமரன் கருத்து
Exit mobile version