#DeleteFacebook உங்கள் facebook ஐ டெலீட் செய்ய சரியான நேரம் இதுதானாம், ஏன்?

 

உலகின் ஆகப்பெரும் எண்ணிக்கையிலான பயனாளர்களை கொண்டது முகப்புத்தகம் . யார் கண் பட்டதோ  தெரியவில்லை , அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடந்ததில் இருந்தே அதற்கு நேரம் சரியில்லை . facebook தனது 50 லட்சம் பயனாளர்களின் தகவல்களை வெளியிட்டது தொடர்பாக தண்டணை பெரும் என நம்பப்படுகிறது இதனால் 5 முதல் 7 சதவிகிதம் வரையிலான பங்குகளை இழந்தது . இதன் மதிப்பு சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் கோடி .

 

ட்ரெண்டாகும்  #deletefacebook:

facebook நிறுவனம் தற்போது வாங்கி வைத்திருக்க கூடிய WhatsApp ஐ உருவாக்கிய துணை நிறுவனர்களில் ஒருவரான பிரையன் ஆக்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் It is time #deletefacebook என பதிவிட்டுள்ளார் . அதாவது எந்த விளக்கங்களும் இல்லாமல் facebook ஐ டெலீட் செய்வதற்கான நேரம் இதுவென கூறியுள்ளார் . 

அந்த டிவீட் தற்போது ட்ரெண்டாகி வருகிறது .

 

 பிரச்சனையின் பின்புலம் :

 

 

நடந்து முடிந்த அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு தேர்தல் வேலைகளை செய்த நிறுவனம் “Cambridge Analytica ” . இந்த நிறுவனம் தேர்தல் சமயத்தில் சுமார் 50 லட்சம் facebook பயனாளர்களின் சொந்த தகவல்களை தொடர்ச்சியாக திருடி வந்துள்ளது . இது தெரிந்திருந்தும் இது குறித்து தனது பயனாளர்களுக்கு ஏன் சொல்லவில்லை என்பதே facebook மீது சந்தேகத்தை கிளப்பியுள்ளது .

 

அமெரிக்க மற்றும் யுரோப்பியன் நிபுணர்கள் எவ்வாறு Cambridge Analytica நிறுவனம் எப்படி தனி நபர்களின் தகவல்களை பெற்றது . இதுபோன்று கொடுப்பதற்காகவே தனது விதிகளை facebook மாற்றியதா என ஆராய்ந்து வருகிறார்கள் .

 

facebook நிறுவனம் அளித்துள்ள பதிலில் British academic, Aleksandr Kogan இவர் உருவாக்கிய ஆப்பின் மூலமாகவே தகவல்கள் திருடப்பட்டுள்ளன . இதனை 270000 நபர்கள் டவுண்லோடு செய்துள்ளதாகவும் இவர்கள் இவர்களின் தகவல்களோடு சேர்த்து நண்பர்களின் தகவல்களை சேகரிக்கவும் அனுமதி கொடுத்ததால் திருடப்பட்டுள்ளது  என கூறியுள்ளது . 

Cambridge Analytica அளித்துள்ள பதிலில் நாங்கள் மட்டுமே சமூக வலைதளங்களின் தகவல்களை பயன்படுத்திடவில்லை , 2016 ஐனாதிபதி தேர்தலில் facebook டேட்டா எதுவும் பயன்படுத்தப்படவில்லை என விளக்கமளித்துள்ளது . 

நாம என்ன செய்யணும் :

 

அளவா பயன்படுத்தனும் , எப்போது வேண்டுமானாலும் நமது தகவல்கள் திருடப்படும் ஆபத்து இருக்கிறதென்பதை தெரிந்து facebook ஐ பயன்படுத்திட வேண்டும் . இந்த ஆபத்து facebook இல் மட்டுமல்ல , பல சமூக வலைத்தளங்களிலும்   இருக்கின்றது .

 

நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *