Real DADA | ரியல் தாதா கங்குலி | Ganguly Birthday

இன்று ஜூலை 08 (July 08 1972) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன், பெங்கால் டைகர் கங்குலியின் பிறந்ததினம் . இந்திய கிரிக்கெட்டை மீட்டு எடுத்த முக்கியமானவர்களில் கங்குலியும் ஒருவர் . அவருக்கு பிறகு டோனி , கோலி என பல சிறப்பான இந்திய கேப்டன்கள் இந்திய அணிக்கு கிடைத்த போதிலும் இன்றும் கங்குலியின் கேப்டன்சியை , அவரது கிரிக்கெட் ஆட்டத்தை விரும்பி வேறு ஒருவருக்கு ரசிகனாக  மாறாத பல லட்சக்கணக்கான ரசிகர்கள்  இருக்கவே செய்கிறார்கள் .

 

 

அன்றுமுதல் என்றும் இந்திய கிரிக்கெட்டின் உண்மையான தாதாவாக கங்குலியே இருப்பார் , இதில் மாற்றுக்கருத்து இருக்கவே முடியாது . இன்றைய கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கு “தாதா” கங்குலி குறித்து அவ்வளவாக அறிந்திருக்க வாய்ப்பில்லை . இந்த பதிவு கங்குலி குறித்த ஓர் சிறந்த அறிமுகத்தை கொடுக்கும்

 

இந்திய அணியை மீட்டு எடுத்தவர்

 

 

2000 ஆண்டுவாக்கில் தொடர் தோல்வி , மேட்ச் பிக்சிங் என துவண்டு கிடந்த இந்திய அணியை , ரசிகர்களின் பேராதரவை நம்பிக்கையை இழந்திருந்த இந்திய அணியை மீட்டெடுத்த கேப்டன் சவுரவ் கங்குலி .

 

சவுரவ் கங்குலி மற்றும் ஜான் ரைட் இருவருமே இந்திய கிரிக்கெட் வரலாற்றை மாற்றியவர்கள் என சொன்னால் அது மிகையாகாது .

 

எவருக்கும் அஞ்சாத வீரன்

 

வான்கடே மைதானத்தில் இங்கிலாந்து வீரர் பிளிண்டாப் இந்திய அணியை வென்றபிறகு சட்டையை கழற்றி வெற்றியை கொண்டாடினார் . இதனை நினைவிலே வைத்திருந்த கங்குலி இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் வென்றவுடன் லார்ட்ஸ் மைதானத்தில் தனது ஜெர்சியை கலற்றி சுழற்றினார் .

 

பதிலுக்கு பதில்
 

வான்கடே மைதானத்தில் நடந்ததற்கு கங்குலியின் பதிலடி இது என்பது அனைவரும் அறிந்ததே . அந்த தருணம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மெய்சிலிர்க்கவைக்கும் தருணம் .

 

இதோடு கங்குலி நிற்கவில்லை , லார்ட்ஸ் மைதானம் கிரிக்கெட்டின் மெக்கா போன்றது , கங்குலி இப்படி செய்திருக்க கூடாது என இங்கிலாந்து பாய்காட் கூற ” உங்களுக்கு லார்ட்ஸ் மெக்கா என்றால் எங்களுக்கு வான்கடே தான் மெக்கா ” அவரது சிங்கம் போன்ற சிலிர்த்த பதிலில் சிலிர்த்துப்போனது ரசிகர்களின் மனம் .

 

புதியவர்க்ளுக்கு அடையாளம் கொடுத்தவர்

 

கங்குலி என்றும் புதிய திறமையாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்து , அவர்களின் திறமையை வெளிபடுத்திட உறுதுணையாக இருந்தவர் . 

இவரது தலைமையில் இந்திய அணி வெற்றிகளை மட்டும் குவித்திடவில்லை மாறாக இந்திய கிரிக்கெட்டுக்கு தனக்கு பிறகும் நிலைத்து நிற்கக்கூடிய பல வீரர்களை கொடுத்துவிட்டே சென்றார் .

 

 

சேவாக் , யுவராஜ் , ஹர்பஜன் , சஹீர்கான் என அந்த பட்டியல் நீண்டுகொண்டே போகும் . இவர்கள் அனைவருமே 2011 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியிலும் அதன் பிறகும் இருந்தவர்கள் .

 

  • சேவாக் இளம் வீரராக இருந்தாலும் அவருக்கு முதல்வரிசை தான் சரியாக இருக்குமென கருதிய கங்குலி தன்னுடய இடத்தை அவருக்காக விட்டுக்கொடுத்தார் .
  •  

  • சேவாக் சிறந்த டெஸ்ட் வீரராக வர திறமை கொண்டவர் என ஊக்குவித்தவர் , பின்னாளில் இதனை சேவாக் நினைவு கூறுகிறார் ” தான் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள்அடித்து சாதனை செய்ய கங்குலியின் ஊக்கமும் நம்பிக்கையும் காரணம் “
  •  

சச்சின் கங்குலி டிராவிட் கும்ளே என சிறப்பான வீரர்களை கொண்டிருந்த இந்திய அணி , கங்குலியின் தலைமையின் கீழ் வெளிநாடுகளிலும் வெற்றி வாகை சூட ஆரம்பித்து இருந்தது.

 

 

பவுண்டரி எல்லையை தாண்டி விழும் சிக்ஸர்களை கண்டவர்க்ளுக்கு கங்குலியின் மைதானத்தையே தாண்டி விழும் சிக்ஸர்கள் புல்லரிக்க வைக்கும்

 

கொல்கத்தாவின் இளவரசர் , பெங்காளின்  டைகர் என பல செல்லப்பெயர்களுக்கு சொந்தக்காரர் . 

சிக்கலடைந்து கிடந்த இந்திய அணியை மீட்டெடுத்து இந்திய கிரிக்கெட்டை உயிர்ப்போடு இருக்க செய்ததில் கங்குலியின் பங்கு அளப்பரியது . 

இன்றும் சிறந்த கிரிக்கெட்டை வழங்குவதற்காக BCCI வழிகாட்டுதல் குழுவில் உறுப்பினராக இருக்கிறார் .

 

இந்திய கிரிக்கெட் இருக்கும்வரையில் ரியல் தாதாவாக கங்குலி இருப்பார் , அவரது புகழ் இருக்கும் . 

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *