இந்திய அணியை மீட்டு எடுத்தவர்
2000 ஆண்டுவாக்கில் தொடர் தோல்வி , மேட்ச் பிக்சிங் என துவண்டு கிடந்த இந்திய அணியை , ரசிகர்களின் பேராதரவை நம்பிக்கையை இழந்திருந்த இந்திய அணியை மீட்டெடுத்த கேப்டன் சவுரவ் கங்குலி .
எவருக்கும் அஞ்சாத வீரன்
வான்கடே மைதானத்தில் இங்கிலாந்து வீரர் பிளிண்டாப் இந்திய அணியை வென்றபிறகு சட்டையை கழற்றி வெற்றியை கொண்டாடினார் . இதனை நினைவிலே வைத்திருந்த கங்குலி இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் வென்றவுடன் லார்ட்ஸ் மைதானத்தில் தனது ஜெர்சியை கலற்றி சுழற்றினார் .
பதிலுக்கு பதில்
வான்கடே மைதானத்தில் நடந்ததற்கு கங்குலியின் பதிலடி இது என்பது அனைவரும் அறிந்ததே . அந்த தருணம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மெய்சிலிர்க்கவைக்கும் தருணம் .
புதியவர்க்ளுக்கு அடையாளம் கொடுத்தவர்
கங்குலி என்றும் புதிய திறமையாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்து , அவர்களின் திறமையை வெளிபடுத்திட உறுதுணையாக இருந்தவர் .
இவரது தலைமையில் இந்திய அணி வெற்றிகளை மட்டும் குவித்திடவில்லை மாறாக இந்திய கிரிக்கெட்டுக்கு தனக்கு பிறகும் நிலைத்து நிற்கக்கூடிய பல வீரர்களை கொடுத்துவிட்டே சென்றார் .
- சேவாக் இளம் வீரராக இருந்தாலும் அவருக்கு முதல்வரிசை தான் சரியாக இருக்குமென கருதிய கங்குலி தன்னுடய இடத்தை அவருக்காக விட்டுக்கொடுத்தார் .
- சேவாக் சிறந்த டெஸ்ட் வீரராக வர திறமை கொண்டவர் என ஊக்குவித்தவர் , பின்னாளில் இதனை சேவாக் நினைவு கூறுகிறார் ” தான் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள்அடித்து சாதனை செய்ய கங்குலியின் ஊக்கமும் நம்பிக்கையும் காரணம் “
சிக்கலடைந்து கிடந்த இந்திய அணியை மீட்டெடுத்து இந்திய கிரிக்கெட்டை உயிர்ப்போடு இருக்க செய்ததில் கங்குலியின் பங்கு அளப்பரியது .
இன்றும் சிறந்த கிரிக்கெட்டை வழங்குவதற்காக BCCI வழிகாட்டுதல் குழுவில் உறுப்பினராக இருக்கிறார் .
இந்திய கிரிக்கெட் இருக்கும்வரையில் ரியல் தாதாவாக கங்குலி இருப்பார் , அவரது புகழ் இருக்கும் .