ரஜினி சொன்ன சமூக விரோதி யார் ?

ரஜினி குண்டடிபட்டு இறந்த அனைவரையுமா சமூக விரோதி என சொன்னார் ? அப்படியாக எனக்கு தெரியவில்லை .

அமைதியான ஊர்வலத்தை வன்முறைகளமாக மாற்றியவர்களை , காவலர்களை தாக்கியவர்களை , வாகனங்களை தீயிட்டு எரித்தவர்களை தானே சமூக விரோதி என்றார் .

இது புரியாமல், ஏன் இறந்த சமூக விரோதிகளுக்கு இழப்பீடு ?
போராடியவர்களை சமூக விரோதி என்பதா போன்ற கேள்விகளை முன்வைக்கிறார்கள் ?

தெரிந்து நடக்கிறதா ? அல்லது தெரியாமல் நடக்கிறதா ?

ரஜினி சொல்வதாலேயே சில விஷயங்கள் ஊதி பெரிதாக்கப்படுகின்றனவா ? அல்லது அவருக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் இருப்பதனால் அவர் இதுபோன்ற கருத்துக்களை கூறுவது சரியாகாது என்பதனாலா ? பாஜகவின் ஆதரவாளர் என்கிற தோற்றம் இருப்பதனாலா ?

உண்மையாலுமே ரஜினி போராடியவர்கள் அனைவரையுமே சமூகவிரோதி என கூறினாரா ?

உங்கள் கருத்து ?

One thought on “ரஜினி சொன்ன சமூக விரோதி யார் ?

  • June 1, 2018 at 9:37 am
    Permalink

    மீடியாக்களின் ஆதிக்கத்தில் இருக்கும் இவ்வுலகில் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் அல்லது மக்களிடம் நன்கு அறிமுகமானவர்கள் எதைக்கூறினாலும் அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் பெரிதுபடுத்துகிறார்கள் …
    ரஜினி அவர்களின் கூற்றும் அப்படிதான் பெரிதுபடுத்தப்பட்டது …ரஜினி அவர்கள் தூத்துக்குடி சென்றபோது இளைஞன் ஒருவர் ‘யார் நீங்க … சென்னையிலிருந்து வர 100 நாட்கள் ஆனதா ‘ என்று கேட்டார் … அது , மீடியாக்களிலும் , சமூகவலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டு பகிரப்பட்டது … ரஜினியை வைத்து பல மெமீஸ்களும் போஸ்டர்களும் இயற்றப்பட்டன … ஆனால் , இன்றுகாலை அந்த இளைஞன் நான் ரஜினியிடம் கேட்டது தவறான அர்த்தத்தில் பரப்பப்படுகிறது .. உண்மையில் நான் கேட்கவந்தது முன்னாடியே வந்திருந்தால் எங்களுக்கு இன்னும் பலமாக இருந்திருக்குமே’ என்ற எண்ணத்தில் கேட்டதாக கூறியுள்ளார் ..இங்கு யார்மேல் தவறு ??

    ரஜினியா ?? மீடியாவா ?? அந்த இளைஞனா ??

    நான் ஒரு நடிகனாக தூத்துக்குடிக்கு செல்கிறேன் என்று கூறிவிட்டுதான் சென்றார்… அவரிடம் ஏன் இத்தனை கேள்விகள் ??

    நாம் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்த ஸ்டாலினோ அல்லது முதலமைச்சரோ அங்கு செல்லும்போது அவர்களிடம் ஏன் இத்தனை கேள்விகள் கேட்கவில்லை?

    ரஜினி அவர்கள் ‘ஆன்மீக அரசியல்’ என்றதும் அவர் பிஜேபி ஆதரவாளர் என குற்றம் சாட்டினார்கள் … அவர் பிஜேபியின் ஆதரவாளர் என என்றாவது தன்னை காட்டிக்கொண்டாரா? இல்லை … அவர் பெயரைவைத்து சிலர் தங்களின் கட்சிக்கு ஆதரவாளர்களை திரட்டுகின்றனர் …

    இவையனைத்திற்கும் ‘ரஜினி’ என்ற ஒருவரின் வசியம்தான் காரணம் …

    குறிப்பு: நான் ரஜினி ரசிகன் அல்ல… சாதாரண குடிமகன் …

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *