தேர்தல் ஆணையத்தின் அட்டை கத்தி அதிகாரம்….என்ன தான் தீர்வு ?

இந்தியாவின் ஆணிவேர் மக்களாட்சி .மக்களாட்சியினை நிறுவுவதற்கான உறுப்பினர்களை முறையாக தேர்தெடுக்க நடத்தப்படுவது தேர்தல் ..அதனை நடத்திக்கொண்டிருப்பது தேர்தல் ஆணையம் .

தற்போதய காலகட்டத்தில் தேர்தலில் வாக்காளர்களுக்கு குறைந்தபட்சம் 2000 முதல் அதிகபட்சமாக 5000 வரைகூட வழங்கப்படுகிறது . குறிப்பாக தமிழகத்தில் இந்த நிலை மிக மோசம் . இதற்கு உதாரணமாக அரவக்குறிச்சி தஞ்சாவூர் ஆர்கே நகர் இடைத்தேர்தல் போன்றவற்றை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளதை கூறலாம் ..

யார் தான் குற்றவாளி :

அரசு இயந்திரத்தை முழுமையாக பயன்படுத்தியும் சந்தேக நபர்கள்  எவரையும் பணியிட மாறுதல் செய்தும் பண புலக்கத்தை கட்டுபடுத்த முடுயவில்லை . காரணம் எந்த கட்சியும் தேர்தல் ஆணையத்தை ஒரு பொருட்டாக மதிப்பதே கிடையாது .

அமைச்சராக இருக்ககூடிய விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து 89 கோடி ரூபாய்க்கான செலவு பட்டியலை கைப்பற்றியுள்ளது வருமான வரித்துரை . இதனை அடிப்படையாக கொண்டே தேர்தலை ரத்து செய்ததாக அறிவிக்கிறது தேர்தல் ஆணையம் . கூலாக தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல் நடத்த தகுதியில்லை என்கிறார் தினகரன் .

ஒவ்வொரு முறையும் தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்யும்போது பணம் கொடுத்ததற்காக எந்த வேட்பாளரையும் தகுதி நீக்கம் செய்வதில்லை . அபராதம் கூட விதிப்பதில்லை .

ஏன் என்றால் தகுதி நீக்கம் செய்யும் அதிகாரமோ அபராதம் விதிக்கும் அதிகராமோ தேர்தல் ஆணையத்திற்கு வழங்கபடவில்லை என்கிறார் முன்னால்
தலைமை தேர்தல் ஆணையர்  கிருஷ்ணமூர்த்தி . அப்படியென்றால் தேர்தல் ஆணையம் வைத்திருப்பது அட்டை கத்தி அதிகாரம் தானே .

என்ன செய்யவேண்டும் :

உடனடியாக நிலமையை உணர்ந்து மத்திய அரசு தேர்தல் ஆணையத்திற்கு நிரந்தரமாக அதிகாரம் வழங்கிட சட்டம் இயற்றிட வேண்டும் .

அரசியல் கட்சிகள் மறுத்தால் , உச்சநீதிமன்றம் ஒருமுறை கூறியுள்ளதை ‘ நேர்மையான சுதந்திரமான தேர்தலை நடத்திட இறைவனிடம் ( மத்திய அரசிடம் ) கையேந்த வேண்டிய அவசியமில்லை ‘ முன்மாதிரியாக கொண்டு குற்றம் இழைத்தவர்களை தகுதி நீக்கம் செய்திடல் வேண்டும் .

ஒருமுறை தகுதி நீக்கம் செய்தால் போதும் அனைவருக்கும் ஒரு அச்சம் இருக்கும் …

மக்களே நாமும் திருந்திட வேண்டும் .

நன்றி
பாமரன் கருத்து

One thought on “தேர்தல் ஆணையத்தின் அட்டை கத்தி அதிகாரம்….என்ன தான் தீர்வு ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *