#PadManChallenge – சானிட்டரி நாப்கினுடன் ஒரு புகைப்படம்

(படித்துவிட்டு ஒரு தோழனுக்கோ தோழிக்கோ பகிருவது உங்கள் கடமை)
கோவையை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் விடுத்த ஒரு சவாலுக்காக நடிகர்கள் ,நடிகைகள் , விளையாட்டு வீரர்கள் ,ஆண்கள் , பெண்கள் என அனைவரும் பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கினுடன் ஒரு புகைப்படம் எடுத்து “#PadManChallenge ” ஹேஸ்டேக்  உடன் ட்விட்டரில் வெளியிட்டு வருகின்றனர் .

சாதாரன மனிதனின் சவாலுக்காகவா ?

அருணாச்சலம் சாதரண மனிதர் அல்ல . கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவர் மிக குறைவான விலையில் சானிட்டரி நாப்கின் தயாரிப்பதற்கான இயந்திரத்தை வடிவமைத்த சாதனையாளர் .
இவருடைய வாழ்க்கை வரலாற்றை வைத்துதான் அக்சய் குமார் நடிக்கும் “Pad Man ” திரைப்படம் தயாராகிறது .
இவர் “உங்களால் சானிட்டரி நாப்கினுடன் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட முடியுமா என்றார் ? ” . பெண்களுக்கு மாதவிடாய் காலம் என்பது இயற்கையான ஒன்று . ஆனால் இன்று வெளியில் பேசுவதற்கு அசௌகரியமான வெட்ககரமான ஒரு நிகழ்வாக மாற்றப்பட்டு விட்டது .கடைகளில் சானிட்டரி நாப்கின் பெயரைக்கூட சொல்லி வாங்க வெட்கப்பட்டு இருக்கின்றனர் இன்றைய பெண்கள் . இந்த அசௌகரியத்தை  ,சங்கடத்தை , வெட்கத்தை ஒழித்து periods என்பது இயற்கையானது என்பதையும் சானிட்டரி நாப்கின் ஒழித்துவைத்து பயன்படுத்தக்கூடிய பொருள் அல்ல என்பதையும் காட்டிடவே இந்த சவால் .

நாம் என்ன செய்யவேண்டும் :

ட்விட்டரில் புகைப்படங்கள் இட்டதனால் இன்று முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கின்றது இந்த விசயம் . ஆனால் உண்மையான மாற்றம் ஒவ்வொரு சகோதரனிடத்தில்  இருந்தும் , ஒவ்வொரு அப்பாவிடமிருந்தும் , ஒவ்வொரு நண்பனிடத்தில் இருந்தும் ,ஒவ்வொரு பெண்களிடத்தில் இருந்தும் தொடங்கியாக வேண்டும் .

periods இயற்கையானது சானிட்டரி நாப்கின் சாதாரண மறைத்துவைக்க வேண்டிய பொருள் அல்ல என்பதை இந்த சமூகத்திற்கு காட்டிட வேண்டும் , பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு  அறிவுறுத்தி வளர்க்க வேண்டும் .

முடிந்தால் PadManChallenge இல் பங்கேறுங்கள் …விளிப்புணர்வை ஏற்படுத்துங்கள் .

முடியாவிட்டால் இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் அனுப்பிடுங்கள் .

நன்றி

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *