Paris Agreement on Climate Change | Tamil
அதிகரித்து வரும் சுற்றுசூழல் மாசுபாட்டின் காரணமாக பூமியின் வெப்பநிலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே . அந்த வெப்பநிலை அதிகரிப்பை 2 டிகிரி செல்சியஸ் அளவிற்குள்ளாக கட்டுப்படுத்துவதை இலக்காக கொண்டு உலக நாடுகள் (195 நாடுகள் ) பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன .
அதற்காக வெளியிடும் கார்பன் அளவினை குறைக்கவும் , சுற்றுசூழலை காத்திட முதலீடு செய்யவும் அனைத்து நாடுகளும் சம்மதித்து கையெழுத்திட்டுருப்பது வரவேற்புக்குரிய ஒப்பந்தமாக கருதப்படுகிறது.
பூமியின் வெப்பநிலை மாறும்போது காலநிலை நாம் கணிக்க முடியாதபடி மாறுகிறது . இதனால் இயல்பான பூமியின் காலநிலை மாறி அதிக மழைபொழிவு , வறட்சி , புயல் என கட்டுபாடற்ற காலநிலையால் நாம் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன . ஏற்கனவே பூமி அதிக மாசடைந்து பூமியின் வெப்பநிலை அதிகரித்து கொண்டிருப்பதனால் ஏற்படுகின்ற காலநிலை மாற்றங்களை அனுபவித்து கொண்டிருக்கின்றோம் .
இதே நிலை தொடர்ந்தால் நிச்சயமாக நமது வருங்கால சந்ததிகள் வாழத்தகுந்த இடமாக பூமி இருக்காது என்பதே உண்மை .
பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் இவ்வாறு கூறுகிறார் “பாரீஸ் ஒப்பந்தத்தில் நாம் இணைந்திருப்பது நம்பிக்கையையும் பொறுப்பையும் உணர்த்துகிறது . தனித்தனி மனிதர்களாக இணைந்து செயலாற்றுவதை விட நாடாக இணைந்து செயல்படும்போது வலிமையானதாக அர்த்தமுள்ளதாக மாறுகிறது “
பாரீஸ் ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்கள் என்ன ?
புவி மாசடைதலை தடுத்து புவியின் வெப்ப உயர்வினை கட்டுப்படுத்த பாரீஸ் ஒப்பந்தம் பின்வரும் முக்கிய நோக்கங்களை வலியுறுத்துகிறது .
ஒவ்வொரு நாடும் வெளியிடுகின்ற கார்பன் வாயுக்களை நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவிற்குள் குறைக்க வேண்டும் .
சுற்றுசூழல் மாறுபாடுகளையும் காலநிலை மாறுபாடுகளையும் கண்காணிக்க முழுமையான சுதந்திரத்தோடு இயங்கக்கூடிய அமைப்புகள் வேண்டும்
காலநிலை மாறுபாடுகளை சமாளிக்கும் அளவிற்கு ஒவ்வொரு நாடும் திறமையுள்ளதாக மாற்றப்படுதல் வேண்டும் .
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டால் அதிலிருந்து மீண்டுவரக்கூடிய திறனை பெற்றிருக்க வேண்டும்
சுற்றுசூழலை மீட்டெடுக்க பண உதவி , நாட்டினை தூய்மையாக வைத்துக்கொள்ள உதவி என செயல்பட வேண்டும் .
பாரீஸ் ஒப்பந்தத்தில் இணைந்துள்ள ஒவ்வொரு நாடும் வெளியிடும் கார்பன் அளவினை குறைக்க உடனடி மற்றும் நெடுங்கால திட்டங்களை கொண்டிருக்க வேண்டும் .
Pingback:அழிவின் விளிம்பில் பூமி | CO2 வை வெளியேற்றுவது எவ்வளவு முக்கியமானது ? எப்படி செய்வது ? – பாமரன் க