சாவர்க்கர் – புல் புல் பறவை சர்ச்சை | கடுமையான விமர்சனங்கள் எழ காரணம் என்ன?

கன்னட பாடப்புத்தகத்தில் சாவர்க்கர் குறித்து இடம்பெற்றுள்ள மிகைப்படுத்தப்பட்ட கட்டுரை தான் தற்போது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. கன்னட பாடப்புத்தகத்தில் “களவன்னு கெடவரு” என்ற தலைப்பில் சாவர்க்கர் குறித்து எழுதப்பட்டுள்ளது. இதன் தமிழ் அர்த்தம் “நீரோட்டத்திற்கு எதிராக செல்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்” என்பது தான். எழுத்தாளர் கே.டி கட்டி சாவர்க்கர் இருந்த சிறையை நேரடியாக பார்த்த பிறகு அவர் எழுதிய பயணக்குறிப்பு அடிப்படையில் பின்வரும் கருத்துக்கள் பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 

Read more

6 ஜெயமோகன் சிறந்த புத்தகங்கள் | 6 Jeyamohan Best Books

தமிழ் வாசகர்கள் தவறவிட முடியாத ஒரு சிறந்த எழுத்தாளர் ஜெயமோகன். இவர் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல, சிறந்த பேச்சாளரும் கூட. ஜெயமோகன் அவர்கள் பல நாவல்கள், கட்டுரைகள், கதைகள் எழுதி இருக்கிறார். அவற்றில் சிலவற்றை உங்களுக்கு இங்கே அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவருடைய புத்தகங்களை நீங்கள் வாங்கி படிக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். வாங்கிப்படிக்க இயலாதவர்களுக்கும் அவரது எழுத்துக்கள் சென்று சேர வேண்டும் என்பதற்காக சில புத்தகங்களின் PDF இணைக்கப்பட்டுள்ளது.

Read more

இலவசங்களுக்கு முற்றுப்புள்ளியா? இலவசங்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றும் உச்சநீதிமன்றம்

அண்மைய காலமாகவே இலவசங்களுக்கு எதிரான கருத்துக்கள் பரவலாக எழுந்து வருகின்றன. குறிப்பாக, தேர்தல் நேரத்திய இலவச அறிவிப்புகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் கடுமையான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பொருளாதார சூழலை கவனிக்காமல் வெறுமனே தேர்தல் வெற்றிக்காக அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை வெளியிடுகின்றன என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் நீண்ட நெடிய விவாதம் வேண்டும் என்பது அனைவரது கருத்தாக உள்ளது. சாமானிய மக்களும் இந்த விவகாரம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அறிய வேண்டும் என்பதற்க்காக இந்தப்பதிவு எழுதப்படுகிறது. படியுங்கள் – பகிருங்கள்.

Read more

அசோகமித்திரன் எழுதிய “தண்ணீர்” நாவல் | Asokamitran Thaneer PDF Download

தண்ணீர் பிரச்சனை இன்று அனைவருக்குமான பிரச்சனையாக மாறிவிட்டது. கிராமம், நகரம் என்ற பாகுபாடு ஏதுமின்றி இந்தப்பிரச்சனை இருக்கிறது. இது வெறும் தனிப்பட்ட பிரச்சனையாக மட்டுமல்லாமல் உறவுகளுக்குள்ளும் சில

Read more

100 சிறந்த தமிழ் புத்தகங்கள் | 100 Best Books In Tamil

தமிழ் எழுத்துலகின் ஆளுமைகளில் மிக முக்கியமானவரான திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தனது வாசிப்பு அனுபவத்தில் இருந்து 100 சிறந்த தமிழ் புத்தகங்களை வரிசைப்படுத்தி தந்துள்ளார். அந்தப்

Read more

இறையுதிர் காடு புத்தகம் | போகர் செய்த நவபாஷாண முருகன் சிலை வரலாற்றை அறிய படிக்கலாம்

அசைவில் தான் உலகம் இயங்குகிறது. கோள்கள், பூமி, காற்று, ஆறு என எல்லா இயற்கை சார்ந்த அசைவுகளே கால ஓட்டத்தை நகர்த்திச் செல்கிறது. அப்படி அசைய அசைய மனிதன் தனது செயல்களை செய்கிறான். செயல்கள் நன்மையோ அல்லது தீமையோ புரிகின்றது. அதற்கேற்ப கர்மங்களில் சிக்கி இந்த காற்றடைத்த உடலையும், மலஜலம் புரியும் சரீரத்தையும் மனிதனின் ஆன்மா சுமந்துகொண்டு திரிகிறது. அந்த அசையும் தன்மையே விடுத்து அசையா தியானத்தில் அமர்ந்து தன்னையே அறிதல் என்னும் நிலையை அடைவதே சித்தம் எனப்படும். அத்தகைய மனிதத்துவத்தை கடந்த மாமனிதர்களை நாம் சித்தர்கள் என்கிறோம்.

Read more

காசி – பாதசாரி – சிறுகதை

போன வருஷம்‌ இதே மாதத்தில்‌ காசி தற்கொலை செய்துகொண்டு பிழைத்து -விட்டான்‌. கல்யாணம்‌ செய்துகொண்ட நான்காவது மாதம்‌, சவர பிளேடால்‌ கழுத்தை ஆழ அறுத்துக்‌கொண்டான்‌.உறைந்த ரத்தப்‌ படுக்கைமீது   நினைவிழந்து கிடந்தவனை கதவை உடைத்துப்‌ புகுந்து எடுத்து ஜி.எச்‌.சில்‌ அட்மிட்‌ செய்தார்கள்‌.

Read more

ஆன்லைன் ரம்மி எப்படி செயல்படுகிறது? தடை எப்போது வரும்? தடை மட்டுமே போதுமா? இளையோரே உங்களுக்காக!

ஆன்லைன் ரம்மியில் அளவுக்கு அதிகமாக பணத்தை இழந்த பல இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாகி வருகிறது. இப்போது, ராசிபுரம் அருகே உள்ள ஊரை சேர்ந்த சுரேஷ் என்கிற இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிரான தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அது அவசர கதியில் போதிய காரணம் இன்றி கொண்டுவரப்பட்டுள்ளது என்ற வாதத்தை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் தடையை நீக்கியது. இப்போதைய திமுக அரசு, முன்னாள் நீதிபதி சந்துரு அவர்களின் தலைமையில் ஒரு குழு அமைத்து ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிப்பது குறித்து ஆராய குழு அமைத்தது. அந்தக்குழு தனது அறிக்கையை கடந்த மாதம் சமர்ப்பித்துள்ள நிலையில் விரைவில் தடை சட்டம் வரும் என எதிர்பார்க்கலாம். ஆனால் அது மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்குமா என்பதை நாம் விரிவாக பேசுவோம்.

Read more

தொடர் தற்கொலைக்கு காரணம் மீடியாவா? கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தை மீடியா சரியாக கையாண்டதா?

ஆங்கிலத்தில் “Copycat Suicide” என்று சொல்லப்படும் தொடர் தற்கொலைகளுக்கு பல சமயங்களில் மீடியா செய்திகளும் காரணமாக அமைவதாக மனநல வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஒரு செய்தியை செய்தியாக மட்டும் மீடியாக்கள் கடந்து செல்லும் போது இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவது இல்லை. மாறாக, ஒரு செய்தியை அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பும் போது தான் அத்தகைய சிக்கல்கள் எழுகின்றன.

Read more

முதல்நாளே இளையராஜா ஆப்சென்ட் | அலைக்கழிக்கப்படுகிறதா நியமன எம்பி பதவி?

மாநிலங்கள் அவைக்கு 12 நியமன பதவிகள் உள்ளன. கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குகிறவர்களை குடியரசுத்தலைவர் நியமன எம்பியாக நியமனம் செய்திட அரசியல் சாசனம் அவருக்கு உரிமையை வழங்குகிறது. இவர்களது துறை அனுபவம் மற்றும் அறிவாற்றல், மாநிலங்களவையில் விவாதம் நடக்கும் போது உதவிகரமாக இருக்கும் என்ற நோக்கத்தில் தான் இந்த மாதிரியான நியமன எம்பி பதவி கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்தப்பதவியில் நியமிக்கப்படும் எம்பிக்களில் பலர் அவைக்கு வருவதே இல்லை. இது நிச்சயமாக கேள்விக்கு உட்படுத்த வேண்டிய விசயம் என்பதனால் நாம் இங்கே இது குறித்து விரிவாக பேச இருக்கிறோம்.

Read more