facebook அடுத்த அதிரடி ….

facebook அடுத்த அதிரடி …உண்மை செய்திகளுக்கே இனி முக்கியத்துவம் 

facebook அவ்வப்போது தன்னை மேம்படுத்திக்கொண்டே வருகின்றது . அந்தவகையில் இதற்கு முன்பாக விளம்பரங்கள் தொடர்பான போஸ்ட்களை விட நண்பர்கள் குடும்பத்தினர் பதிவிடும் பதிவுகளை காட்டிடவே facebook முன்னுரிமை அளித்து வந்தது .

 

அதனை தற்போது சிறு மாறுதலுக்கு உட்படுத்தி இருப்பதாக தெரிவித்து இருக்கிறார் facebook நிறுவனர் மார்க் . அந்த புதிய மாற்றத்தின்படி இனி நம்பிக்கையான செய்திகளை கொண்ட பதிவுகளுக்கு கூடுதலாக முக்கியத்துவம் கொடுத்து பிறருக்கு காட்டப்படும் .

அதன்படி நம்பிக்கையான , தகவல்களை உள்ளடக்கிய ,லோக்கல் பதிவுகளுக்கு முக்கியதுவம் அளித்து காட்டப்படும் . அப்படிக்காட்டும்பட்சத்தில் மக்கள் எளிதாக அதுபற்றி பேசுவதற்கும் தங்களுக்குள்ள கருத்துக்களை பரிமாற்றம் செய்துகொள்ளவும் எளிமையாக இருக்கும் என்பது மார்க்கின் எண்ணம் .

நம்பிக்கைக்குரிய செய்தியாளர்களை கண்டுபிடிப்பது எப்படி ?

செய்திகள் தற்போது பலரால் பகிரப்படுகிறது . அதில் உண்மையான செய்திகளை பதிவிடுபவர்களை எவ்வாறு facebook கண்டுபிடிக்க போகிறது என்பதுதான் சவாலாக இருக்கும் . இதற்கு facebook அதன் பயனாளர்களின் உதவியை நாட இருக்கின்றது .

ஆம் தற்போது சில செய்தி நிறுவனங்களை facebook எளிமையாக அடையாளம் கண்டுகொள்ளும் . ஆனால் அவர்களை தவிர சமூகத்தில் மக்களின் நம்பிக்கையை பெற்ற நபர்களும் இருக்கிறார்கள் . அவர்களை அடையாளம் காண facebook நம்மிடமே கருத்துக்களை கேட்க இருக்கின்றது .

அதன்படி நமக்கு சில கேள்விகளை facebook கேட்கும் அதில் நாம் பதிவிடும் தகவல்களை பொறுத்து உண்மையான செய்திகளை பதிவிடுபவர்கள் யார் என்பதை facebook அடையாளம் கண்டுகொள்ளும் .

அவர்களின் பதிவுகளுக்கே facebook முன்னுரிமை கொடுத்து காண்பிக்கும் .
தன் மீதான நம்பிக்கையை இன்னும் மேம்படுத்திக்கொள்ள facebook எடுத்திருக்கும் அடுத்த முயற்சி இது .

நெட் நியூட்ராலிட்டி எனப்படும் “இணைய சமநிலை” – பிரச்சனை முழு விவரம் ?

 

நன்றி,
பாமரன் கருத்து

Share with your friends !

One thought on “facebook அடுத்த அதிரடி ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *