Motivational Quotes In Tamil | ஊக்கமூட்டும் சிந்தனைகள்

Everyone who needs to get success will always be eager to read some Motivational Quotes when they are struggling to achieve success. Here, we provide 50 unique motivational quotes in tamil that inspire and motivate you. If you want to read more motivational quotes in tamil or motivational quotes images you can get them here.

Motivational Quotes In Tamil

ஊக்கமூட்டும் சிந்தனைகள் உங்களுக்காக…..

  1. வாழ்க்கை என்பதை சம்பாதிக்க மட்டுமே அல்ல, சாதிக்கவும் தான்.
  2. முடியும் என மனதார நம்பினால் நிச்சயமாக அதனை செய்து முடிக்க முடியும்.
  3. எப்போதும் வெற்றி பெற்றுக்கொண்டே இருக்க முயற்சி செய்யாதீர்கள். மதிப்பும் உங்களுக்கு முக்கியம்.
  4. பிறர் போட்ட பாதையில் நடப்பது எளிது தான். ஆனால், அதிலே நடந்தால் ஒன்றும் உங்களுக்கு கிடைக்காது.
  5. தோல்விக்கு சாக்கு போக்கு தேடும் ஒருவரால் வெற்றி பெற உண்மையாக உழைக்க முடியாது.
  6. முயற்சிக்காமல் இருந்தால் நீங்கள் வெல்வதற்கான 100% வாய்ப்பை இழக்கிறீர்கள்.
  7. 1000 முறை தோற்றும் ஒருவன் 1001 ஆவது முறையாக முயற்சிக்கிறான் எனில் அவனே உண்மையான வெற்றியாளன்.
  8. ஒரு விசயத்தை அடைய நாம் முயற்சிக்கப் போகிறோம் என எடுக்கும் முடிவு தான் கடினமானது. மற்றதெல்லாம் எளிமையானது தான்.
  9. நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றிக்கு நெருக்கமாக அழைத்துச் செல்லும்.
  10. வாழ்க்கை என்பது சாம்பதிப்பது செலவு செய்வது என்பதல்ல…வாழ்வது மற்றும் கொடுப்பது.
  11. அடுத்ததாக என்ன செய்யலாம் என யோசிப்பவன் தான் வெற்றியை நோக்கி நகர்கிறான்.
  12. சரியான திட்டமிடல் இருந்தால் வெற்றியில் பாதியை அடைந்தது போல.
  13. தவறை ஒப்புக்கொண்டு பின்வாங்கி இன்னொரு விதத்தில் முயற்சி செய்வதும் வெற்றிக்கான சூத்திரம் தான்.
  14. வெற்றிக்கான ஒரே சூத்திரம் கடுமையான முயற்சி மட்டுமே.
  15. நாம் உண்மையில் முன்னேற வேண்டும் என நினைக்கும் ஒருவர் உடன் இருந்தால் போதும் நாம் எளிதில் வெற்றி அடையலாம்.
  16. நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்.
  17. வாழ்க்கையில் 10% அதுவாக நடப்பது. மீதம் உள்ள 90% நாம் எப்படி எதிர்வினை ஆற்றுகிறோம் என்பதில் தான் இருக்கிறது.
  18. தன்னிடம் ஒன்றும் இல்லை என நினைக்கும் போதே நாம் பாதி தோற்றுப் போகிறோம்.
  19. வெல்வோம் என நினைத்துப் போராடும் போது நமக்கான உதவிகள் தானே கிடைக்கும்.
  20. ஒரு மரம் நட உகந்த காலம் இருபது வருடங்களுக்கு முன்பு. அல்லது இப்போதாவது வைத்து விடுங்கள்.
  21. திட்டமிட்டு வாழாத வாழ்க்கை வாழ்க்கையே இல்லை.
  22. ஒருபோதும் தோல்வியின் வலியை வெளிக்காட்டிக் கொள்ளாதீர்கள்.
  23. வாழ்நாள் மிகவும் குறுகியது. ஆகவே, திட்டமிட்டு வாழுங்கள்.
  24. உங்களுக்கு வேண்டுவதில் வெற்றி பெறுவது தான் உண்மையான வெற்றி.
  25. சூழ்நிலையால் ஒருபோதும் பாதிக்கப்படாதீர்கள். உங்கள் முடிவுகளால் உங்கள் வாழ்வு நடக்கட்டும்.
  26. ஒவ்வொரு குழந்தையும் தனித்திறன் உடன் தான் பிறக்கிறது. வளர்ந்த பிறகும் அது இருப்பதில் தான் இருக்கிறது வெற்றி.
  27. கடற்கரை தெரியாவிட்டாலும் தைரியமாக இருக்கும் மனோநிலை இருந்தால் கடலில் நீந்துங்கள்.
  28. வெற்றி பெற்றவர்களை மட்டும் தான் உலகம் நியாபகம் வைத்திருக்கும்.
  29. நீங்கள் ஒரு நாளை நகர்த்துகிறீர்களா அல்லது ஒரு நாள் உங்களை நகர்த்துகிறதா என்பதே முக்கியம்.
  30. முடியும் என நம்பினால் முயற்சி செய்யலாம்.
  31. நாம் எதற்காக பிறந்தோம் என தெரிந்துகொள்ளும் நாள் தான் நீங்கள் உண்மையாகவே பிறந்த தினம்.
  32. சரியான பதிலடி மிகப்பெரிய வெற்றி தான்.
  33. தைரியமாக முன்னேறும் போது தடைகள் தானாக அகலும்.
  34. உன்னால் முடியாது என்று ஒருவர் சொன்னால், முடித்துக் காட்டி பதில் சொல்லுங்கள்.
  35. வெற்றிக்கான சரியான கதவை அடைவது தான் கடினம். கண்டுவிட்டால் வெற்றி பெறுவது எளிது. 
  36. மிகப்பெரிய மனிதர்களை பின்பற்றுவது ஒருபோதும் தவறல்ல.
  37. நேர்மையான முறையில் அடையும் வெற்றி தான் உண்மையான வெற்றி
  38. பிறரையும் அழைத்துக்கொண்டு சிகரத்தை அடைந்திட சிலரால் மட்டுமே முடியும்.
  39. முயற்சி செய்திடும் காலங்களில் உதவியவர்களை வெற்றி கண்ட பின்னர் மறக்க கூடாது.
  40. உண்மையான உழைப்பாளிக்கு யாருடைய உதவியும் தேவையில்லை.
  41. உண்மையை பேசுகிறவர்கள் என்ன பேசினோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டாம்.
  42. பயந்தவர்களால் வெற்றி பெற முடியாது.
  43. உங்களிடம் என்ன இருக்கிறதோ அதனை வைத்து முயலுங்கள்.
  44. பத்து முறை தோற்றால் பதினோரு முறை எழுந்து நில்லுங்கள்.
  45. நீங்கள் வெல்லும் போது கிடைக்கும் சந்தோசம் தான் முயற்சியின் வலிக்கு ஏற்ற மருந்து.
  46. காற்று உங்களுக்கு சாதகமாக இல்லாதபோது துடுப்பை எடுத்துக்கொள்ளுங்கள்.
  47. கனவுகள் இல்லாமல் சாதிக்க முடியாது.
  48. உங்கள் கைகள் தான் முதலில் உங்களுக்கு துணை நிற்கும்.
  49. தவறுகள் செய்யாமல் சாதிக்க முடியாது.
  50. காலம் போய்விட்டது என கலங்காதீர்கள். இன்றே துவங்குங்கள். 

Here, you read the powerful motivational quotes in tamil. We hope these 50 motivational quotes in tamil give some hope and energy to achieve success. Put your thoughts and feelings in the comments section.

Download More Motivational Quotes Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *