Mobile Tapping All you need to know | Mobile Tapping நீங்க தெரிந்துகொள்ள வேண்டிய விசயங்கள்

Tapping என்பது நமக்கு தெரியாமலே நமது மொபைல் , கணிணி போன்றவற்றில் என்ன செய்கிறோம் என்பதனை பிறர் அறிந்துகொள்ள செய்வது.

 

தகவல் தொழில்நுட்பத்துறை அதீத வளர்ச்சியை அடைந்துகொண்டிருக்க கூடிய சூழ்நிலையில் Tapping என்கிற வார்த்தையை நிச்சயம் அனைவருமே கேட்டிருப்போம். ஆனால் Mobile Tapping செய்ய முடியுமா ? எப்படி செய்கிறார்கள் ? எப்படி கண்டுபிடிப்பது என்பது போன்ற தகவல்கள் தெரியாமலிருக்கும் . அதனைத்தான் தற்போது இந்த பதிவில் தெரிந்துகொள்ள இருக்கின்றோம் .

 

Mobile Tapping செய்ய முடியுமா ? | Is that possible to Tap your Mobile?

 

நிச்சயமாக முடியும். ஆம் நிச்சயமாக மொபைல் போன்களை டேப்பிங் செய்ய முடியும். டேப்பிங் என்பதனை இரண்டு முறைகளாக பிரிக்கலாம் .

முதலாவது , பாதுகாப்பு ஏஜென்சிகள் செய்வது . குற்றவாளிகள் , சந்தேகப்படும் நபர்கள் போன்றவர்களின் தொலைபேசி உரையாடல்கள் , மெசேஜ் போன்றவற்றை டேப்பிங் செய்வார்கள் .
இது அனைத்து நாடுகளிலும் நடக்கும் இயல்பான ஒன்றுதான் . ஆனால் முறையான அனுமதியின்றி எவருடைய தொலைபேசியையும் ஒட்டுக்கேட்க இவர்களுக்கும் உரிமை இல்லை .

அடுத்தது தனிநபர்கள் டேப்பிங் செய்வது . உதாரணத்திற்கு குழந்தைகளின் மொபைல்
செயல்பாடுகளை கண்காணிக்க பெற்றோர் டேப்பிங் செய்வது , தனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவரின் மொபைலை டேப்பிங் செய்வது , போட்டியாக அல்லது எதிரியாக இருப்பவர்களின் மொபைல்களை டேப்பிங் செய்வது என பலவிதமான முறைகளில் டேப்பிங் நடக்கிறது .

 

டேப்பிங் எவ்வாறு செய்கிறார்கள் ? | How to Tap Mobile?

  • சிக்னலை இடைமறித்து கேட்பது
  • மொபைலில் ஆப் (App) இன்ஸ்டால் செய்து tapping செய்வது

பாதுகாப்பு ஏஜென்சிகளிடம் இடைமறித்து கேட்பதற்கான கருவிகளும் அதனை பயன்படுத்த முறையாக பயிற்சி அளிக்கப்பட்டவர்களும் இருப்பார்கள் . அதனை கொண்டு எளிமையாக சட்டபூர்வமாக அனுமதியுடன் டேப்பிங் செய்வார்கள் .

தனி நபர்கள் டேப்பிங் செய்வதற்கு சந்தையில் தற்போது பல மொபைல் ஆப்கள் இலவசமாகவும் மலிவான விலைக்கும் கிடைக்கின்றன . இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது , அந்த ஆப்பை விலைக்கு வாங்கி யாருடைய மொபைலை கண்காணிக்க வேண்டுமோ அதில் இன்ஸ்டால் செய்துவிட வேண்டும் . ஐகான் எதுவுமே உருவாகாது அதனால் அப்படி ஒரு ஆப் மொபைல் பயன்படுத்துபவருக்கு தெரியாது . அந்த ஆப் மொபைலுக்கு வரும் கால் , மெசேஜ் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் குறிப்பிட்ட சர்வருக்கு அனுப்பிக்கொண்டே இருக்கும் . மறுபுறம் நீங்கள் லாகின் செய்து அவர் மொபைலில் செய்த அனைத்து விவரங்களையும் பெறலாம் .

 

டேப்பிங் செய்வது சட்டப்படி சரியானதா ? | Tapping is Legal?

 

சரியாக சொல்ல வேண்டும் என்றால் அடுத்தவரின் அனுமதியின்றி அவரின் மொபைல் உள்ளிட்ட எவற்றையும் டேப் செய்வது குற்றமே .

ஆனால் பாதுகாப்பு ஏஜென்சிகள் முறையான அனுமதி வாங்கித்தான் இதனை செய்திட வேண்டும் . ஆனால் அங்கிருப்பவர்களும் மனிதர்கள் என்பதனை மறக்க கூடாது .

மற்றபடி குழந்தைகளின் நடவெடிக்கையை கண்காணிக்க டேப்பிங் செய்வது , தனக்கு கீழே பணி புரிபவர்களை சோதனை செய்ய டேப்பிங் செய்வது போன்றவையும் நடக்கிறது , இவை அவ்வளவு பெரிய குற்றம் அல்ல .

மற்றபடி மிரட்டலுக்காகவும் அடுத்தவர்களின் ரகசியங்களை அறிந்துகொள்ளும் நோக்கத்துடன் நடைபெரும் டேப்பிங் அனைத்துமே தண்டனைக்கு உரிய குற்றமே .

 

டேப்பிங் செய்யப்பட்டிருப்பதை கண்டறிவது எப்படி ? | How to know Tapped Mobile Phones?

பாதுகாப்பு ஏஜென்சிகள் போன்றவை இடைமறித்து கேட்பதனை நம்மால் எளிமையாக கண்டறிய முடியாது .

ஆப் போன்றவற்றினை கொண்டு tapping செய்தால் பின்வருவனவற்றை கொண்டு கண்டறியலாம் .

நீங்கள் பயன்படுத்தாமலே உங்களுடைய மொபைல் டேட்டா அதிவிரைவாக குறைந்தால் டேப்பிங் செய்யப்பட்டிருக்க வாய்ப்புண்டு

அதிவிரைவாக மொபைல் சார்ஜ் இறங்கும் பிரச்சனையும் ஏற்படும் .

சம்பந்தமே இல்லாமல் உங்களுடைய மொபைலில் மெசேஜ் அல்லது விளம்பரம் அல்லது நோடிபிகேஷன் வந்தால் கவனமாக எங்கிருந்து வருகின்றது என்பதனை கவனிக்க வேண்டும் .

Pamaran Karuthu

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *