சாதி இரத்தத்தில் கலந்திருக்கிறது – மாஃபா பாண்டியராஜன்

 


 

அண்மையில் நாடார் சமுதாய கருத்தரங்கில் கலந்துகொண்ட தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்  , சாதி உணர்வு இருக்க வேண்டும் . ஆனால் சாதிய வெறி இருக்கக்கூடாது என பேசினார் . மேலும் சாதிய உணர்வு இரத்தத்தில் கலந்திருக்கிறது என்ற ரீதியிலும் பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது .

 


 

அறிவியல் உண்மை



அமைச்சர் ஒருவர் இவ்வாறு பேசியபின்பு பல மருத்துவர்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர் . அதன்படி மனித குரோமோசோம்களின் கட்டமைப்பில் எங்குமே சாதிய உணர்வுக்கான பதிவுகள் இல்லை என்பதனை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள் .

மேலும் DNA வில் மாற்றம் நடைபெறவேண்டும் எனில் பல ஆயிரகணக்கான ஆண்டுகள் ஆகவேண்டும் . ஆகவே சாதிய உணர்வுகள் குரோமோசோம்களில் இருக்க வாய்ப்பில்லை என தெரிவித்து இருக்கிறார்கள் .


 

மாஃபா பாண்டியராஜன் விளக்கம்

 

 


இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் , அவர் தெரிவித்த கருத்துக்களை மறுக்கவில்லை .

ஒரு நிரூபர் “சாதி சங்கங்கள் நடத்துகின்ற விழாவில் அமைச்சர் கலந்துகொள்வது சரியா ?” என கேட்டிருந்தார் .

அதற்கு “அதில் தவறு இல்லை , அனைத்து சமுதாய கூட்டங்களிலும்  கலந்துகொண்டு இருக்கின்றேன். மேலும் ஜெயலலிதா அவர்களும் , திமுகவும் கலந்துகொண்டுதான் இருக்கின்றது” என்றார் .

 

ஒரு புத்தகத்தை குறிப்பிட்டு பேசிய அவர் , எப்படி ஒரு மனிதனுக்கு மரபணு  இருக்கின்றதோ அதுபோன்றே ஒரு குழுவிற்கும் (சாதி ) மரபணு இருக்கின்றது . நாடார் சமுதாயத்திற்கு புதிய தொழிலை படைக்கின்ற திறமை இருக்கின்றது .

 


 

பாமரன் கருத்து


மாஃபா பாண்டியராஜன் அவர்கள் கலந்துகொண்டது பற்றியோ பேசியது பற்றியோ பேசுவது பயன் தராது என்றே எண்ணுகின்றேன் . காரணம் மாஃபா பாண்டியராஜன் வெளிப்படையாக பேசி மாட்டிக்கொண்டார் அவ்வளவுதான் , அதற்காக பேசாதவர்கள் அனைவரும் உத்தம புத்திரர்களா ?

இல்லவே இல்லை . பெரியார் என்ற இயக்கவாதி இருந்தவரை சாதி கட்டமைப்புகளை தீவிரமாக எதிர்த்துவந்தார் . ஆனால் அவருக்கு பின்னர் தேர்தல் அரசியலுக்கு வந்தவர்கள் அவ்வளவு உண்மைத்தன்மையோடு செயலாற்றவில்லை என்பதே உண்மை .

இன்றைய அரசியல்வாதிகளின் முக்கிய நோக்கம் தேர்தலில் ஜெயிப்பதே  அன்றி , சாதியை ஒழிப்பது வறுமையை ஒழிப்பது அல்ல . இன்று மாஃபா பாண்டியராஜன் அவர்கள் வெளிப்படையாக பேசியதுதான் அனைத்து அரசியல்வாதிகளின் உண்மை முகம் .வெறுமனே சாதிக்கு எதிரானவர்கள் போன்று நடிப்பார்கள் .


பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *