அன்பை பகிர்வோம் – காதலர் தினம் சிறப்பு பகிர்வு

 


 

காதல் என்பதற்கு நான் புரிந்துகொண்ட அர்த்தம் “எதனையும் எதிர்பாராமல் கொடுக்கின்ற அன்பு” . அப்படியானால் அந்த காதலை கொண்டாடும் காதலர் தினம் பிப்ரவரி 14 என்பது காதலிப்பவர்களுக்கு மட்டுமான நாள் அல்ல , அது அன்பு செலுத்துகின்ற அனைவருக்குமான நாள் .

 

——————————————————————————————-
Advertisement:





——————————————————————————————–

 

இந்த அவசர யுகத்தில் தன்நலமற்ற ஆத்மார்தமான அன்பிற்கு மிகப்பெரிய பஞ்சம் நிலவுகிறது . உலகத்தின் இயக்கத்திற்கு பூமி சுற்றுவது எப்படி முக்கியமானதோ அதனைப்போலவே மனித வாழ்வு சிறந்து நடக்க “தன்நலமற்ற அன்பும்” இன்றியமையாதது .

 

ஆனால் இப்போது நடக்கின்ற சில நிகழ்வுகள் சங்கடத்தை உண்டாக்கும் விதமாக இருக்கின்றன . சிறுமியை கற்பழிக்கும் கொடுமை , மனைவியை துண்டு துண்டாக வெட்டி வீசிடும் கணவன் , கள்ளகாதலுக்காக கணவனை கொல்லும் மனைவி,  பெற்றோரை அனாதையாக அலையவிடும் பிள்ளைகள் , பிள்ளைகளை விஷம் வைத்துக்கொல்லும் பெற்றோர்கள் என நீண்டுகொண்டே போகிறது அன்பற்ற இதயங்களின் அலங்கோல போக்குகள் .

 

 

நம் இதயத்தை சுக்குநூறாக்கிடும் இதுபோன்ற கொடுமையான நிகழ்வுகளுக்கு மிக முக்கிய காரணம் “ஆத்மார்தமான அன்பு” இல்லாமையே . உறவுகளை இணைத்து வைக்கின்ற பாலம் எதுவென்றால் அது “ஆத்மார்தமான அன்பு” தான் .

 


ஆத்மார்தமான அன்பு என்பது கட்டாயமானது அல்ல , எதிர்பார்க்கக்கூடியதும் அல்ல . நாம் அன்பு செலுத்துகிறவர்கள் நமக்கும் திருப்பி அந்த அன்பினை கொடுக்க வேண்டும் என்கிற அவசியமில்லை . இந்த புரிதல் ஏற்பட்டுவிட்டால் கொடுமையான பல நிகழ்வுகளை தவிர்த்துவிட முடியும் .

 

பிறர் வெறுப்பு செலுத்தினாலும் அன்பு செலுத்தினாலும் உங்களுடைய நிலைப்பாடு “அன்பு செலுத்துவது” என்ற நிலைபாட்டை எடுத்துக்கொள்ளுங்கள் . தொடர்ச்சியாக அன்பு செலுத்துகின்றபட்சத்தில் பல இதயங்களை வெல்ல முடியும் . இதயங்களை வெல்வதே வாழ்வின் மிகப்பெரிய வெற்றி என்பதனை உணர்வோம் . அன்பு செலுத்துவோம் .

நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள் .


பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *