மோடியிடம் இருந்து இதை கற்றுகொள்ளுங்கள் முன்னேறிவிடலாம் ….

ஒருபுறம் முதல்வராக இருந்து பிரதமராக ஆவதற்கு செய்த செய்யாத பலவற்றை விளம்பரமாக்கி மோடி
மாயையை உருவாக்கி  வெற்றியும் பெற்றுவிட்டார் ..

வெற்றியோடு விட்டுவிடவில்லை , அடுத்தது தனக்கு போட்டியாக யார் யாரெல்லாம் வருவார்கள் என பிரதமர் ஆனவுடனே சிந்திக்க ஆரம்பித்து விட்டார் .

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி அவர்கள் லிஸ்டில் கடைசிதான் . முதல்வரிசை போட்டியாளர்களாக இருந்தவர்கள் பீகார்  முதல்வர் நிதிஷ்குமார் , ஜெயலலிதா , மம்தா பானர்ஜி போன்றவர்களே …
இதில் ஜெயலலிதா இறந்துவிட்டது அவர்களுக்கு தோதாக போய்விட்டது .

எதிரியை எதிர்ப்பது மற்றவர்களின் பாணி , அப்படிச்செய்தால்
சில வேலைகளில்
தோற்றுகூட போக வாய்ப்புண்டு ..மக்களை நம்ப முடியாது ஆனால் அதே எதிரியை வளைத்துப்போட்டு தன் கூண்டில் அடைத்துவைத்துக்கொண்டால் பயப்பட தேவையிருக்காதுதானே …

அதைத்தான் மோடியும் செய்தார் , பீகார் அரசியலில் குழப்பத்தை விளைவித்தார் , அதற்கு லாலுவின் ஊழலும் உதவி செய்தது …நிதிஷ்குமார் லாலுவுடன் உள்ள கூட்டணியை முறித்துக்கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்தார் .

தற்போது அவர் பாஜக தேசிய கூட்டணியில் இணையவும் வாய்ப்பு இருக்கின்றது ஆக இனி நிதிஷ் மோடிக்கு கீழ் தான் இருப்பார் …

இதைதான் இந்த பாணியைதான் நாமும் கற்றுகொள்ள வேண்டும் …போட்டி வணிகத்தில் ஜெயிப்பதற்கு …

அடுத்தது மம்தா மேடம் தான் …

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *