வாழ்வில் ஜெயிக்கணுமா இவங்க கூட பழகாதீங்க

 

நம்முடைய எண்ணங்களை மாற்றிடும் சக்தி நம்மோடு அருகில் இருப்பவர்களுக்கு இருகின்றது . ஆகையால் வெற்றி பெற துடிப்பவர்கள் யாரோடு பழகுகிறோம் என்பதும் கடின உழைப்போடு கூடிய அவசியமான ஒன்று .

 

வாழ்க்கையில் சாதிப்பவர்கள் இரண்டு வழிகளில் வந்தவர்கள் தான் . ஏற்கனவே பணக்கார பெற்றோரின் பிள்ளைகளாக பிறந்தவர்கள்  , கடின உழைப்பினாலும் முயற்சியாலும் ஏழ்மை நிலையிலிருந்து முதல் தலைமுறை பணக்காரர்களாக வந்தவர்கள் .

 

நம்மில் பெரும்பாலானவர்கள் இரண்டாவது வரிசையில் இடம்பெற்றுவிட வேண்டும் என ஒவ்வொரு நொடியும் நினைப்பவர்கள் தான் . எப்படியும் வாழ்வில் வெற்றியடைந்து நாமும் பணக்காரர் ஆகிட வேண்டும் என எண்ணுபவர்களிடம் அதீத திறமைகள் இருக்கும் , கடின உழைப்பு இருக்கும் ஆனாலும் அனைவராலும் பணக்காரர் ஆகிட முடிவது கிடையாது . இதற்கு பல காரணிகளை பலர் கூறியிருக்கலாம் , அதில் முக்கியமான காரணியைத்தான் நாம் பார்க்க இருக்கிறோம் .

 

நாம் யாரோடு சேர்ந்திருக்கிறோம் என்பது மிக முக்கியம்  ?

 

 

ஒவ்வொரு நிமிடமும் நம்மை அறிந்தோ  அல்லது அறியாமலோ நம்மோடு பழகுகிறவர்களிடம் அல்லது பார்கின்றவர்களிடம் இருந்து ஏதேனும் ஒரு விசயத்தை கற்றுக்கொள்கிறோம்  .
உதாரணத்திற்கு நாம் பார்க்கின்ற நபர் போல முடிவெட்டிக்கொள்ள விரும்புபோம் அல்லது உடை அணிவதில் மாற்றத்தை கொண்டு வருவோம் அல்லது அவரது பழக்கவழக்கத்தில் ஏதேனும் ஒன்றினை நாமும் பின்பற்றிட துவங்குவோம் . அவை அனைத்துமே இயற்கையானவை . பல சமயங்களில் நம்மை அறியாமலே நடக்கக்கூடியவை

 

அதற்காகத்தான் வெற்றிக்காக போராடுகிறவர்கள்  ஒத்த கருத்துடைய நபர்களிடம் பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என ஏற்கனவே வென்றவர்கள் பலர் கூறுகிறார்கள் . குறிப்பாக நாம் சாதிக்க நினைக்கும் துறையில் ஏற்கனவே வென்ற அல்லது அதற்கான முயற்சிகளில் ஈடுபடுபவர்களிடம் நட்பினை ஏற்படுத்திக்கொண்டால் பயனுள்ளதாக இருக்கும் . நமது ஆர்வமும் முயற்சியும் பாதிப்பில்லாமல் செழித்தோங்கும் .

 

ஆனால் நம் துறையில் ஏற்கனவே சாதித்தவர்களை சந்தித்து நட்பினை ஏற்படுத்திக்கொள்வது அவ்வளவு எளிதானதா என்றால் ? பல சமயங்களில் அவை கடினமானதாக இருக்கலாம் . அவர்களை சந்திப்பதே மிக கடினமான விசயமாக இருக்கலாம் .

 

 

அப்படிப்பட்ட நேரங்களில் சமூக வலைதளங்களின் வாயிலாகவோ அல்லது இணையத்தின் ஏதாவது ஒரு வகையிலோ அவர்களை பின்தொடரலாம். அவர்களின் பழக்கவழக்கங்களை அறிந்துகொள்ளலாம் . அவர்களோடு நட்பினை தொடர முயலலாம் .

 

இவங்க கூட மட்டும் சேராதிங்க ?

 

ஒருவரின் முயற்சிக்கு முதல் தடைக்கல்லே அருகில் இருப்பவர்களின் “நம்பிக்கையற்ற வார்த்தைகள் ” தான் . எண்ணற்ற நபர்களின் முயற்சிகள் ஆரம்பகட்டத்திலேயே நசுங்கி போவதற்கான முதல் காரணமே இந்த நம்பிக்கையற்ற எதிர்மறை வார்த்தைகள் தான் .

 

 

 பல பெற்றோர்கள் “நீயெல்லாம்  எங்க உறுப்புட போற ” “தேவையில்லாம இதையெல்லாம் பண்ணாம நமக்கு என்ன வருமோ அத பண்ணு ” அது இதுன்னு குழந்தையின் விருப்பங்களையும் எண்ணங்களையும் அறியாமலே பேசுவதை பலமுறை கேட்டிருப்போம் . பெற்றோர்களின் இத்தகைய நம்பிக்கையற்ற வார்த்தைகள் முளையிலேயே அனைத்தையும் கிள்ளி எரிந்துவிடும் . ஆகவே இப்படிப்பட்ட வார்த்தைகளிடமிருந்து நம்மை காத்துக்கொள்ள வேண்டும் .

 

ஒரு புதிய சிந்தனை தோன்றியவுடன் முதலில் நாம் அதனை பகிர்ந்து கொள்வது அருகில் இருப்பவர்களிடம் தான் , அதிலும் குறிப்பாக நண்பர்களிடம் தான் . அப்படிபட்ட நண்பர்கள் நமது எண்ணங்களை உணர்ந்து நம்மை ஊக்குவிப்பவர்களாக
இருக்கின்ற பட்சத்தில் நம்மால் எளிமையாக வெற்றியை நோக்கி நகர முடியும் .

 

Key steps to success
Key steps to success

 

ஆனால் பலருக்கு அப்படிபட்ட நண்பர்கள் கிடைப்பது இல்லை . புதிதாக ஒன்றினை செய்ய நினைக்கின்றேன் என சொல்ல ஆரம்பிக்கும்போதே உனக்கெதுக்கு அந்த வேலை , உன்னால் அதெல்லாம் செய்ய முடியாது , உனக்கு செட் ஆகாது என சொல்லிடும் நண்பர்களே இப்போது அதிகமிருக்கிறார்கள் . அப்படிப்பட்ட எதிர்மறை எண்ணம் கொண்டவர்களிடம் இருந்து நாம் விலகி இருக்கவேண்டும் என சொல்கிறார்கள் .

சில நேரங்களில் நமது முடிவுகள் தவறானதாக இருக்கலாம் . அப்படிப்பட்ட சூழ்நிலையில் காரணங்களை எடுத்துச்சொல்லி நம் மீது அக்கறையோடு செயல்படுகின்ற நபர்களை நம்மோடு வைத்துக்கொள்ளுதல் வேண்டும் .

பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமல்ல , ஆரோக்கியமான வாழ்வினை வாழ்வதற்கு கூட நேர்மறை சிந்தனை கொண்டவர்களின் நட்பு மிகப்பெரிய அளவில் உதவிடுகிறது . ஆகவே நண்பர்களே எதிர்மறை கொண்டவர்களை  உங்களுக்கு அருகில் வைத்துக்கொள்ளுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் .

Tips : புதிதாக மாடுகளை ஏர் பழக்குவதற்கு பழைய ஏர் பின்னால் செல்ல செய்து பழக்குவார்கள் . நீங்கள் சோம்பேறியாக இருக்கிறீர்கள் என நினைத்தால் , மற்றொரு சுறுசுறுப்பான நண்பருடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் நீங்களும் அவரைப்போல மாறி விடுவீர்கள்

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *