காசி – பாதசாரி – சிறுகதை

பெண்‌ என்றும்‌ சாமியாரிடமே உளறினான்‌. “நோ அதர்‌ கோ… லீவ்‌ ஹிம்‌… இப்படியே மெண்டலா இருக்க வேண்டியதுதான்‌. ட்ரைஃபார்‌ சப்ளிமேஷன்‌ நாட்‌ பார்‌ செண்டிமெண்ட்ஸ்‌ இன்‌ செக்சுவாலிட்டி வித்‌ சாய்ஸ்‌! நேத்து குருநாதர்கிட்டே உன்னப்‌ பத்திக்‌ கேட்டேன்‌. இன்னும்‌ பத்து

வருஷத்துக்கு உனக்கு சோதனைகள்‌ பாக்கின்னார்‌. மொதல்லே உடம்போட நீ இருந்து பழுகணும்‌” என்று முகத்துக்கு நேராக காசியிடம்‌ சொன்ன சாமி, அவனை ஆசிரமத்திற்குள்‌ அழைத்து வர வேண்டாமென்று என்னிடம்‌ ரகசியமாகச்‌ சொல்லிவிட்டார்‌.

கீழே போன காசியிடமிருந்து ஒரு மாதமாக தகவலே இல்லை. கீழே கோயமுத்தூரில்‌ சாமியார்‌ ஒரு பணக்கார விட்டில்‌ அடிக்கடி எழுந்தருளுவார்‌. ஒருமுறை நானும்‌ கூடப்‌ போனேன்‌. அந்த விட்டில்‌ ஒரு இளம்‌ பெண்‌, கணவனை ஒதுக்கிவிட்டு தாய்வீடு வந்துவிட்ட பெண்‌, மூன்று பெண்களில்‌ நடுப்பெண்‌. ‘ஆணாக சுதந்திரம்‌ பெற்று வளர்ந்த பெண்‌. மூன்று பெண்களில்‌ கல்லுமில்லை, புல்லுமில்லை. ஆனால்‌ ‘இம்பொட்டண்ட்‌’ என்று தாலியைக்‌ கழற்றி வீசிவிட்டு வந்துவிட்டவள்‌. மூத்த – இறைய இரண்டூ சகோதரிகளும்‌ ‘வசதி’யாக வாழ்க்கைப்‌ பட்டவர்கள்‌. சாமியாரிடம்‌ மிகுந்த விசனத்தோடு குடும்பம்‌ முறையிட்டது. காசிக்குத்‌ தெரிந்த குடும்பம்‌ என்று தெரிந்தது. நான்‌ காசியின்‌ நண்பன்‌ என்பதையும்‌, காசியைப்‌ பற்றியும்‌ ஏதோ பேச்சு வாக்கில்‌ சாமி,

யதேச்சையாக தன்னிடம்‌ வந்த ‘கேஸ்‌ ஹிஸ்டரி’களில்‌ ஒன்றாகச்‌ சொல்லி வைத்தார்‌. காசியைப்‌ பார்த்தபோது நானும்‌ யதேச்சையாக அந்தப்‌ பெண்ணின்‌ துயர ஸ்திதியைப்‌ பற்றி சொல்லித்‌ தொலைத்தேன்‌. தயாராக காசிக்குள்ளிருந்த விதி, காசியின்‌ பாஷையில்‌ ‘கேரக்டர்‌ வீறுகொண்டு எழும்பிவிட்டது.

காசி கல்யாணம்‌ முடித்து ஒரு மாதம்கூட கூடி வாழவில்லை. இரண்டாவது மாதம்‌ ஒரு நாள்‌ மாலையில்‌ இந்த மலைக்கிராமத்து தோட்டத்து வாசலில்‌ வந்து நின்றான்‌. அன்றிரவு முழுவதும்‌ ஊருக்குள்‌ நாங்கள்‌ இரண்டு பேர்‌ மட்டுந்தான்‌ தூங்காமல்‌ இருந்திருப்போம்‌. மாப்பிள்ளைக்‌ களை அறவே இல்லை. முகம்‌ எழுமைச்‌ சாணியில்‌ பிடித்து வைத்தது மாதிரி இருந்தது.

“அரைக்கிலோ முந்திரி கேக்குக்‌ உங்க எந்த கவிதையைத்‌ தூக்கிட்டு கடைக்கு போகன்னு கேட்கறாருடா மாமனார்‌. புஸ்தகங்களைக்‌ கட்டி எடைக்ப்‌ போட்டுட்டு, மூளையை பணம்‌ பண்ண யூஸ்‌ பண்ணணுங்கறார்‌. விட்டு மாப்பிள்ளையா அங்கயே இருக்கணுமாம்‌. நடுத்தரக்‌ குடும்பங்கள்‌

வாழற எங்க லைனுக்கு அவளால்‌ வந்து குடும்பம்‌ பண்ண முடியாதாம்‌. பணக்காரங்களக்‌ கண்டா பொறாமைப்படற லொக்காலிடியாம்‌ எங்களது. அப்பாவையும்‌ ‘மாமனார்‌’ விட்டுலையே வந்து இருக்கறதானா இருக்கலாங்கறார்‌.. மூணு பேருக்கு ரெண்டு வேலைக்காரங்க இப்ப, இன்னும்‌

ரெண்டூ பேர்‌ இருந்தா அவங்களுக்கும்‌ வேலை குடுக்க சரியாயிருக்குமாம்‌. தினமும்‌ ஸ்கூட்டர்‌ சவாரி, ஐஸ்கிரீம்பார்‌, நிச்சயம்‌ சினிமா, வராத புதுத்தமிழ்ப்ட பாட்டு, இவ்வளவுதான்‌ அந்தப்‌பெண்ணுக்கு அன்றாட உலகம்‌. அல்சேஷன்‌ நாய்க்கும்‌ தெரு நாய்க்கும்‌ ஆன வித்தியாசம்‌. என்னால்‌

சகிக்க முடியலே. என்னோட ‘தாய்‌’ இமேஜ்‌ எழவெல்லாம்‌ சனியன்‌ வேண்டாம்‌, ஒரு “பெண்ணாவாவது இருந்திருக்கலாம்‌. எண்ணிப்‌ பாத்தா ஒரு பத்து பன்னெண்டு தரம்‌ கூடியிருப்போம்‌ – உன்னால நம்ப முடியாதுடா குணா – முத்தம்‌ கொடுக்க அனுமதிச்சதேயில்லை.பிடிக்காமயிருக்கும்‌ சில பேருக்கு. பரவாயில்லே. ஆனா இங்கே லிப்ஸ்‌: அழகு நடிகை மஞ்சுளாவைவிட ஒருபடி இறங்கிடக்‌ கூடாதுங்கற லட்சியம்‌ எச்சரிக்கை. அழகு உதடுகள்‌. ஆனா

பொய்‌ உதடுகள்‌.

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *