காசி – பாதசாரி – சிறுகதை

திடீரென ஒரு சாயங்காலம்‌ இம்மலைக்‌ கிராமத்‌ தோட்டத்திற்கு வந்தான்‌. உடம்பு ஊதிக்‌ கறுத்து ஆள்‌ பயங்கரமாக இருந்தான்‌. இரண்டாவது நாள்‌ நச்சரிக்க ஆரம்பித்துவிட்டான்‌. யாராவது பொண்ணு வேண்டும்‌ என்று. ஒரு பொண்ணோட ஒரு நாள்‌ முழுக்க தனியா இருக்கணும்‌. ஏற்பாடு செய்‌ என்று பிடிவாதம்‌. முப்து மைல்கள்‌ பிரயாணம்‌ செய்து அந்த எல்லைப்‌ புற சின்ன டவுனுக்கு சென்றால்‌ எனக்குத்‌ தெரிந்த ஒரு பெண்‌ – அவளும்‌ ஊரில்‌ இல்லை. அந்த சமயத்தில்‌ நானும்‌ வேலையில்‌ இல்லை. அப்பா திடீரென இறந்துவிட்டதால்‌, கடலூர்‌ அரசு வேலையைவிட்டூ இங்கே

தோட்டம்‌ வந்து இரண்டு வருடங்களாகிவிட்டது. அம்மா, தங்கைகளக்குத்‌ துணையாக விவசாயத்தில்‌ இறங்கியிருந்தேன்‌. கூட எல்‌.ஐ.சி ஏஜண்ட்‌ வேலை. ஒரு சாமியாருடன்‌ தீவிரப்‌ பழக்கமாயிருந்தது எனக்கு. எங்கள்‌ கிராமப்‌ பக்கம்‌ சின்ன குடிசை ஒன்றில்‌ இருந்தார்‌. சீக்கிரமே தெரிந்தது, கூட அழகான ஒரு சிஷ்யை என்று. நாங்கள்‌ சொந்தக்‌ குடிசையாக ஆசிரமம்‌ கட்ட

வசூலித்தோம்‌. ‘விவேகானந்தரின்‌ மறு பிறப்பு’ என்று சொல்லிக்‌ கொண்ட சாமியாருக்கு நான்தான்‌ பிரதம சிஷ்யன்‌. கீழிறங்கி சாமியார்‌ நகரங்களுக்குப்‌ போனார்‌. கீர்த்தி பரவியது. இங்கிலீஷ்‌ சாமியார்‌

அவர்‌. ஃபார்மர்‌ லைப்பில்‌ எம்‌.பி.ஏ, ஒரு பழம்‌ பெரும்‌ திரைப்பட அதிபரின்‌ நெருங்கிய உறவுக்காரர்‌. மனைவி படிதாண்டிவிட்டாள்‌. புருஷன்‌ விட்டையே தாண்டி ஆசிரமம்‌ கட்டிக்‌ கொண்டுவிட்டார்‌. பின்னாளில்தான்‌ எனக்கு எல்லாம்‌ தெரிந்தது.

சாமியிடம்‌ காசியை அழைத்துப்‌ போனேன்‌. எல்லாவற்றையும்‌ சொன்னான்‌. பத்து வயதுப்‌பையனிடம்கூட மனதைக்‌ கழற்றிக்‌ கையில்‌ தந்துவிட்டு, ‘பாத்துட்டு மறக்காம தாடா’ என்ற போகிற தன்மையில்‌ காசி இருப்பதை சாமியாரின்‌ மூளை புரிந்து கொண்டுவிட்டது.

‘நாலுபேர்‌ மாதிரி லைப்பிலே செட்டில்‌ ஆகணுங்கற ஆசையே அத்துப்‌ போச்சு சாமி இவனுக்கு’

“கடவுள்‌ நம்பிக்கை உண்டா?”

காசியே பதில்‌ சொன்னான்‌. ” இல்லே சாமி.. ஆனா ‘கடவுள்‌’னு ஒருத்தர்‌ இருந்துட்டாக்கூட பரவால்லேன்னு படுது சாமி!”

‘நல்லாப்‌ பேசறீங்களே; இதுக்கு முன்னாடி யாராவது சாமியார்கிட்டே போயிருக்கீங்களா?”

“போயிருக்கேன்‌ சாமி. சகஜ சைதன்யா கிட்டே போனேன்‌. தியானம்‌ கத்துக்கப்‌ போனேன்‌. மந்திரம்‌ தந்தார்‌. மந்திரத்தை வெளியே சொல்லக்‌ கூடாதுன்னார்‌. ‘ஐங்‌கற அதை வெளியே எல்லாம்‌ சொன்னேன்‌. மறுபடியும்‌ பாத்து அப்படி செஞ்சதை சொன்னேன்‌. பரவால்லே தொடர்ந்து பண்ணுங்கன்னார்‌. கனவுகள்‌ தொந்தரவு பத்தி சொன்னேன்‌. போன பிறவியிலே அடக்கி வெச்ச

ஆசைகூட இந்தப்‌ பிறவியிலே கனவா வரும்னார்‌. பயந்து போயிட்டேன்‌ சாமி… அப்புறம்‌ போகவே இல்லை…”

கடைசியில்‌ சாமியார்‌ ஒரே வரியில்‌ காசிக்கு அருள்‌ வாக்காகத்‌ தீர்வு சொன்னார்‌. எனக்கு அதிர்ச்சி. “காசி… உனக்கு செக்ஸ்தான்‌ பிரச்னை… யூ ஹாவ்‌ செக்ஸ்‌ வித்‌ ஹர்‌” என்று ரம்பையை அழைத்துக்‌ காட்டினார்‌.

காசி இரண்டு நாட்களாக குழம்பி முடிவெடுக்க முடியாமல்‌ இருந்தான்‌ முடியாது என்று ஒரு வழியாக முடிவு சொன்னான்‌. தனக்கு தங்கைபோல இருப்பதாகவும்‌, தான்‌ வேண்டுவது தாயான

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *