காசி – பாதசாரி – சிறுகதை

ஆப்‌-நைட்‌ (மில்‌) ஷிப்டென்றால்‌ மூன்று மணிக்கு வீடு வந்தால்‌, இரண்டு தடவை உணவு. அப்பா மில்லைவிட்டு நின்றதால்‌ பெற்ற பணம்‌ பாதிக்கு மேல்‌ கரைந்து விட்டது. மச்சானுக்கு நான்கு குழந்தைகளில்‌ இரண்டூ பெண்‌. கூடவே பராமரிப்பாக மூன்று மாடுகள்‌. அவர்‌ கஷ்டம்‌ அவருக்கு. மனிதாவிமானத்தைக்‌ கொஞ்சமேனும்‌ பராமரிக்க அவர்‌ உழைப்பின்‌ ஷிப்டில்‌ நேரம்‌ கிடைக்கவே

இல்லை. மச்சானின்‌ நாக்குச்‌ சாட்டை வீச்சு தாங்க முடியாமல்‌ உறைத்தபோது காசி தடுமாறிப்‌ போனான்‌. காசியை அடக்க முடியாத மச்சானின்‌ கோபம்‌, காசியின்‌ அப்பாமீது, இயலாமையின்‌ வடிகாலாக மெல்ல மெல்லத்‌ தொட்டது. அப்பாவுக்கும்‌ ‘சுரீர்‌’ விழ, சாட்டையை ஒரு நாள்‌ எகிறிப்‌ பிடித்துப்‌ புரட்டிவிட்டான்‌ காசி, விளைவு- தூரத்தில்‌ இந்த பெரியம்மா விட்டில்‌ தஞ்சம்‌. ‘ஏ

மச்சான்னேன்‌!

கொம்பன்னேன்‌! குட்றா விட்டு வாடகையை!’ என்று மாதம்‌ நானூறு ரூபாய்‌ வாடகை போட்டுவிட்டார்கள்‌ அப்பனும்‌ மகனும்‌. எல்லாம்‌ காசிக்காகத்தான்‌. உண்மையில்‌ காசியின்‌ அப்பாவுக்கு மனள்மீது அளவு கடந்த பாசம்‌. காசியின்‌ மீது அவன்‌ அக்காவுக்கும்‌! காசியின்‌ மச்சானும்‌ வேறு யாருமில்லை காசிக்‌ சொந்த அத்தை மகன்‌.

பெரியம்மா விட்டில்‌ காசிக்கு நிலைமை முற்றிக்கொண்டுூ வந்தது. மனநோயாளி போல்‌ நடித்துக்‌ திரித்த காசிக்கு மெய்யாகவே லேசாக மனநோய்‌ தாக்கியது என்றுதான்‌ நினைக்கிறேன்‌. ‘ஒரு பைத்தியக்காரனுக்கும்‌ எனக்கும்‌ என்ன சின்ன வித்தியாசமென்றால்‌ நான்‌ பைத்தியமில்லை

அவ்வளவுதான்‌’ என்று யாரோ ஒரு மேலைப்‌ பெயர்‌ சொன்னதாக சொல்லித்‌ திரிந்த காசியின்‌ சுய எள்ளலையும்‌ கடந்து மெல்லவே மன ஆரோக்கியம்‌ குறைந்தது. ஆனாலும்‌ அங்கே வீட்டிலிருந்த காலத்தில்‌ நிறையப்‌ படித்தான்‌ என்று தெரிகிறது. (எனக்கு) புரியாத கவிதைகள்‌ நிறைய எழுதி

நான்‌ பதிலே போடவில்லை.

ஒரு வினாடிகூட காலூன்ற முடியாமல்‌ கொந்தளித்தான்‌ காசி. தன்னுடம்புக்குள்ளேயே பொறியில்‌ சிக்கிய ஒரு எலியாகிவிட்டது அவன்‌ மனது. ஒரு முட்டாள்‌ மனநல வைத்தியன்‌ நானூறு ரூபாய்‌ காசுக்காக நான்கு தரம்‌ ‘ஷாக்‌’ ட்ரீட்மெண்ட்‌ செய்துவிட்டான்‌. கறிவேப்பிலை கருகும்‌

வாசனை தலைக்குள்ளிருந்து வினாடிதோறும்‌ அடிப்பதாக மனப்‌ பிரமையில்‌() பரிதவித்துப்‌ போனானாம்‌ காசி. நிறைய மாத்திரைகள்‌… மனம்‌ அடங்கவில்லை. ஷணப்பித்தன்‌ – ஷணச்சித்தன்‌ என்றானான்‌ காசி. பத்தடிக்குள்‌ மூன்று திசை. இந்த மலைக்கிராமத்திற்கு வருகிறேன்‌ பேர்வழி என்று

நான்கு முறை பஸ்‌ ஏறியவன்‌ ஒரு தரம்‌ 40 கி.மீட்டர்‌ வந்துவிட்டுத்‌ திரும்பி, இரண்டூ முறை 1௦௦ கிலோ மீட்டருக்கு டிக்கெட்‌ வந்துவிட்டு ஆறாவது கிலோ மீட்டரிலேயே திரும்பிவிட்டானாம்‌. ஒரு ஜின்னிங்‌ பாக்டரியில்‌ பஞ்சு பிரிக்கப்‌ போகும்‌, உறவுக்காரப்‌ பெண்ணை கல்யாணத்திற்குக்‌ கேட்டு

அப்பாவை வாதித்தான்‌. பெண்‌ யாருமில்லை. பெரியப்பாவின்‌ பேத்தி. பெரியப்பா இறந்தவுடன்‌ சொத்துப்‌ பிரிப்பில்‌ ஒரே அண்ணனோடு, ஜன்மப்‌ பகை சேர்ந்துவிட்டதான்‌ உறவற்றுப்‌ போன காசிக்கு

ஒன்றுவிட்ட அக்காவின்‌ பெண்‌. பெரியம்மாவுக்கு இந்த ஏற்பாட்டில்‌ ரகசிய சம்மதம்‌. காரணங்களில்‌ சொத்தும்‌ ஒன்றாக இருக்கக்கூடும்‌. தெரியவில்லை. அப்பாவும்‌ யாரையோ பார்த்து கேட்டுவிட்டார்‌. ‘பெண்‌ கேட்க என்ன தைரியம்‌’ என்று அப்பன்‌ குடிகாரன்‌ தூதுவரை ஏசி அனுப்பினானாம்‌. “ஏதோ ஒரு

பொண்ணுப்பா – கல்யாணம்‌ ஆனா எனக்கு எல்லாஞ்‌ செரியாயிடும்‌. இங்க சொந்தக்காரங்க விட்டுல எத்தனை நாளுக்கு? எண்ணிப்பாத்தா பயமாயிருக்குதுப்பா…” என்று பச்சையாகக்‌ கதறியிருக்கிறாள்‌

காசி. தவித்துக்‌ கொண்டே இருந்தவன்‌ ஒரு மாலையில்‌ தேங்காய்‌ பருப்பியைக்‌ கடித்துக்‌ கொண்டே இரண்டு பாட்டில்கள்‌ டிக்‌-20ஐக்‌ காலி செய்தான்‌. விஷயம்‌ தெரிய, பெரியம்மா அவசர அவசரமாக நாய்ப்பீயைக்‌ கரைத்து வாயில்‌ ஊற்றி விட்டாள்‌. மீண்டும்‌ வேறொரு மனநல டாக்டர்‌. மாத்திரைகள்‌.

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *