காசி – பாதசாரி – சிறுகதை

காசிக்கு கல்யாணம்‌ என்று ஒன்று நடந்ததற்கு நானும்‌ முக்கிய காரணம்‌. முதற்காரணம்‌. பெண்களுடன்‌ காசியின்‌ அனுபவம்‌ ஒன்றைக்கூட அவன்‌ என்னிடம்‌ ஒளித்ததில்லை. பி.யூ.சி. படிக்கும்போது பக்கத்துத்‌ தெருவில்‌ பெட்டிக்‌ கடைக்காரரின்‌ பெண்ணுடன்‌ காதல்‌. பத்னேழு வயதுப்‌ பெண்‌. காசியின்‌ அன்றைய பாஷையில்‌ தேவதை. உணவாக பெட்டிக்‌ கடை பொரி

வேர்க்க டலையையே அதிக நாட்கள்‌ தின்று வளர்ந்த அந்த தேவதைக்கு திடீரென மஞ்சல்‌ காமாலை. ஒரு நாள்‌ சாம்பல்‌. காசி இந்த தேசதையின்‌ பெயர்‌ சேர்த்து புனைபெயர்‌ வைத்துக்‌ கொண்டு “கண்ணாமூச்சு’ என்றொரு குட்டிக்‌ கவிதை தொகுப்பை பின்னாளில்‌, ஒன்றுவிட்ட அண்ணன்‌ அச்சகத்தில்‌ வேலை பார்த்தபோது வெளியிட்டான்‌. ‘வேலை’ என்றால்‌ தொகுப்பு அச்சடித்து

முடியும்வரை வேலை!

காலேஜ்‌ முதல்‌ வருட நாட்களில்‌ கவிதையுடன்‌ இரண்டு குட்டிக்காதல்கள்‌. ஒரு பெண்‌ மு.வ.ரசிகை. ‘கெமிஸ்ட்ரி’ படிப்பு. எதிர்வீடு. துணைப்‌ பாடம்‌ ‘கணக்கு’ சாக்கில்‌ காசி அடிக்கடி மு.வ. ரசிகையிடம்‌ போனான்‌. ஒரு முற்பகல்‌ குளிக்கும்போது சுவரெட்டி விட்டூ – விரகதாபத்தில்‌ – பெயர்‌ சொல்லிக்‌ கத்திவிட்டான்‌. முகத்திலேயே விழிக்க வேண்டாமென்று கதவை அடைத்துக்‌

கொண்டுவிட்டது ‘அல்லி. இன்னொரு பெண்வலிய வந்து இவன்‌ நெஞ்சில்‌ சாய்ந்தாள்‌. வேலையில்லாப்‌ பட்டதாரிப்‌ பெண்‌. வேலை கிடைத்து பொள்ளாச்சி போய்விட்டாள்‌. சந்திப்பே இல்லை. கடிதங்களுக்கு பதில்‌ இல்லை. காசி என்‌.டீ.சி.மில்‌ வேலையைத்‌ தொலைத்துவிட்டு ஊர்‌ சுற்றிக்‌ கொண்டிருந்த காலத்தில்‌, அப்பா ஜேபியில்‌ பத்து ரூபாய்‌ திருடிக்‌ கொண்டு ஒரு நாள்‌

பொள்ளாச்சிக்கு பஸ்‌ ஏறினான்‌. இரண்டு ரோல்டூ கோல்டூ காது ரிங்குகளை வாங்கிக்‌ கொண்டு போய்‌, சாயங்காலம்‌ போஸ்ட்‌ ஆப்ஸ்‌ வாசலில்‌ அவளைச்‌ சந்தித்தான்‌. அவள்‌ முகம்‌ கொடுக்கவில்லை. ரிங்குகளை நீட்டினான்‌. ‘என்னைப்‌ பார்க்க வராதே! எங்கண்ணாவுக்கு லெட்டர்‌ எழுதுவேன்‌. வேறு வேலையில்லை உனக்கு. மென்டல்‌!’ காது அலங்கரிப்புகளை சாக்கடையில்‌ விசிறிவிட்டு எச்சில்‌ விழுங்கியபடி கூசி நடந்தான்‌ காசி.

இன்னொரு காதல்‌ இரண்டு விட்டிலும்‌ அம்பலமாகிவிட்டது. காசியின்‌ பிடிவாதத்தால்‌ காசியின்‌ அப்பா பெண்‌ கேட்டுப்‌ போனார்‌. வேலை ஏதும்‌ பார்க்கட்டும்‌. யோசிக்கலாம்‌ என்று சொல்லி அனுப்பினார்கள்‌. காசி வேண்டா வெறுப்பாக வேலை தேடினான்‌. கல்யாணத்துக்கு எதுவுமே செலவே வேண்டாம்‌, அந்தப்‌ பணத்தில்‌ ஏதாவது தொழில்‌ செய்கிறேன்‌ என்று கெஞ்சிப்‌ பார்த்தான்‌.

காசியைப்‌ பற்றி எல்லாம்‌ தெரிந்திருந்தும்‌ அந்தப்‌ பெண்‌ அடம்பிடித்தாள்‌. அவர்‌ வேலைக்குப்‌ போலேன்னா பரவாயில்லே, நாலு எருமை வாங்கிக்‌ கறந்தூத்தி நாங்க பொழுச்சுக்குவோம்‌ என்று சொன்னாளாம்‌ – பொருளாதார முகத்தின்‌ சூதுவாது தெரியாத பெண்‌. ஒரு போலீஸ்காரருக்கு மனைவியாகிப்‌ போனாள்‌.

அப்புறமும்‌ காசி எங்குமே வேலைக்கு போகவில்லை. ‘பிஸினஸ்‌’ என்ற பெயரில்‌ யார்‌ யாருடனோ சேர்ந்து ஊர்‌ சுற்றினான்‌. மெட்ராஸ்‌, பெங்களூரில்‌ வேலைக்கு ‘இண்டர்வ்யூ’ என்று அப்பாவித்‌ தந்தையை ஏமாற்றி பணம்‌ பிடுங்கிப்‌ போய்‌ செலவழித்துவிட்டுூத்‌ திரும்பி வந்தான்‌. ரேடியோ நிலையத்தில்‌ தினம்‌ போய்க்‌ குலாவினான்‌. ‘நாளொரு தகவல்‌’, ‘உங்கள்‌ கவனத்திற்கு என்று கண்டதை எழுதிக்‌ காசு வாங்கினான்‌. மாதம்‌ 75,100 என்று வருவதை டீ, சிகரெட்‌, கள்ளென்று செலவழித்துச்‌ சுற்றினான்‌. விஸினஸ்‌ நண்பர்களுக்காக எங்காவது அனுப்பினால்‌ பஸ்‌ ஏறிப்‌ போய்‌

காரியம்‌ செய்வான்‌.செலவுக்குக்‌ கொடுத்து எங்காவது அனுப்பினால்‌ போதும்‌ குஷி. விடண்டூவதில்லை. மச்சான்‌ இல்லாத சமயம்‌ சமையல்‌ கட்டில்‌ நுழைந்துவிடுவான்ன. மச்சானுக்கு

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *