காசி – பாதசாரி – சிறுகதை

76-இல்‌ காலேஜ்‌ விட்டூ வெளியே வந்தான்‌. இரண்டூ பேப்பர்கள்‌ ஃபெயில்‌. அப்புறம்‌ அதைஎழுதவே இல்லை. கொஞ்ச நாட்கள்‌ தபால்‌ மூலம்‌ தமிழ்‌ வழி ஹிந்தி படித்தான்‌. விட்டான்‌. கொஞ்சநாட்கள்‌ தாய்மொழி அபிமானத்தில்‌ தெலுங்கு. தெலுங்கு வாத்தியார்‌ விட்டுப்‌ பெண்‌ தினமும்‌ காபியில்‌ கொஞ்சம்‌ காதல்‌ கலக்கிக்‌ கொடுத்தாள்‌. இந்த காலத்தில்தான்‌ விட்டுப்‌ பக்கமாயிருந்த ஒரு இன்ஜீனியரிங்‌ கம்பெனியில்‌ டைம்‌ கீப்பராக வேலை பார்த்தான்‌. அவன்‌ ஓரிடத்தில்‌ தொடர்ந்து ஒரு வருஷம்‌ பார்த்த வேலை. பூப்பந்து விளையாட்டில்‌ சுமாரான வீரன்‌ காசி. காலேஜ்‌ நாட்களில்‌ அவன்‌ ஈடுபட்டிருந்த இரண்டு விஷயங்கள்‌ கவிதையும்‌, விளையாட்டும்தான்‌. என்‌,டீ.சி. மில்‌ ஒன்றில்‌

விளையாட்டுத்‌ தகுதியின்‌ பேரில்‌ வேலை கிடைத்தது. இந்த கேலைதான்‌… இதிலிருந்துதான்‌ ‘காசி’ புறப்பட்டான்‌. என்‌.டீ.சி.மில்‌ வேலை ஆறே மாதம்தான்‌. மனக்‌ குமட்டல்‌, மன நலத்திற்கு சிகிச்சை, அப்போது நான்‌ கடலூரில்‌ அரசு ஊழியன்‌.

திருநள்ளாறு போய்‌ மொட்டை அடிக்கிறேன்‌ பேர்வழி என்று அப்பாவிடம்‌ பணம்‌ பறித்துக்‌ கொண்டூ வந்தான்‌ காசி. இரண்டு நாட்கள்‌ என்னோடூ உற்சாகமாக இருந்தான்‌. நிஜமாகவே ‘திருநள்ளாற்றின்‌’மீது நம்பிக்கை கொண்டிருப்பானோ என்று நினைத்தேன்‌. ஒரு நாள்‌ போய்‌ மொட்டை போட்டுவிட்டு, மத்தியானம்‌ காரைக்கால்‌ வந்து ஒரு லாட்ஜில்‌ பீர்‌ அடித்துவிட்டுத்‌ தூங்கினோம்‌.

சாயங்காலம்‌ காற்றாட வெளியே நடந்தபோது ஒரு திடுக்கிடும்‌ உண்மையைக்‌ கக்கினான்‌ காசி. “உண்மையிலேயே நான்‌ ஒரு பாவி – கயவன்டா குணா. அன்பான அப்பாவை ஏமாத்திட்டிருக்கேன்‌. எனக்கு ஒரு பிரச்னையும்‌ இல்லை. டாக்டர்களையே ஏமாத்தி நடிக்கிறேன்‌. எனக்கு வேலைக்குப்‌ போக பயமாயிருக்குடா… ‘ஃபியர்‌ ஆஃப்‌ ரெஸ்பான்ஸிபிலிட்டி அண்ட்‌ஃப்ரீடம்‌’ டா.”

‘8எந்த புஸ்தகத்துல படிச்சே இந்த இங்கிலீஷ்‌ வரியை- பொறுப்பு பத்தின பேடித்தனம்‌ சரி.. அதென்னடா சுதந்திரம்‌ பத்தின பயம்‌? சுதந்திரத்தையே தப்பாப்‌ புரிஞ்சிக்கே நீ… மேதாவிங்கறபிம்பத்தை வளர்த்தி வெச்சுக்கிட்டு, பிம்பத்தோட கர்வத்துக்கு பங்கமா இருக்ககுதோ வேலை செய்யற இடம்‌: நீ முட்டாள்‌!”

“இல்லடா குணா… எனக்கு வந்து ஜாப்‌ ஒத்து வரலைடா… எந்த ஜாப்புமே ஒத்து வராது. என்னாலே கடிகார மிரட்டலை சகிக்க முடியலே. தினம்‌ தினம்‌ தினம்‌ ஒரே நேரத்திலே அத அதச்‌ செயயறது, செயற்கையா ‘டாண்ணு ஒரே நேரத்துக்கு எந்திரிக்கறது, செயற்கையா தினமும்‌ ஒரே நேரத்தைப்‌ புடிச்சிட்டு வெளிக்கு உட்கார்றது, ‘கன்‌’ டயத்துக்கு குளியல்‌… கட்டுப்பாடான தினம்‌ தினம்‌

தினம்‌ தினம்கள்‌ எனக்கு சலிக்குதுடா… வெறுத்து, குமட்டி… இதுக்கு மேலே பொறுப்புன்னா பயம்‌ வேறே… அதிகாரி உருட்டல்‌… ஓவர்டைம்‌… அப்பா!

“படுபாவி!”

“எனக்கு உள்ளூர சத்தியமான ஆசை என்ன தெரியுமா?”

“சொல்லு”

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *