காசி – பாதசாரி – சிறுகதை

“ஆனா முன்னமாதிரி என்னப்‌ பிச்சு வீசி வாந்தியிலே புரட்டி ஆபாசப்படுத்திக்றதில்லேடா.

கஷ்டப்பட்டு விழுங்கிக்கறேன்‌. அப்பாவுக்காகதான்‌. அவர்‌ போயிட்டா என்ன ஆவேன்னு புரியலை.

எதை ஆதாரமாக்கி இந்தப்‌ பேய்‌ மனசை சமாதானமா நடத்தப்‌ போறேன்னே தெரியலடா…”

காசியின்‌ அப்பா, காசிக்கு ஒரு வயதாகியிருக்கும்‌ போது மனைவியை இழந்தார்‌. காசிக்கு நான்கு வயது மூத்த ஒரு அக்கா உண்டு. வேறு உடன்பிறப்பு இல்லை. காசியின்‌ அப்பா இரண்டாவதாகத்‌ திருமணம்‌ செய்து கொள்ளவில்லை. குழந்தைகள்‌ இரண்டோடு, காசியின்‌ பெரியப்பா – தன்‌ அண்ணன்‌ – குடும்பத்தோடு ஒட்டிக்‌ கொண்டு விட்டார்‌. மில்‌ வேலை. சாந்தமான

குணம்‌. “அப்பா எப்படியிருக்கார்‌ காசி?” “அப்பாவும்‌ நானும்‌ ஒரு விட்லே இருக்கோம்‌. அக்காவுக்கு விட்லே பாதி பாகம்‌ உயில்‌ எழுதி வைச்சாச்சு. உயிலை கையில்‌ குடுக்கலே. செவரு வெச்சு ரெண்டு

பாகமாக்கியாச்சு வீடு வாசலை… மச்சான்‌ அவ்வளவா பிரச்னை இல்லை… அப்பா அக்கா விட்லேதான்‌ சாப்புட்டுக்கறார்‌. எனக்கு பத்து நாளைக்கொடூ ஓட்டல்‌. பத்தே நாளுக்குள்ள எந்த ஓட்டலும்‌ சலிச்சிருது… முன்னூறு, முன்னூத்தம்பது மாசம்‌ கிடைக்கும்‌. ஆத்மாவை, மனசை, வயத்தை,

உடம்பை எல்லாத்தையும்‌ அதிலேதாங்‌ கழுவணும்‌…” பக்கத்தில்‌ சிமெண்ட்‌ பெஞ்சில்‌ படுத்திருந்த நாய்‌ எழுந்து உடலை உதறி சடசடத்தது.

” நீ பெண்ணா இருந்திருக்கக்‌ கூடாதான்னு தோணுது. சரியாச்‌ சொன்னா நீ பெண்ணா மாறிடக்‌ கூடாதான்னு… உன்னோட இருந்தா பாதுகாப்பா, தைரியமா இருக்குடா குணா. அறிவோட குத்தலைப்‌ பொருட்படுத்தாம சொன்னாகடவுளோட மடியிலே இருக்கிற மாதிரி… அதுவும்‌

பெண்களவுள்‌. என்னால்‌ ஒரு ஆணை கடவுளா கற்பனை செய்யவே முடியலே. விளையாட்டு மைதானமா முள்ளுவேலி இல்லாத மனசு உனக்க.” “இல்லடாகாசி, என்னோட மனசு உனக்கு அந்த மாதிரி இருக்குது. ஆனா அங்கேயும்‌ சில பேர்‌ கண்ணுக்கு வேலி இருக்கும்‌. இருக்குது, சரி. இப்பெல்லாம்‌ ஏதாவது எழுதறயா?”

“இல்லே, டயரி மட்டும்தான்‌. கவிதை, கதைன்னு எழுதினா சுய புலம்பலா இருக்குது.” எதிரில்‌ நாய்‌ ஒற்றைக்‌ காலைத்‌ தூக்கி பெஞ்ச்‌ கால்மேல்‌ மூத்திரம்‌ அடித்தது. காசியின்‌ வாயில்‌ கால்‌ சிகரெட்‌ சாம்பலாக நின்றிருந்தது. சற்றே மெளனம்‌. ‘” என்னால்‌, இந்த சிகரெட்டை விடவே முடியலே காசி.”

“நானுந்தான்‌… கூடவே இந்த மாஸ்ட்ருபேஷனையும்‌.. எவ்வளவு முயற்சி பண்ணியும்‌ இந்த ரெண்டையும்‌ நிறுத்தவே முடியலேடா குணா. சிகரெட்டால்‌ எனக்கு ஒண்ணுமேயில்லே…நிகோடின்‌ நெஞ்சுக்குள்ளே பரவி எதுவும்‌ பண்றதா தெரியலே… பால்‌ வராத மொலக்காம்பை உறிஞ்சற

மாதிரிதான்‌ அது எனக்கு. மாஸ்ட்ருபேஷன்லேயும்‌ ஒரு விஷயம்‌. பல பேர்‌ மாதிரி கைகொண்டு இல்லே. தலையணையை அணண்ச்சுட்டு… தாயான முப்பது முப்பத்தஞ்சு வயசுப்‌ பொண்ணுகளத்தான்‌ நினைவிலே அடைச்ச.” காசிக்கு இருபத்தொன்பது தான்‌ வயதென்று நினைக்கிறேன்‌. திடீரென வேறெதாவது பொதுவாகப்‌ பேசலாம்‌ என்ற காசி, என்னைப்‌ பற்றிக்‌

கேட்டான்‌. என்‌ அம்மாவை விசாரித்தான்‌. எனக்கும்‌ அவனுக்கும்‌ பழக்கமான ஒரு சாமியாரைப்‌ பற்றிக்‌ கேட்டான்‌. சாமியாரோடுூ இருந்த அழகான பெண்ணைப்‌ பற்றிக்‌ கேட்டான்‌. “சாமியார்‌, ஆர்‌.எஸ்‌.எஸ்‌.லே பூந்துட்டார்‌. கார்‌ எல்லாம்‌ குடுத்திருக்காங்க. அந்த சிஷ்யை ‘ரம்பை’ இப்ப சத்தியிலே ஒரு துணிக்கடையிலே சேர்ஸ்‌ கேர்ள்‌.” காசி சிகரெட்டை ஹி எறிந்தான்‌. புல்லில்‌

லேசாக புகை கசிந்தது. நான்‌ மீண்டும்‌ ஒரு சிகரெட்டுக்குப்‌ பார்த்தேன்‌, இல்லை. எனக்குப்‌ பரபரத்தது. நானும்‌ கூட காசியைப்‌ போல சும்மாத்தான்‌ சிகரெட்‌ குடிக்கிறேன்‌ என்று நினைக்கிறேன்‌. சில சமயங்களில்‌ தோட்டத்துப்‌ பக்கம்‌ கும்மிருட்டில்‌ நின்று குடிப்பேன்‌. குடித்த திருப்தியே இருக்காது.

புகையை ஊதி கண்ணால்‌ பார்ப்பதில்தான்‌ திருப்திபோல இருக்கிறது. காலிப்‌பெட்டியை நசுக்கி

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *