காசி – பாதசாரி – சிறுகதை

நிமிடத்தில்‌ காவிய சோகம்‌ பட்டுவிடும்‌ காசியின்‌ மனநிலை இன்னும்‌ – குறிப்பாக பெண்கள்‌ விஷயத்தில்‌ – மாறவே இல்லை என்று நினைத்துக்‌ கொண்டேன்‌. இந்த ரொமாண்டிக்‌ பார்வை ஒரு நோய்க்‌ கூறாகவே இன்னும்‌ படுகிறது. அவனிடம்‌ எனக்கு. ஆனால்‌ வேறு நினைய விஷயங்களில்‌

குணமாகியிருப்பது பேச்சினூடே தெரிந்தது. ‘ஆசைப்‌ பட்டதை அடைந்த பின்னாலும்‌ ஒரு பள்ளம்‌ மிச்சமாகி அதில்‌ நலுங்குமே ஒரு சோகம்‌ அதை அனுபவித்தால்‌ தெரியும்‌ ஆசையின்‌ குணம்‌ என்ன என்று’ – பின்னால்‌ பேசும்போது எதற்கோ இப்படி சொன்னான்‌.

சமீபத்தில்‌ திருப்பதி போய்‌ வந்தானாம்‌. ஜாலித்‌ துணையாக ஒரு நண்பனோடூ போனவன்‌ “கம்பெனி ஸேக்குக்கு தானும்‌ மொட்டையடித்துக்‌ கொண்டானாம்‌. கம்பெனி ஸேக்‌ ஆக வேறு கோவில்களுக்கும்‌ அப்படியே போய்விட்டு, திருவண்ணாமலை வந்த போது ராம்சூரத்‌ குமார்‌ என்றொரு யோகியைச்‌ சந்தித்ததாகச்‌ சொன்னான்‌. ‘நீ கதவைத்‌ தட்டும்‌ விதம்‌ சகிக்கக்‌ கூடியதாக

இல்லை’ என்பதையே கோபம்‌ தணிந்த கடைசியிலும்‌ தனக்கான ஒரே ஆசிச்‌ செய்தியாக அவர்‌ வழங்கி அனுப்பியதையும்‌ அதில்‌ பூரண அர்த்தமிருப்பதாகவும்‌ சொன்னான்‌.

நான்‌ இன்னொரு சிகரெட்‌ பற்ற வைத்துக்கொண்டேன்‌. அவன்‌ அப்பாவைப்‌ பற்றிக்‌ கேட்டேன்‌. “நோ ப்ராப்ளம்‌’ என்றான்‌. அடிக்டி ‘நோ ப்ராப்ளம்‌’ என்ற வார்த்தையையே, எதற்கும்‌ பதிலாக அவன்‌ சொல்வதைக்‌ கவனித்துக்‌ கொண்டே வந்தேன்‌. கேட்டேன்‌, சிரித்துக்‌ கொண்டே ‘நோ ப்ராப்ளம்‌: என்றான்‌. எனக்கு அந்த பதில்‌ அருவருப்பாகவும்‌, எரிச்சலாகவும்‌ பட்டது. காரியங்களை காரியங்களுக்காக மட்டுமே செய்வதில்‌ ஒரு விடூதலைஉணர்வும்‌, பரபரப்பற்ற பேரார்வமும்‌

இருப்பதைக்‌ கண்டுகொண்டு விட்டதால்‌, எந்தக்‌ காரியமுமே தனக்குப்‌ பேரானந்தமாக இருக்கிறது என்றான்‌. நான்‌ ஒரு நிமிஷம்‌ பேசவில்லை. சொல்லும்போது அவனுக்கு நாக்கு லாவகம்‌ கொஞ்சம்‌

இழந்து, எழும்புவதில்‌ சிரமப்பட்டதைப்‌ பார்த்திருக்கிறேன்‌. என்‌ நான்கு தங்கைகளுக்கும்‌ காரியம்‌ செய்து முடிப்பதற்குள்‌ பட்ட கஷ்ட அனுபவங்கள்‌ எனக்குள்‌ ஒற்றை எண்ணமாக, மின்னலின்‌ ஒரு

கீற்றாக உருக்கொண்டு அறைந்தது – ஈயைத்‌ துரத்தும்‌ பல்லியாக அது வேகமாக ஓடியதில்‌, பல்லியின்‌ வால்‌ அறுந்து நினைவில்‌ இடறி விழுந்தது. ‘என்ன யோசனை’ என்றான்‌. ‘நோ ப்ராப்ளம்‌’ என்றேன்‌. சிரித்துக்‌ கொண்டே திடீரென்று உரக்க அவன்‌ நூறு கொசுவர்த்திச்‌ சுருள்களைக்‌ கொடுத்து,

இரண்டிரண்டாக ஒட்டி இருப்பதை, ஒன்று ஒன்றாக தனித்தனியாகப்‌ பிரித்துவைக்கச்‌ சொன்னால்‌ என்னால்‌ பொறுமையாகச்‌ செய்ய முடியுமா என்று கேட்டான்‌. மறு நிமிஷமும்‌ நான்‌ பேசாதிருந்தேன்‌. முகம்‌ தொட்டு ‘என்ன’? என்றான்‌. கூலி எவ்வளவு என்றேன்‌. எழுந்து என்‌ முன்‌

மண்டையிலடித்துச்‌ சிரித்தா. ஓயவில்லை. இருட்டிவிட்டது வெளியே. ஏ.சி.யிலும்‌ நன்றாக வியர்த்துவிட்டது காசிக்கு.

வயதான கிழப்‌ பிச்சைக்காரர்களைத்‌ தெருவில்‌ பார்த்தால்‌, மனதின்‌ ஆழத்தில்‌ அவர்களைத்‌ தன்‌ அப்பாவோடூ ஒரு கோணத்தில்‌ ஒப்பிட்டுக்‌ கொண்டு, குற்றவுணர்ச்சி – சுய இரக்கம்‌ – இயலாமை – பயம்‌ எல்லாம்‌ கலக்‌ அவசரக்‌ கருணையாக செயல்பட்ட நாட்கள்‌ மாதிரி இப்போது இல்லை. அவர்‌ அவர்‌ வே பார்த்து அவர்களுக்காகப்‌ பார்க்க முடிகிறதென்றும்‌, அவர்களைப்‌

போன்ற இன்னும்‌ பலரின்‌ ஸ்திதியை மாற்றிவிட சமூகதளத்தில்‌ காரியமாற்ற முனைந்திருக்கும்‌ சில நல்ல மனக்ளுடனும்‌ தான்‌ பழகிக்‌ கொண்டிருப்பதாகச்‌ சொன்னான்‌. ‘மனமாக’ இதை சுருக்கி விடுவதை அவர்களே ஒத்துக கொள்ள மாட்டார்களெனினும்‌ தன்‌ மனதில்‌ பட்டது இவ்வளவுதான்‌

என்று எனக்கு புரியாமல்‌ ஏதோ சொல்லிக்‌ கொண்டு போனான்‌. மேலும்‌ எனக்கு இமைகளில்‌ கனம்‌ சுருட்டி உணர்ந்தேன்‌. வெளியில்‌ போனால்‌ நன்றாக இருக்கும்‌ என்று பட்டது. காசி மேலும்‌ ஒரு சிகரெட்டை, புது பாக்கெட்‌ கிழித்து எடுத்தான்‌.

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *