காசி – பாதசாரி – சிறுகதை

பத்தி. விட தீர்மானம்‌ போட்டு முடியாம எப்படி எல்லாம்‌ அவஸ்தைங்கறதப்‌ பத்தியே இருபது பக்கமும்‌…”

நான்‌ பழைய காசியைப்‌ பார்த்துவிட்டேன்‌. மேலும்‌ சுயசரிதை பாணியில்‌ எழுதப்பட்ட அந்த நாவலைப்‌ பற்றியே நீண்ட நேரம்‌ புல்லரித்துப்‌ பேசிக்‌ கொண்டே போனான்‌. நாவலில்‌ அதன்‌ ஆசிரியர்‌ 1021௦ 88௯௦ வும்‌ தன்னைப்‌ போலவே ‘ஈக்குஞ்சு’ பற்றி கவிதை எழுதியிருப்பதையும்‌ விவரித்து

பிரம்மாண்டமாக சந்தோஷப்பட்டான்‌. ஒரு வாய்‌ அருந்திவிட்டு, நாடு மொழி இன சூழல்‌ விவரங்கள்‌ தவிர்த்துவிட்டுப்‌ பார்த்தால்‌, அந்த ஏழு அத்தியாய நாவல்‌ ஏகதேசம்‌ தனது சொன்த வாழ்க்கை வரலாறு போலவே இருக்கிறது என்றான்‌. அவசியம்‌ அதை நான்‌ படிக்க வேண்டும்‌ – போய்‌

அனுப்புகிறேன்‌ என்றான்‌. மேலும்‌ விடாமல்‌, நாவலின்‌ அத்தியாய தலைப்புகளைக்‌ கேள்‌ என்று

வியந்து சொன்னான்‌:

இன்னொரு குட்டி பெக்‌ வாங்கினான்‌ காசி. நான்‌ போதுமென்று விட்டேன்‌. திடீரென, தான்‌ ஒன்றும்‌ முற்றிலும்‌ மாறிவிட்டதாக நான்‌ நினைத்துவிட வேண்டாமென்று சற்றே நெகிழ்ச்சியாக, லேசாக எச்சரிக்கை விடும்‌ தொனியிலும்‌, கண்கள்‌ வழியாகவும்‌ பேசினான்‌ காசி. ஒரு சின்ன

உதாரணம்‌ பார்‌ என்று விட்டூ சொன்னான்‌. ஆறு மாதங்களுக்கு முன்‌ நடந்ததாம்‌ இது :

ஒய்‌.டபிள்யூ.சி.ஏ. விடுதியில்‌ தங்கிக்‌ கொண்டு, கிறிஸ்துவ மத நிறுவனத்தின்‌ கட்டுப்பாட்டில்‌ இயங்கம்‌ ஒரு பெண்கள்‌ கல்லூரியில்‌ வேலை பார்த்து வந்த ஒரு இளம்‌ பெளதிகத்‌ துணை பேராசியை, காசிக்கு ஒரு நண்பன்‌ மூலம்‌ இரண்டொரு சந்தர்ப்பங்களில்‌ அறிமுகமானாள்‌. மிக

அழகான யுவதியாம்‌. துரதிர்டம்‌ – ஒரு குழந்தையோடு அவள்‌ விதவையாகி இரண்டூ வருடங்கள்‌ கூடப்‌ பூர்த்தியாகவில்லை. தன்னை மணக்க விருப்பம்‌ வேண்டி விடுதி முகவரிக்கு அவளுக்கு கடிதம்‌ எழுதிக்‌ கேட்டிருக்கிறான்‌. நான்கு கடிதங்கள்‌. கடைசி இரண்டு கடிதங்கள்‌ ரெஜிஸ்டர்டுூ தபால்‌.

நான்கும்‌ வார்டன்‌ கையால்‌ பிரிக்கப்பட்டது! நண்பன்‌ காசியை தெருவில்‌ மடக்கி ஆங்கிலக்‌ கெட்ட வார்த்தைகளால்‌ அறைந்தான்‌; பெண்ணின்‌ அண்ணனிடம்‌ இழுத்துவிடுவேன்‌ என்று மிரட்டிவிட்டுப்‌

போனேன்‌. அந்தப்‌ பெண்‌ மூன்று நாட்களாக அழுது கொண்டிருப்பதாக வேறு சொல்லிவிட்டுப்‌ போனான்‌. ஒரு மாதங்‌ கழித்து கல்லூரி வாசலில்‌ அவள்‌ காலில்‌ விழாத குறையாக வருந்தி மன்னிப்புக்‌ கேட்டுவிட்டு வந்தானாம்‌ – மன்னிப்புக்‌ கேட்கப்‌ போனதாலும்‌ அந்தப்‌ பெண்ணைப்‌பயமுறுத்தி நினைவு தன்‌ உடம்புக்குள்‌ இரத்த ஓட்டத்தில்‌ ஒரு உடையாத குமிழியாக ஓடிக்‌

கொண்டே இருப்பதானது காவிய சோகம்‌ என்றான்‌.

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *