காசி – பாதசாரி – சிறுகதை

கன்றை அவிழ்த்துப்‌ பிடித்தேன்‌. காசியின்‌ மீதான நினைவுகள்‌, மூட்டம்‌ கலையாமல்‌ நடந்து கொண்டிருந்தது.

இலக்கியமாக எவ்வளவோ நல்ல நல்ல புத்தகங்கள்‌ படித்தும்‌ காசி இவ்வளவு

துன்பப்பட்டான்‌ என்பதை நினைத்தபோது காசியின்‌ அந்தப்‌ படிப்புமீதே எனக்கு சந்தேகமும்‌, சற்று எரிச்சலும்‌ உண்டாயிற்று. எதையும்‌ சந்திப்பதற்கு முன்னாலேயே பயப்பட்டுவிடும்‌ சுபாவம்‌ அவனுக்குள்‌ அடிப்டை சுபாவமாக ஓடிக்‌ கொண்டிருந்தபோல – ரத்த ஓட்டத்தினூடே குமிழியிட்டு ஒரு அவநம்பிக்கையாக, தெரியவில்லை.

திடீரென பத்திருபது நாட்கள்‌ இரவுகளில்‌ கண்‌ விழித்து நிறையப்‌ படிப்பான்‌. காசி. அப்போதெல்லாம்‌ நான்கு கடிதங்கள்‌ வாரத்துக்கு எழுதிவிடுவான்‌. கோயமுத்தூரில்‌ ஒரு கட்டத்தில்‌ காசிக்கு வேறொரு நல்ல நண்பனும்கூட இருந்தான்‌. அவன்‌ இளம்‌ வயச. புல்லாங்குழல்‌, ஓவியம்‌,

இரவில்‌ நெடுஞ்சாலையோரம்‌ ஒரு டீக்கடை முன்பு, அரைமணிக்கொரு டீ குடித்துக்கொண்டு, விடியற்காலை நான்கு, ஐந்து மணிவரை பேசிக்கொண்டே இருந்துவிட்டுப்‌ பிரிவார்களாம்‌. தனக்கு கலை – இலக்கிய விஷயங்களில்‌ நிறைய கற்றுத்தந்து, ரசனையை வளர்த்துவிட்டதில்‌ அவனுக்குப்‌

பெரும்‌ பங்குண்டு என்று காசியே அவனைப்‌ பற்றிச்‌ சொல்லியிருக்கிறான்‌. விளைவுகள்‌ பற்றி அஞ்சாத காசியின்‌ ஓட்டை வாய்‌ பலவீனம்‌ பல மென்மையான இதயங்‌ சில தருணங்களில்‌ பாயப்படுத்திவிடும்‌. அப்டி காயப்படுத்திய ஒரு கெட்ட தருணத்தில்‌ அந்த இளங்கவியின்‌ நட்பையும்‌

இழந்துவிட்டான்‌. காசி. இவ்வளவு தூரம்‌ காசி சரிந்ததற்கு, தொடராமல்‌ போன அந்த நட்பும்கூட ஒருவகையில்‌, காரணங்களில்‌ ஒன்றாக எனக்கு படுகிறது.

காசி முக்கால்‌ சந்திர கிரகணத்தின்போது பிறந்தவனென்னு ஒரு தரம்‌ சொல்லியிருக்கிறான்‌. சில காலம்‌ ஜோஸ்யத்தில்‌ கூட நம்பிக்கை வைத்துப்‌ பார்த்தான்‌. தன்‌ மன வழக்கப்படி அதையும்‌ விட்டான்‌ இடையில்‌. அவன்‌ வரையில்‌ எதுவும்‌ உறுதியில்லை என்னறே போய்க்‌ கொண்டிருக்கிறான்‌. தஸ்தாவாஸ்கியின்‌ ’71 11005௦ ௦406 11௦80 ஐத்‌ தமிழில்‌ படித்துவிட்டு எனக்கு ஒரு

கடிதத்தில்‌ எழுதினான்‌. ‘ஒவ்வொரு கைதியும்‌ சிறையிலே விருந்தாளியா இந்த இடம்‌ வந்துவிட்டுப்‌ போறோம்‌” ங்க மனப்பாங்குல தான்‌ இருக்காங்க. அதனாலே ஜம்பது வயசுலேயும்‌ அவன்‌ முப்பத்தஞ்சு வயசுக்காரனாட்டமே நினைச்சுட்டு நடந்துக்கறான்‌-னு கதைசொல்லி பெட்ரோவிச்‌

எழுதறான்‌… ஒரு விருந்தாளியா நானும்‌ என்னை நினைச்சட்டூ, இங்க காரியம்‌ செஞ்சுட்டுப்‌ போக முடிஞ்சா எவ்வளவு எவ்வளவு நல்லா இருக்கும்‌?”

ஆஸ்பத்திரிலிருந்து வந்தவன்‌, மூன்றாவது வாரம்‌ எனக்கொரு கடிதத்தில்‌ எழுதினான்‌: வில்லியம்‌ கால்லோஸ்‌ வில்லியம்ஸ்‌ படிச்சிட்டிருக்கேன்‌. நிறைய கவிதைகள்‌ எனக்கு பிடிச்சது. இடையிலே ஒரு தமாஷ்‌. ஜி.எச்‌.சிலே குடுத்த ஒரு குறிப்புச்‌ சீட்டு, பழைய டயரிலே இருந்தது கண்ணிலே பட்டது. ‘மறுமுறை பார்க்க… கிழமை மாலை 2 மணிக்கு வரவும்‌. இந்த சீட்டை பத்திரமாக

வைத்துக்‌ கொள்ளவும்‌’ னு குறிப்பு அச்சடிச்சிருந்த குட்டி 085௦ ஈ௦0% சீட்டு அது. அதிலே 01881055 ங்கற இடத்திலே பேனாவிலே பெரிசா எழுதியிருக்கு: போ£ரஈ0கா – 2ஷஸ்கர்‌ன்னு வடர ன்னா நம்பிக்கை துரோகம்‌ இல்லையே? எவர்‌ இருவர்க்கிடையே யாருக்கு யார்‌ பரிசளிச்சிட்ட நம்பிக்கை துரோகம்டா அது? டாக்டருக்குள்ளே பூந்து மாமனார்‌ எழுதீட்டார்‌ போல…

அந்த இன்‌-லேண்ட்‌ ‘ஸ்ரீராமஜெயத்திற்கு பதிலாக காசிக்கு நான்‌ ஒன்றுமே எழுதவில்லை. அவனிடமிருந்தும்‌ இந்த ஒன்றரை வருடங்களாகத்‌ தகவலே இல்லை. ஆனால்‌ சென்ற வாரம்‌ எனக்‌ இனிய அதிர்ச்சி. எதிர்பாராத விதமாக பெங்களூரில்‌ ஒரு மதுபான ‘பாரில்‌’ காசியைச்‌ சந்தித்தேன்‌.

சற்றே இளைத்திருந்தான்‌ காசி. நவீன மோஸ்தரில்‌ உடையும்‌ தலைவாரலும்‌. கண்ணுக்கு கீழ்‌ கருவளையங்கள்‌ மெல்ல வெளுத்து வருகிறதுபோல.

இருமனமொப்பிய திருமண விலக்கு (140/0 0௩௭௦௦) கிடைத்து விட்டதாகச்‌ சொன்னான்‌. முதல்‌ முறை விலக்கு பெற்றது போலவேத தனது அதே ‘குடும்ப வக்கீல்‌’ மூலமாகத்தான்‌ தன்‌ பெண்ணுக்கு இம்முறையும்‌ அதைச்‌ செய்ய வேண்டும்‌ என மாஜி மாமனார்‌ பிடிவாதம்‌ பிடித்து இழுத்ததில்‌ கொஞ்சம்‌ கால தாமதமாகிக்‌ கிடைத்தது என்றான்‌. அந்தச்‌ செய்தியில்‌ சிறு அதிர்ச்சியோ,

முழு சந்தோஷமோ எனக்கில்லை. ரம்மில்‌ ஒரு குவாட்டர்‌ குடித்துவிட்டு உட்கார்ந்திருந்தான்‌.வாயில்‌ புகைந்து கொண்டிருந்தது.

ஆச்சரியமான சந்திப்புதானிது என ஆர்வம்‌ பொங்க அவன்‌ முன்னால்‌ உட்கார்ந்திருந்தேன்‌.”அப்புறம்‌… என இங்க’ என்றதற்கு தன்‌ விசிடிங்‌ கார்டாக மேல்‌ பாக்கெட்டிலிருந்து எடுத்து நீட்டினான்‌. மார்க்கெட்டிங்‌ டைரக்டர்‌. அடேயப்பா! எனக்கு மிகுந்த சந்தோஷமாகிவிட்டது. பழையபடி

இல்லாமல்‌ எப்படியோ ஒரே தொழிலில்‌ ஒட்டிக்‌ கொண்டு, நட்பறுத்துக்‌ கொள்ளாமல்‌ கவனமாக முன்னேறி இருக்கிறான்‌ போல. வெயிட்டரிடம்‌ இன்னொரு டம்ளர்‌ கேட்டான்‌ காசி. ஒரு வேளை

அபயக்‌ கட்டையாகப்‌ பற்றினானே ‘காசு, காசு’ என்று, அந்த ஸ்ரீராமஜெயம்‌ பண்ணுகிற வேலையோ இவ்வளவும்‌!

“எப்படி – எல்லாம்‌’ என்றேன்‌ உற்சாகமாக.

“அது அது எப்படியோ அப்படித்தான்‌ அது அது’ என்றான்‌ வேதாந்தி மாதிரி. மாலையில்‌ தொடங்கியது இரவு பத்தரைவரை பேசிக்‌ கொண்டிருந்தோம்‌. தனது ஒன்றுவிட்ட அண்ணனிடம்‌ வட்டிக்கு கொஞ்சம்‌ பணம்‌ வாங்கி முதலீடு செய்திருப்பதாகச்‌ சொன்னான்‌. கூட இருக்கும்‌ நண்பரும்‌

நல்ல மாதிரி, பொருளாதார விஷயத்தில்‌ நிறைய ஒத்துழைக்கிறார்‌ என்றான்‌. இனி காசி பிழைத்து விடுவான்‌ என்று வாய்விட்டே சொன்னேன்‌. வாய்விட்டுச்‌ சிரித்தான்‌. ‘நானெங்கே இங்கே’ என்று என்னைக்‌ கேட்டான்‌. ஆயுள்‌ பாதுகாப்பு இன்சூரன்ஸ்‌ அலுவலக வேலையாக என்று நீட்டிச்‌ சொன்னேன்‌. சிரித்தான்‌. ‘நோ ப்ராப்ளம்‌’ என்றான்‌.

“பாரில்‌’ நிறைய கூட்டமிருந்தும்கூட, ஏ.சி.யானதாலோ என்னவோ அமைதி கூடி இருந்தது. எவர்‌ உரக்கப்‌ பேசினாலும்‌ தாழ்ந்தே கேட்டது. கேட்கவும்‌ சொல்லவும்‌ நிறைய இருந்தும்‌, இருவருக்ம்‌ இடையில்‌ என்னவோ சிறு தயக்கம்‌ நின்றிருந்தது. போதையின்‌ ஒரு முன்னேற்ற கட்டத்தில்‌ தயக்கம்‌ விலகிவிட்டது. ஐஸ்‌ கேட்டான்‌ காசி. என்‌ டம்ளரை சீக்கிரம்‌ காலியாக்கித்‌ தரச்‌ சொன்னான்‌. சிகரெட்டைக்‌ காட்டி எடூக்கவில்லையா என்றான்‌. நிறுத்தியாச்சு! – எப்பாச்சும்‌ இந்த மாதிரி சந்தர்ப்பங்களில்‌ மட்டும்‌ என்று, ஒன்றை எடுத்து உதட்டில்‌ பொருத்தினேன்‌. பீறிட்டுச்‌ சிரித்ததில்‌ ரம்‌ பொறையேறிவிட்டது.

நானும்‌ சிரித்துக்கொண்டே கேட்டேன்‌. “ஏண்டா காசி இப்படி சிரிக்கிறே?

“நோ ப்ராப்ளம்‌! இல்லடா குணா. சமீபத்தில்‌ ’00௦42951005 ௦8 28%௦’ னு ஒரு இத்தாலி நாவல்‌ படிச்சேன்‌. அதில்‌ 20 பக்கத்துக்கு ரெண்டாவது அத்தியாயம்‌. 706 185: சேன ன்னு. சிகரெட்‌ விடறது

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *