காசி – பாதசாரி – சிறுகதை

ஒத்தயா பயம்‌. தனிமை. வினாடிக எல்லாம்‌ சொடக்கு போடுது. என்னால முடியலே. மறுபடியும்‌ பழைய கோளாறு மனசிலே கிளம்பிருச்சுடா குணா. அப்பாகிட்டே வந்துட்டேன்‌. அப்பா மனம்‌ விட்டுப்‌ போச்சு. ‘இந்தப்‌ புத்தகமெல்லாம்‌ படிக்காம, இதப்‌ பிரிஞ்சு என்னாலே இருக்க

முடியாதுப்பா… என்னாலே அந்த விட்லே சமாளிக்க முடியாதுப்பா… அவங்க கெளரவத்துக்கு ஈடுகட்டிப்‌ போக முடியாதுப்பா… எனக்கு பயமா இருக்குது… அங்கிருந்தா நான்‌ தற்கொலை பண்ணக்குவேன்பா’ ன்னு கதறினேன்டா. ‘போகப்‌ போக சரியாப்‌ போகும்‌. நீ எதாச்சம்‌ வேலைக்குப்‌

போ முதல்லேன்னு அக்கா அக்றையா சொன்னா…மூடிட்டுப்‌ போன்னு அக்கா மேலே எரிஞ்சு விழுந்தேன்‌. ‘உன்னப்‌ பாத்துட்டு வந்தா கொஞ்சம்‌ மனசு நிம்மதிப்படும்‌’னு அப்பாகிட்டே சொன்னேன்‌. மொய்‌ வந்த பணத்திலே நூறு ரூபா தந்து அனுப்புனார்டா”.

ஒரு வாரம்‌ இருந்தான்‌. நானும்‌ சாமியாரிடம்‌ போவதை நிறுத்தி விட்டிருந்தேன்‌. கொஞ்ச நாள்‌ நிதானமாக சும்மா இருக்கச்‌ சொல்லி அனுப்பிவிட்டேன்‌. செயலுக்கான முடிவாக எதையும்‌ யோசித்துச்‌ சொல்லி முடியவில்லை எனக்கு. குற்றவுணர்வு வேறு மனதின்‌ ஒரு மூலையில்‌. அவனோடுசேர்ந்து பாக்கெட்‌ பாக்கெட்டாக சிகரெட்‌ சாம்பலே மிச்சம்‌.

கீழே போன காசியைப்‌ பற்றி இரண்டூ மாதங்களுக்குத்‌ தகவலே இல்லை. தன்ராஜ்‌ எழுதித்தான்‌ பின்னாடி விவரம்‌ தெரிந்தது.

காசி பழையபடி ஆரம்பித்துவிட்டிருக்கிறான்‌. கண்ட கண்ட தூக்க மாத்திரைகள்‌. பாதி நடிப்பு, மீதி பைத்தியமென குர்தாவைக்‌ கிழித்திருக்கிறான்‌. ஸ்கூட்டரை வேண்டுமென்றே சுவரில்‌

இடித்தான்‌. மாமனார்‌ பெயரிலுள்ள ஸ்கூட்டர்‌. அவருக்கு கோபம்‌ வராதா? போதை மாத்திரை அடிமை என்று செருப்பால்‌ அடிக்க வந்தார்‌. திடீரென ஒரு நாள்‌’இனி நல்லபடி இருப்பேன்‌’ என்ற திடீர்கங்கணத்தில்‌ அந்த அழகான உதடுகளுக்கு ஐஸ்கிரீம்‌, புதுப்படம்‌, ஸ்கூட்டர்‌ பவனி, பட்டுச்‌

சேலைக்கு வாக்களிப்பு என்று பூஜை போட்டான்‌. இரவில்‌ கழுத்துக்கு கீழே ஒரு – ஒரு தடவை மட்டுமே – புணர்ச்சி முடித்து, மாத்திரை இல்லாமலேயே நல்ல தூக்கம்‌. விடியும்‌ முன்பு 5 மணிக்கே எழுந்து ஸ்கூட்டரை விரட்டிக்‌ கொண்டு வந்து அப்‌,)வை எழுப்பினான்‌. இதற்கு ‘மொய்‌’ வந்த

பணத்தில்‌ நூறு காலி. இப்படி பூஜை நான்கைந்து முறை நடந்தது. பெண்‌ விட்டிலேயே காசி இரண்டூ வாரம்‌ தொடர்ந்து இருந்தான்‌. படிப்பறிவு அதிகமில்லாத அப்பாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. சிறுவன்போல கதறி அழுதார்‌. மீண்டும்‌ தூக்க மாத்திரைகள்‌ விழுங்கிவிட்டான்‌. ஆத்மார்த்தமான

தற்கொலை முயற்சி. கடிதம்‌ வேறு எழுதி வைத்துவிட்டு கட்டிலேறினான்‌. கதவைத்‌ தாளிட்டிருந்தான்‌. நம்பிக்கையோடு கண்‌ மூடினான்‌. அடுத்த நாள்‌ காலையில்‌ கண்‌ விழித்துவிட்டது. பயங்கர ஏமாற்றம்‌. ஆத்மார்த்தத்தின்‌ ஏமாற்றம்‌. ஆவேசம்‌ கட்டுப்படாமல்‌ கையில்‌ கவர பிளேடு

எடுத்தான்‌. தடுமாறிக்‌ கொண்டே நடந்து போய்‌…

ஜி.எச்‌.சில்‌ இரண்டூ வாரங்கள்‌ இருந்தான்‌ காசி. அதி தீவிர சிகிச்சைப்‌ பிரிவில்‌ முதல்‌ வாரம்‌. கழுத்தில்‌ ஒரு சின்ன ஆபரேன்‌. கால்மாட்டில்‌ கேஸ்‌ நோட்டீஸ்‌.  

காசியின்‌ இன்‌-லேண்ட்‌ மேஜை விரிப்பின்கீழ்‌ சொருகிவிட்டு வெளியே வந்தேன்‌. மேகமூட்டம்‌. கன்னுக்குட்டியை ‘பலனு’க்கு பக்கத்துத்‌ தோட்டத்திற்குப்‌ பிடித்துக்கொண்டு போகவேண்டிய வேலை. அம்மாவும்‌, தங்‌ ம்‌ க்காய்‌ பறித்துக்‌ கொண்டிருக்கிறார்கள்‌.

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *