காசி – பாதசாரி – சிறுகதை

போன வருஷம்‌ இதே மாதத்தில்‌ காசி தற்கொலை செய்துகொண்டு பிழைத்து -விட்டான்‌. கல்யாணம்‌ செய்துகொண்ட நான்காவது மாதம்‌, சவர பிளேடால்‌ கழுத்தை ஆழ அறுத்துக்‌கொண்டான்‌.உறைந்த ரத்தப்‌ படுக்கைமீது   நினைவிழந்து கிடந்தவனை கதவை உடைத்துப்‌ புகுந்து எடுத்து ஜி.எச்‌.சில்‌ அட்மிட்‌ செய்தார்கள்‌.

ஊரில்‌ நான்கு பேர்‌ ‘மறைலூஸ்‌’ என்று கருதும்‌ காசியைப்‌ பற்றி எனக்கு அப்படி நினைக்க முடியவில்லை. எல்லோரையும்‌ போல, தனக்கும்‌ இந்த நாக்கு பேருக்கும்‌ இடையிலான ‘ஷாக்‌’ அப்ஸார்பரை’ பழுது பார்த்து சரியாக வைத்துக்‌ கொள்ளாமல்‌, இவர்கள்‌ உறவென்று மெச்சுகிற பாதையின்‌ குண்டு குழிகளில்‌ அடிபட்டுக்‌ கொண்டிருக்கிறான்‌ என்றுதான்‌ சொல்லத்‌ தோன்றுகிறது.

நேற்று காசியிடமிருந்து கடிதம்‌, ‘காசுதான்‌ சுதந்திரம்‌ காசுதான்‌ சுதந்திரம்‌ காசுதான்‌ சுதந்திரம்‌’ என்று ஸ்ரீராமஜெயம்‌ மாதிரி இன்லேண்டு முழுக்க எழுதியிருக்கிறான்‌. ஆறு மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூர்‌ போனபோது ஒரு டீக்கடை வாசலில்‌ காசியை யதேச்சையாக சந்தித்தேன்‌. உணர்ச்சி

முண்ட கைகளைப்‌ பற்றிக்‌ கொண்டான்‌. தன்னோடு அதிக நேரம்‌ இருக்க வேண்டுமென்று கெஞ்சினான்‌. என்‌ அப்பாவுக்கு அடுத்த நாள்‌ வருஷாந்திரம்‌. இரவுக்குள்‌ மலைக்கிராமம்‌ என்‌ தோட்டம்‌ போய்ச்‌ சேர வேண்டியிருந்தது. சொன்னேன்‌. வாடினான்‌. சரி என்று பார்க்‌ பக்கம்‌ போனோம்‌.

எனக்கு வேலை ஏதும்‌ கிடைக்காமலிருந்த காலத்தில்‌ யாராவது என்னைப்‌ பார்த்து ‘இப்ப என்ன பண்றீங்க?’ என்று கேட்டால்‌ சங்கடத்தில்‌ கூசிப்‌ போய்‌ சமாளிப்பாக எதையாவது சொல்வேன்‌. அந்த வேதனை தனிரகம்‌. காசியிடம்‌ அதே கேள்வியை பூடகமாக விட்டேன்‌ – “அப்புறம்‌..? இப்ப…”

“ஒரு நண்பனோடு சேர்ந்து, மருந்து மொத்த வியாபாரம்‌ சின்னதாப்பண்றோம்‌. அப்பாகிட்டே இனி விட்டுப்‌ பத்திரம்தான்‌ பாக்கி. தரேன்னார்‌. அதை வைச்சு பேங்க்லே லோன்‌ முயற்சி. கிடைச்சா இது ஒரு மாதிரியா தொடரும்‌…” கேட்‌ பூட்டியிருந்தது. பார்க்கில்‌ சுவரெட்டிக்‌ குதித்து உள்ளே போனோம்‌.

மறைவான புல்வெளி தேடி உட்காரும்போது ஞாபகம்‌ தட்டியது. சிகரெட்‌ வாங்கவில்லை. ‘இருக்கு’ என தன்‌ ஜோல்னாப்‌ பையிலிருந்து சிகரெட்‌, தீப்பெட்டி எடுத்துப்‌ புல்மீது வைத்தான்‌.

“வியாபார உலகம்‌ ரொம்ப கஷ்டப்படுத்துது. நிறைய கேவலமான அனுபவங்கள்‌. மறைமுக-வரி மாதிரி மருந்து வியாபாரத்தில்‌ மறைமுக பங்குதாரங்களா இருக்காங்க டாக்டர்ஸ்‌. எப்படீனா, ஒரு டானிக்‌ பாட்டில்‌ பிரிஸ்கிரிப்ஷன்‌ எழுத வைக்க, ஒரு டாக்டருக்கு மூணுரூபா லஞ்சம்‌ தரணும்‌.

நூறு பாட்டில்‌ டானிக்‌ விக்க மாசம்‌ முன்னூறு ரூபா லஞ்சம்‌..இதில்லாம பெரிய கம்பெனிமருந்துக்குன்னா, கம்பெனியே நேரடியாக அன்பளிப்பு டி.வி, கிரைண்டர்‌, ஃபிரிட்ஜ்னு… குமட்டுதுடா

குணா…”

காசியின்‌ முகத்துமேல்‌ செல்லமாகப்‌ புகை வளையங்களை ஊதிவிட்டேன்‌ “இதிலே எவ்வளவு நாள்‌ தாக்குப்‌ பிடிப்பேன்னு தெரியலை. பழையபடிதாண்டா இருக்கு குணா. அடுத்த வினாடி மேலே எடுத்த காலூன முடியலே.” காசி ஒரு சிகரெட்டைப்‌ பற்ற வைத்துக்‌ கொண்டான்‌. அவனது ஜோல்னாப்‌ பைமீது ‘சொத்‌’ தென வெள்ளையும்‌ பழுப்பும்‌ கலந்த எச்சம்‌ தெறித்தது.

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *