Reservation (இடஒதுக்கீடு) இன்னும் தேவையா ? உங்களுக்கான பதில் இங்கே

இந்தியா பல்வேறு மத சாதிய ஏழை பணக்கார மக்களை கொண்ட பன்மைத்துவம் வாய்ந்த நாடு . அப்படிபட்ட நாட்டில் கீழ் நிலையில் இருப்பவர்களை முன்னேற்றி மேல்நிலைக்கு கொண்டுவர அவர்களுக்கு எதை செய்ய முடியும் ? ரிசர்வேஷன் ஒன்று மட்டுமேதான் அதற்கு வழி .

ரிசர்வேஷன் என்றால் நாம் இன்று புரிந்துகொண்டிருப்பது SC ST மாணவன் 900 மார்க் எடுத்தால் போதுமானது ஒரு கல்லூரியில் படிக்க , அதே கல்லூரியில் படிக்க BC மாணவன் 980 எடுக்க வேண்டும் . OC மாணவனோ 1100 க்கு மேலே எடுக்க வேண்டும் .

இதே போன்றுதான் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது . இவ்வளவுதான்.

இதனை நாம் கல்லூரியில் இடம் , வேலைவாய்ப்பில் இடம் என்பதோடு மட்டுமே ஒப்பிட்டு பார்க்கிறோம் . ஆனால் நாம் ஒப்பிட்டு பார்க்கவேண்டியது அதோடு அல்ல . அம்பேத்கார் அவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய போது மிகத்தெளிவாக அனைத்து சமூக மக்களையும் சம வாய்ப்பு பெற்றவர்களாக மாற்றிட வேண்டும் , கீழ் நிலையில் இருப்பவர்களை மேல் கொண்டுவர வேண்டும் எனவும் எண்ணியே இடஒதுக்கீட்டை கொண்டுவந்தார் .சமூக நிலையோடு ஒப்பிட்டு பாருங்கள் தவறாக இருக்காது .

OC க்கு குறைவு SC க்கு அதிகம் ஏன் ?

அம்பேத்கார் அவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிடும்போது சமூக அந்தஸ்திலும் பொருளாதார நிலையிலும் கீழ் நிலையில் இருந்தவர்கள் SC ST பிரிவினர் . அதே காலகட்டத்தில் அரசு வேலையிலும் உயரிய சமூக பொருளதார நிலையிலும் இருந்தவர்கள் OC பிரிவினர் . இடைப்பட்ட நிலையில் இருந்தவர்கள் BC மற்றும் OBC எனப்படுவோர் .

இப்போது நீங்களே சொல்லுங்கள் கீழ் நிலையில் அதுவரை முதல்தலைமுறை படிப்பே பெறாத SC ST பிரிவினரை அதிக இடங்களில் படித்து வேலைபார்ப்பவர்களுக்கு இணையாக கொண்டுவர வேண்டுமெனில் இடஒதுக்கீடு கொடுத்தால் தானே முடியும் . அதற்காகத்தான் அவர்கள் குறைந்த  மதிப்பெண் பெற்றால் போதும் என கூறியதாவது அவர்களுக்கு படிக்க இடம் கொடுக்கப்படுகிறது .

உங்கள் கேள்விகளுக்கான  பதில் :

அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு  சாதியை காரணம் காட்டி மறுத்து குறைவான மதிப்பெண்ணை பெற்றவருக்கு கொடுப்பது சரியா ?

படிப்பு , வேலை என்ற நோக்கில் மட்டும் பார்த்தால் சரியல்ல . ஆனால் அரசியலமைப்பை எழுதியவர்களின் நோக்கம் சமமான சமூகத்தை கட்டமைப்பதுதான் . உதாரணத்திற்கு 1100 மதிப்பெண் பெற்ற OC மாணவனுக்கு இடம் கொடுக்காமல் 900 மதிப்பெண் பெற்ற சாக்கடை அள்ளும் தொழிலாலியின் மகனுக்கு இடம் கொடுப்பது அதனால் தான் .

அவனுக்கு அந்த வாய்ப்பை கொடுப்பதனால் படிப்பான் . அதனால் வேலையை பெறுவான் . அவனது குடும்பம் நல்ல பொருளதார நிலையை அடையும் . அவனது பிள்ளைகளை படிக்கவைப்பான் .அவன் சமூகத்திற்கு உதவுவான் .

ஆனால் அந்த OC மாணவன் பாதிக்கப்படுகிறானே ?

ஆம் உண்மைதான் . கஷ்டப்பட்டு படித்த அவர் நிச்சயமாக பாதிக்கப்படுவார்த்தான் . ஆனால் சமூக சமத்துவத்திற்காக எடுக்கப்படும் முயற்சிகளில் சிலர் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது .

இடஒதுக்கீடு முடிவுக்கு வருவது எப்போது ?

இடஒதுக்கீடு வந்து 70 ஆண்டுகளை கடந்துவிட்டோம் . அப்போதைய இந்தியாவின் அடிமட்டத்தில் இருந்த மக்களின் நிலை இன்று பெரிய அளவில்  மாறியிருக்கிறது . சமூகத்தில் பொருளாதாரத்தில் நல்ல நிலையை அடைந்துவிட்டார்கள் (அனைவரும் இலர் ) . தற்போது அவர்களுக்கு அரசின் இடஒதுக்கீடு இல்லாமலே வாழும் திறனும் படிப்பறிவும் வந்துவிட்டது .

அம்பேத்கார் கூறியுள்ளதைப்போல அனைவரும் சம நிலைக்கு வந்த பின்பு தான் இடஒதுக்கீட்டை நிறுத்த வேண்டும் . இன்றும் சில குறிப்பிட்ட சமூக மக்களின் நிலை உயராமல் இருக்கின்றது . அவர்களின் நிலையை உயர்த்திட முன்னுரிமை அளித்திட வேண்டும் .

பொருளதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை கொண்டுவரும் தருணம் வந்துகொண்டிருக்கிறது . அதுவே முடிவாக இருக்கும் .

சமூக கட்டமைப்பில் சிலருக்கு வாய்ப்புகள் கிடைக்க அரசியலமைப்பு சட்டம் வாய்ப்பு கொடுத்தது அவர்கள் படித்தால் வேலைக்கு சென்றால் அந்த மக்களின் நிலை உயரும் . மேலே வருவார்கள் என்பதால் தான் .சமூகம் சமநிலையை அடையும் என்பதால் தான் .

ஏற்ற தாழ்வு உள்ள சமூகத்தில் இடஒதுக்கீடு அவசியம் . இன்று சாதியை வைத்து நடப்பது நாளை பொருளாதாரத்தை வைத்து நடக்கும் . அதுவே முடிவாக இருக்கும்.

 

இடஒதுக்கீட்டால் நல்ல நிலைக்கு வந்துவிட்டவர்கள் தானாக முன்வந்து தனது சாதியால் கிடைக்கும் இடஒதுக்கீட்டை மறுத்து பிறரின் நிலை உயர முன்வரவேண்டும்.

நன்றி

பாமரன் கருத்து

Share with your friends !

4 thoughts on “Reservation (இடஒதுக்கீடு) இன்னும் தேவையா ? உங்களுக்கான பதில் இங்கே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *