கடவுள் இருப்பது உண்மையா? ஏன் நம்புகிறான் மனிதன்?
இதுவரை அறிவியல் பூர்வமாக கடவுள் இருப்பது நிரூபிக்கப்படவில்லை . இதுவரை எவரும் கடவுளை கண்களால் கண்டதில்லை . இருந்தும் அறிவியல் அறிஞர்கள் , படித்தவர்கள் உட்பட பலரும் கடவுளை நம்புகின்றார்கள் .
மற்ற அனைத்திலும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால்தான் ஒப்புக்கொள்வோம் என சொல்கின்ற மனிதன் , கடவுள் விசயத்தில் மட்டும் அறிவியலை நம்புவதில்லை .
கடவுள் மீது அவ்வளவு பற்றா என ஆச்சர்யப்பட்டவர்களில் நானும் ஒருவன்
நம்மை மீறிய சக்தி ஒன்றுதான் நம்மையெல்லாம் படைத்து இயக்கிக்கொண்டு இருக்கிறார் , நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் அவரே காரணமென்று சொல்வது வழக்கமான ஒன்று .
ஆனால் உலகம் உருவானதற்கும் நிகழ்வுகள் நடப்பதற்கும் கடவுள் போன்ற மூன்றாம் நபரின் சக்தி காரணமல்ல என்பது புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் அவர்களின் கருத்து .
இதற்கு உதாரணமாக அவர் இவ்வாறு கேள்வியெழுப்புகிறார் ,
ஒரு பந்தை டென்னிஸ் மட்டையால் அடிக்கும்போது பந்து முன்னோக்கி சென்று விழுவது இயற்கையான ஒன்று . பந்து விழுவதற்கு காரணம் அதன் மீது கொடுக்கப்படுகின்ற ஆற்றல் மற்றும் புவி ஈர்ப்பு விசை . இந்த இரண்டுமே இயற்கையாக அமைந்த ஒன்று .
ஆனால் அதே பந்து இயற்கைக்கு முரணாக பின்னோக்கி சென்று விழுமாயின் அங்கு மூன்றாம் நபரின் (கடவுள்) சக்தி செயல்பட்டிருக்கிறது எனலாம். ஆனால் அப்படியொன்று நடக்குமா? இது ஓர் உதாரணம் தான் . இதனைபோலவே தான் நடக்கின்ற அனைத்திற்கும் காரணமென்று ஒன்று இருந்தே தீருகிறது .
பிறகு எதற்கு மனிதன் கடவுளை நம்புகிறான் , சோதனைக்கு உட்படுத்த மறுக்கிறான் , யாரேனும் கடவுள் இல்லையென்று சொன்னாலும் ஒப்புக்கொள்ள மறுக்கிறான் ?
இத்தனை கேள்விகளுக்கும் ஒரே ஒரு பதில்தான் “நடப்பவைக்கு தான் தான் காரணமென்று ஒப்புக்கொள்வதற்கு பயப்படும் மனிதன் , கடவுளை காரணகர்த்தாவாக்கிவிட்டு தப்பித்து கொள்கிறான் . தனது சுமைகளை கடவுளிடம் ஒப்புவித்துவிட்டு தனக்கு சம்பந்தம் இல்லாதவனை போல நடந்துகொள்வது மனிதனுக்கு சுலபமாயிருக்கிறது , நிம்மதியளிக்கிறது “
இந்த பதிவு ஆரோக்கியமான விவாதத்திற்கு மட்டுமேயானது.
தொடர்ந்து பேசுவோம்
பாமரன் கருத்து
வணக்கம் ஐயா!
நான், கடவுளை காண்பதற்காக சத்யலோகம் சென்ற என் பயண அனுபவத்தை, ஒரு கட்டுரை
வடிவில் எழுதியிருக்கிறேன். இதை நீங்கள் ஒரு முறையேனும் படிக்க வேண்டுகிறேன்!
நன்றி ஐயா!
http://www.eppoluthu.blogspot.in