நோபல் பரிசு சில சுவாரஸ்ய தகவல்கள் | Interesting facts about Nobel Prize
கடுமையான உழைப்பிற்கு கொடுக்கப்படும் பெரிய வெகுமதி ‘அங்கீகாரம்’ .
அதற்காகத்தான் விருதுகளும் பரிசுகளும் வழங்கப்படுகின்றன . தற்போதைய நிலவரப்படி அதிமுக்கியத்துவம் வாய்ந்த விருதுகளில் முதன்மையானதாக இருப்பது நோபல் விருது . alfred Nobel என்பவரது உருவம் பொறிக்கப்பட்டிருக்கும் பதக்கமும் வெகுமதியும் நோபல் பரிசினை வெல்பவர்களுக்கு கொடுக்கப்படும் .
நோபல் பரிசு உருவான விதம்
Alfred nobel என்பவர் டயனமைட் என்ற வெடிபொருளை கண்டுபிடித்தவர் . அதன் மூலமாக அவருக்கு ஏராளமான வருமானம் கிடைத்ததாக சொல்கிறார்கள் . அதனை தவிர்த்து அவர் சிந்தடிக் ரப்பர் , ஆர்டிபிசியல் சில்க் , சிந்தடிக் லெதர் பொன்றவற்றை கண்டுபிடிப்பதிலும் பங்காற்றியிருக்கிறார் .கிட்டதட்ட 350 க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை பெற்றிருக்கிறார் .
அவர் இறக்கும் போது அவரிடமிருந்த 9 மில்லியன் பணத்தினை வைத்து மனிதர்களுக்கு பயன்படக்கூடிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்போருக்கும் அமைதிக்காக பாடுபடுபவர்களுக்கும் விருதினை அளிக்கவேண்டும் என முடிவு செய்தார் . அவரது விருப்பப்படி 5 நோபல் விருதுகள் ஏற்படுத்தப்பட்டன . அதன்படி இலக்கியம் , வேதியியல் , இயற்பியல் , அமைதி , மருத்துவம் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்படுவோருக்கு விருதும் பண முடிப்பும் பரிசாக வழங்கப்படும்.
நோபல் பரிசு விபரம்
நோபல் பதக்கம் : தங்கமுலாம் பூசப்பட்ட நோபல் பதக்கம் 18 கேரட்டினால் செய்யபட்டது
பண பரிசு : பரிசாக 9 லட்சம் SEK Swedish Krona வழங்கப்படும் சுவீடன் பணம்
ஒரு துறையில் ஒருவருக்கோ அல்லது இவருக்கோ அல்லது மூவருக்கோ அதிகபட்சமாக விருது வழங்கப்படும் . இருவருக்கு வழங்கப்படும்போது விருதுக்கான பணத்தினை சமமாக பகிர்ந்துகொள்ளலாம் . மூவருக்கு வழங்கப்படும்போது சரிபாதி ஒருவருக்கும் , மற்றொரு பாதியை பகிர்ந்து மற்ற இருவரும் எடுத்துக்கொள்ள வேண்டும் .
ஆரம்பத்திலே ஐந்து துறைகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுவந்த இவ்விருதானது Sweden’s central bank Sveriges Riksbank இன் பங்களிப்பினால் பொருளாதார அறிவியலுக்கும் 1968 க்கு பிறகு வழங்கப்பட்டு வருகின்றது .
நோபல் பரிசு, சில முரண்பாடுகள்
அமைதிக்காக போராடுகிறவர்களுக்கும் நோபல் விருது கொடுக்கப்படுகின்றது . டயனமைட் வெடிபொருளை கண்டறிந்தவர் அமைதிக்கான விருதினை ஏற்படுத்தி கொடுத்தது பெரும்பாலானவர்களால் ஆச்சரியமாக பார்க்கப்படுகின்றது . ஆனால் அவர் உளமார ஆக்கபூர்வத்திற்க்காகவே உருவாக்கியதாக கூறுகிறார்கள் , அவரை அறிந்தவர்கள் .
பல துறைகளில் மனித வாழ்விற்கு உபயோகமான எண்ணற்ற கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டாலும் குறிப்பிட்ட துறைகளுக்கு மட்டுமே வழங்கப்படுவதனால் அத்தகையோர் அங்கீகாரம் பெறாமலே போய்விடுகின்றனர் . உதாரணத்திற்கு நில நடுக்கத்தை முன்கூட்டியே கண்டுபிடிப்பது எப்படி என்பதனை கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை . மனிதர்களுக்கு பயன்படும் விதத்திலான கண்டுபிடிப்பாக இருக்கவேண்டும் என்ற நோபல் அவர்களின் அடிப்படை கூற்றை இக்கண்டுபிடிப்பு நிறைவேற்றி இருந்தாலும் Earth Science துறைக்கு நோபல் விருது வழங்கப்படுவதில்லை என்ற காரணத்திற்காக விஞ்ஞானிகள் விருதினை பெற இயலவில்லை .
ஒரே கண்டுபிடிப்பு முயற்சியில் பலர் ஈடுபட்டு இருக்கும்போது யாருக்கு விருது கொடுப்பது என்கிற குழப்பம் நேர்ந்தாலோ அல்லது அதிகபட்சமாக மூன்று நபருக்குத்தான் வழங்கப்பட முடியும் என்கிற கட்டுப்பாட்டினாலும் பல கண்டுபிடிப்பாளர்கள் விருதினை வாங்க முடிவது இல்லை . உதாரணத்திற்கு அனஸ்தியா என்கிற மயக்க மருந்தினை கண்டுபிடித்ததற்கு விருது இன்னும் கிடைக்காமலே இருக்கின்றது .
தொடர்ந்து இதுபோன்ற பதிவுகளை படிக்க பாமரன் கருத்து ஐ Subscribe செய்திடுங்கள்.