இந்தியர்கள் விவசாயம் செய்வதை அரசு உண்மையாகவே விரும்பவில்லை. ஏன் தெரியுமா ?
ஆப்ரிக்காவில் விளைகின்றன நமக்கான உணவு பொருள்கள் ..தெரியுமா ?
நமக்கான உணவு பொருள்களை இந்திய நிறுவனங்கள் ஆப்பிரிக்கா போன்ற ஏழை நாடுகளில் விளைவிக்கின்றன என்கிற விஷயம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். ஆனால் அதுதான் உண்மை. இந்திய மட்டுமல்ல உலகில் பல வளர்ந்த வளரும் நாடுகள் ஆப்ரிக்கா எத்தியோப்பியா போன்ற நாடுகளில் தான் தங்கள் நாட்டுக்கு தேவையான உணவு பொருள்களை விளைவித்து இறக்குமதி செய்து கொள்கின்றன.
சொந்த நிலம் இருக்க ஆப்பிரிக்கா ஏன் ?
நல்ல கேள்வி. இந்தியாவில் விவசாயம் செய்யும்போது விவசாயிகளுக்கு மானியம் கடன் உள்ளிட்டவற்றை அரசாங்கம் கொடுக்கவேண்டி இருக்கின்றது. மேலும் கூலி ஆட்களுக்கும் உரம் போன்ற பொருள்களுக்கும் ஆகின்ற செலவு ஏராளம்.
ஆனால் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் நம் நிறுவனங்கள் பல லட்சம் ஏக்கர் நிலங்களை குத்தகைக்கு எடுத்துள்ளன. அதுவும் மிக குறைந்த விலைக்கு 1 ஹெக்ட்ர் (2.5 ஏக்கர்) வெறும் ரூ 70 க்கு. அதுமட்டுமில்லாமல் அங்கு ஆட்களுக்கு கொடுக்கக்கூடிய கூலியும் மிக குறைவு. எனவே உணவினை இந்தியாவில் உற்பத்தி செய்வதை விட ஆப்பிரிக்காவில் உற்பத்தி செய்து இறக்குமதி செய்வது இந்திய அரசுக்கும் தலைவலி இல்லாத வேலை, தனியார் நிறுவனங்களும் காசு பார்க்கும்.
எகனாமிக் டைம்ஸ் நாளிதழில் வெளியான தகவல்படி சுமார் 80 இந்திய நிறுவனங்கள் ரூ 11,300 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளதாக தகவல் இருக்கின்றது. குறிப்பாக ஆப்பிரிக்கா ,கென்யா, எத்தியோப்பியா ,மடகாஸ்கர் போன்ற நாடுகளில் அதிகமாக முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற காரணங்கள் இருப்பதால் தான் இந்திய அரசின் நிலைப்பாடு விவசாயத்திற்கு எதிரானதாக மட்டுமே இருக்கின்றது . விவசாயிகள் கொல்லப்பட்ட போதும் டெல்லியில் நாற்பது நாட்களுக்கும் மேலாக போராட்டங்கள் நடந்த போதும் கண்டுகொள்ளாமல் இருந்ததற்கான காரணங்கள் .
அங்கு செலவு குறைவென்றால் நல்ல விஷயம்தானே ?
செலவு குறைவான இடத்தில் உற்பத்தி செய்வது என்பது நல்ல விஷயம் தான். ஆனால் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருக்கக்கூடிய மக்கள் நாம் அங்கு உணவு உற்பத்தி செய்வதை விரும்பாத சூழ்நிலையில் அவர்களின் ஏழ்மையையும் அந்த அரசாங்கத்தின் அடக்குமுறையையும் கொண்டே விவசாயம் நடந்து வருகின்றது . அந்த மக்கள் எவ்வளவு நாள் அடக்குமுறைக்கு ஒடுங்கி இருப்பார்கள் ? ஒருநாள் விழித்துக்கொண்டால் என்னாகும் ?
ஆம் இன்று ஆப்பிரிக்காவில் குறைத்த விலைக்கு உணவினை உற்பத்தி செய்யமுடிகிறது என்பதற்காக இந்தியாவில் முழுமையாக விவசாயத்தை ஒழித்து விட்டு அனைவரையும் வேறு வேலைக்கு பழக்க படுத்திய பிறகு, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் செயற்பாட்டாளர்கள் கிளர்ந்து எழுந்து வெளிநாட்டு கம்பெனிகளை அடித்து துரத்தினால் அப்போது நாம் உணவிற்கு எங்கே செல்வது? பயன்படுத்தப்படாத நம்முடைய நிலங்களில் விவசாயம் செய்ய முடியுமா ?
இதையெல்லாம் இப்போதுள்ள ஆட்சியாளர்கள் யோசிப்பது கிடையாது. அவர்களுக்கு நாட்டு பொருளாதாரம் எப்படியோ உயரவேண்டும் தனியார் கம்பெனிகள் சம்பாரித்து கொட்ட வேண்டும். இதுதான் முக்கியம்.
பிற்காலத்தில் உணவு உற்பத்தி குறைந்து தற்போது பெட்ரோல் போன்று கடின விலைக்கு உணவு பொருள்கள் விற்றால் அதனால் பாதிக்கப்படுவது அவர்கள் இல்லையே ஏழை எளிய மக்கள் தானே.
காங்கிரஸ் பாஜக போன்ற எந்த கட்சி ஆட்சியமைத்தாலும் அவர்களில் கொள்கை இந்திய மக்களை லாபம் குறைந்த விவசாயத்திலிருந்து வெளியேற்றி பிற தொழில்களை செய்ய வைப்பது தான். ஆகவே ஆட்சி மாறுவதில் பயனில்லை. கொள்கை தான் மாறவேண்டும்.
பிறரும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ள வேண்டுமானால் நீங்கள் பகிர வேண்டும்.
நன்றி
பாமரன் கருத்து