விவேகானந்தர் – ஜேம்ஷெட்ஜி டாடா சந்திப்பு எப்படி இந்தியாவையே புரட்டிப்போட்டது?

உலக அளவில் சிறந்த தொழில்நுட்ப ஆய்வு நிறுவனமாக விளங்கி வருகிறது இந்தியன் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் [Indian Institute of Science (IISC)]. இதனை உருவாக்கிட அடித்தளமிட்டவர் ஜேம்ஷெட்ஜி டாடா. ஆனால் அவருக்கு அத்தகைய எண்ணத்தை விதைத்தவர் சுவாமி விவேகானந்தர். ஆச்சர்யமாக உள்ளதா? இருவரின் சந்திப்பு இந்திய தொழில்நுட்பத்துறையில் பெரிய மாற்றத்தை உண்டாக்கியது.

மே 31, 1893 ஆம் ஆண்டு SS Empress of India என்ற கப்பல் ஜப்பானின் யோகோகாமா துறைமுகத்தில் இருந்து கனடாவின் வான்கூவர் துறைமுகத்திற்கு சென்றுகொண்டு இருந்தது. அந்தக் கப்பலில் தான் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ஆளுமைகள் முதல் முறையாக சந்தித்துக்கொண்டனர். இந்துமதத்தின் மிகப்பெரிய மகானாக பார்க்கப்படும் விவேகாந்தர் அவர்களும் இந்தியாவில் தொழில்துறையில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்த ஜேம்ஷெட்ஜி டாடா அவர்களும் சந்தித்துக்கொண்டனர். இருவரும் இதற்கு முன்பு சந்தித்துக்கொண்டதில்லை என்றபோதிலும் கூட ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்து வைத்திருந்தனர்.

மதங்களின் உலக நாடாளுமன்றம் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பங்கேற்று இந்து மதத்தின் சிறப்புகளை மேற்குலகம் அறிய செய்வதற்காக பயணம் மேற்கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர். ஜப்பானில் இருந்து தொழில்நுட்பக்கருவிகளை இறக்குமதி செய்து இந்தியாவை தொழில்துறையில் முன்னேற்ற வேண்டும் என்பதற்காக பயணம் மேற்கொண்டிருந்தார் ஜேம்ஷெட்ஜி டாடா. இருவருமே வெவ்வேறு துறை சாந்தவர்கள் தான். ஆனால் இருவருமே இந்தியாவை தங்களுக்கு தெரிந்த வழியில் மேம்படுத்த பயணம் மேற்கொண்டிருந்தார்கள்.

இந்த சந்திப்பின்போது, விவேகானந்தர் தன்னுடைய சுற்றுப்பயணங்களில் கிடைத்த அனுபவங்களை டாடாவிடம் பகிர்ந்துகொண்டு வந்தார். அதோடு இந்தியர்களின் திறமை குறித்தும் அது எப்படி அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் தனது கருத்தை பகிர்ந்துகொண்டிருந்தார். விவேகானந்தரின் பேச்சில் ஆர்வமடைந்த டாடா அவரின் பேச்சுக்கு மறுப்பேதும் சொல்லாமல் அவர் சொல்வதை கேட்டுக்கொண்டு இருந்தார். பிறகு, தான் ஜப்பான் நாட்டுக்கு இயந்திரங்களை இறக்குமதி செய்திட வந்துள்ளதாக டாடா சொன்னார். அதற்கு, ஏன் இந்தியாவிலேயே இவற்றையெல்லாம் தயாரிக்கலாமே, இந்தியாவில் மிகப்பெரிய திறமைசாலிகள் இருக்கிறார்களே. இதற்காக ஒரு ஆய்வு நிறுவனத்தை நீங்கள் இந்தியாவில் ஆரம்பிக்கலாமே. அதன் மூலமாக திறமைகளை கண்டுபிடித்து பயன்படுத்தலாமே என அறிவுரை கூறினார். அப்படி செய்திவது ஆரம்பத்தில் தேவையற்ற செலவு என்று தோன்றலாம் ஆனால் எதிர்காலத்திற்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் கூறினார் விவேகானந்தர். இருவருக்குள்ளும் நடைபெற்ற சந்திப்பு இவ்வளவு தான். இதற்குப் பின்பு இருவரும் சந்தித்துக்கொள்ளவே இல்லை. 

உலக அளவில் சிறந்த தொழில்நுட்ப ஆய்வு நிறுவனமாக விளங்கி வருகிறது இந்தியன் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் [Indian Institute of Science (IISC)]. இதனை உருவாக்கிட அடித்தளமிட்டவர் ஜேம்ஷெட்ஜி டாடா. ஆனால் அவருக்கு அத்தகைய எண்ணத்தை விதைத்தவர் சுவாமி விவேகானந்தர். ஆச்சர்யமாக உள்ளதா? இருவரின் சந்திப்பு இந்திய தொழில்நுட்பத்துறையில் பெரிய மாற்றத்தை உண்டாக்கியது.

விவேகானந்தர் சொல்லிவிட்டுப்போன வார்த்தைகள் டாடாவை விழிப்படைய வைத்தன. அவரை தூங்கவிடாமல் செய்தன. கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கழித்து சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு ஜேம்ஷெட்ஜி டாடா ஒரு கடிதம் எழுதினார். அதில் இந்தியாவில் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தை துவங்க எண்ணியிருப்பதாகவும் அதனை செயல்படுத்த தங்களின் பங்களிப்பு அவசியம் எனவும் அழைப்பு விடுத்திருந்தார். அந்த தருணத்தில், சுவாமி விவேகானந்தர் ராமகிருஷ்ணா மிஷன் வேலைகளில் ஈடுபட்டிருந்தபடியால் தன்னுடைய சிஷ்யையான நிவேதிதா வை அனுப்பி வைத்தார். அவரும் டாட்டாவிற்கு உதவியாக இருந்தார்.

ஜூலை 1902 இல் சுவாமி விவேகானந்தர் இறந்தார், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜாம்செட்ஜி இறந்தார், அவர்கள் இறந்து 5 ஆண்டுகள் கழித்து டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் 1909 இல் பிறந்தது மற்றும் 1911 இல் இந்திய அறிவியல் நிறுவனம் (ஐ.ஐ.எஸ்.சி) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அறிவியலும் ஆன்மீகமும் செழித்து விளங்கிய பூமி இந்தியா. இரண்டும் பல சமயங்களில் வெவ்வேறு திசைகளில் பயணிக்கிறது. ஆனால் இரண்டும் ஒன்றோடொன்று கட்டித்தழுவும் போது இந்தியா ஒருபடி முன்னேறுகிறது.

ஆகவே தான் விவேகானந்தர் – ஜேம்ஷெட்ஜி டாடா சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்படுகிறது. 

Get updates via WhatsApp

எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *